தாமரைக்கு ரூட்டு விடும் போஸ், தமிழ் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியான சேது - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காவியா, உடனடியாக ஜூஸ் கடைக்கு வர சொன்னார். இதனால் போஸ், துண்ட காணோம், துணியை காணோம் என்று உளுந்து அடித்துக் கொண்டு ஓடினார். பின் போன இடத்தில் காவியா, கண்களில் மட்டும் தான் பேசணும். எனக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கணும் என்றெல்லாம் நிறைய கண்டிஷன் போட்டார். அதற்குப்பின் சேது, போஸ் பொண்டாட்டி தாசன் ஆக மாறிக்கொண்டு இருக்கிறார் என்றெல்லாம் கிண்டல் செய்தார். இதை கேட்ட தமிழ், ஒரு காலத்தில் நீங்களும் பொண்டாட்டி தாசன் ஆக இருந்தவர் தான் என்று சொல்வதால் பிளாஷ் பேக்கை காண்பித்தார்கள்.
தமிழ்- சேது இருவருமே தங்களுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி எல்லாம் நினைத்து பார்த்தார்கள். அதற்குப்பின் கருப்பன் போன் செய்து சேதுவை வரவைத்தார். பின் சேது, போஸ் கருப்பன் எல்லோருமே நன்றாக குடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சேது, வண்டு கடிக்கு மருந்து எடுத்து வந்த விஷயத்தைப் பற்றி சொன்னார். பின் போஸ் வாயில் உண்மையை வரவைக்க ஒரு பொய்யான கதையை சொன்னார். இதை கேட்டு போஸ், நானும் நீங்க சொன்னது போல் பொடியை தூவி செடியிலிருந்து மருந்தை எடுத்து வந்தேன் என்றெல்லாம் பொய் சொன்னார்.
சின்ன மருமகள் சீரியல்:
இதை கேட்டு சேதுவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பின் போஸ் மருந்தை எடுத்து வரவில்லை என்ற விஷயம் சேதுவிற்கு தெரிந்து விட்டது. அதற்குப்பின் தமிழை சந்தித்த சேது, மருந்து எடுத்துட்டு வர ரெண்டு பேரும் தான் போனோம். ஆனால், நான் வரும்போது நீ தலையில் அடிபட்டு மயங்கி விழுந்து கிடந்தாய். நீ மருந்து எடுத்தாயா? உனக்கு என்ன நடந்தது? என்றார். தமிழ் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ், நான் மருந்தை எடுத்து வந்தது உண்மை. ஆனால், என் தலையில் யாரோ பின்னாடி அடித்தது போல இருந்தது. போஸ் அடித்தானா? என்று எனக்கு தெரியாது. அதற்கு பிறகு தான் நீங்கள் என்னை ஹாஸ்பிடல் கொண்டு வந்து சேர்த்தீர்கள் என்று சொல்கிறார. இதெல்லாம் போஸ் தான் செய்தார் என்று சேதுவுக்கு தெரிந்து விடுகிறது. இன்னொரு பக்கம் போஸ் நிச்சயதார்த்தத்திற்காக வீட்டிற்கு துணி, நகைகளை எல்லாம் வர வைத்து எடுக்கிறார்கள். ஈஸ்வரி, அவருடைய மகளும் ரொம்ப காஸ்ட்லியான துணிகளை வாங்குகிறார்கள். வழக்கம் போல சாவித்திரிக்கும் தாமரைக்கும் ரொம்ப குறைவான விலையில் புடவையை கொடுப்பதால் அவர்கள் இருவருமே கோபப்பட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் தாமரை குளித்துவிட்டு தயாராகிக் கொண்டிருக்கிறார். இதை கதவு வழியாக போஸ் பார்க்கிறார். இதை கவனித்த தாமரை கதவை திறக்க, போஸ் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். அது மட்டும் இல்லாமல் தாமரைக்கு போஸ் ரூட் விடுகிறார். இதை அறிந்து கொண்ட தாமரை, அம்மா இல்லாத நேரமாக வாருங்கள் என்று சொல்லி அனுப்புகிறார். பின் போசை எப்படியாவது சிக்க வைத்து கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்றெல்லாம் தாமரை திட்டம் போடுகிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, இந்த கல்யாணத்தில் எந்த பிரச்சினையும் வர கூடாது, ஒழுக்கமாக இரு, மாட்டிக் கொள்ளாதே என்று போஸுக்கு அறிவுரை சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.