போஸ் மறைத்த ரகசியத்தை கண்டுபிடித்த சேது, பயத்தில் புலம்பும் ஈஸ்வரி - சின்ன மருமகள்

By subhashini · 26/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வி பாட்டை ஆப் செய்து விடுகிறார். உடனே குழந்தை வயிற்றில் உதைக்கிறது. பாட்டை மீண்டும் தனம் போடுகிறார். குழந்தை அமைதியாக இருக்கிறது, இன்னொரு பக்கம் சித்ரா, சேது உண்மை வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக ஜூஸில் மயக்கம் மருந்து கலந்து அதை ஈஸ்வரியின் அண்ணன் மகன் கையிலேயே கொடுத்து அனுப்பினார். சேது, அந்த ஜூசை குடித்துவிட்டு தலைசுற்றி ரூமில் விழுந்து விட்டார். அப்போது கருப்பசாமி வீட்டிற்குள் வருகிறது. கருப்புசாமி சேதுவின் முகத்தின் முன்பு கத்துகிறது. அதைக் கேட்டு சேதுவும் எழுந்து விட்டார்.

மலர் மேற்கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக டுடோரியல் கல்லூரியில் பீஸ் கட்டி அட்மிஷன் போட்டு இருந்தார். ராஜாங்கம், இதைப்பற்றி வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொன்னார். இதை கேட்டு மலர், தமிழ் இருவருமே சந்தோஷப்பட்டார்கள். எமோஷனலாக மலர், ராஜாங்கம் காலில் விழுந்து நன்றி சொன்னார். இன்னொரு பக்கம் காவியா திருமணத்தை நிறுத்தி விடுவாளோ? என்ற பயத்திலேயே ஈஸ்வரி புலம்பி கொண்டிருந்தார். கோபம் தாங்க முடியாமல் ஈஸ்வரி, போஸை அடி வெளுத்து வாங்குகிறார்.

சின்ன மருமகள் சீரியல்:

இன்னொரு பக்கம் காவியா, தன்னை ஏமாற்றியதால் போஸின் மீது கடும் கோபத்தில் இருந்தார். அதோடு கல்யாணத்தை இப்போது நிறுத்த வேண்டாம் மனமேடையில் நிறுத்தி மொத்த சபையின் முன்பு போஸை அவமானப்படுத்த வேண்டும் என்றெல்லாம் யோசித்தார். இன்னொரு பக்கம் மலர், படிக்கப் போவதால் மருதாணி அரைத்து எல்லோரும் வைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது தமிழ், தன் கணவருடன் சேர்ந்து மருதாணி வைத்ததெல்லாம் நினைத்து பார்த்து சந்தோஷப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டில் போஸின் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது. எல்லோருமே ஒவ்வொரு வேலையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருக்கிறார்கள். மலர், தன்னுடைய முதல் நாள் டுடோரியல் வகுப்பிற்கு செல்ல தயாராகிறார். தமிழ்செல்வி, வாழ்த்துக்கள் சொல்கிறாள்.. இன்னொரு பக்கம் சேது, வண்டு கடிக்கு மருந்து கண்டுபிடித்த கிராமத்திற்கு சென்று விசாரிக்கிறார். அப்போது அங்கிருந்த ஒரு சித்தர், அவரின் மகள் இருவரும் போஸ், தமிழின் தலையில் அடித்து மருந்தை எடுத்துக்கொண்டு போன விஷயத்தை சொல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

இதைக்கேட்டு சேதுவிற்கு ஷாக் ஆகிறது. பின் சேது, போஸ்- தமிழ் புகைப்படத்தை காண்பித்து அவர்களா என்று உறுதி செய்து கொள்கிறார். இன்னொரு பக்கம் கல்யாணம் நடக்குமா? நடக்காதா? என்ற பயத்தில் போஸ் தயாராகி இருக்கிறார். ஈஸ்வரியும் புலம்பி கொண்டு இருக்கிறார். அப்போது சாவித்ரி, தாமரை இருவரும் போஸை வெறுப்பேற்றுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full