குழந்தையின் அசைவை கண்டு நெகிழும் சேது, ஆனந்த கண்ணீரில் தமிழ்செல்வி - சின்ன மருமகள்

By subhashini · 5/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கல்லூரி ஆசிரியர், உங்கள் மருமகள் தமிழ்ச்செல்வி தான் முதல் மதிப்பெண் எடுத்திருக்கிறார் என்று சொன்னவுடன் ராஜாங்கம் எதுவுமே சொல்லலே அமைதியாக இருந்தார். அப்பத்தா மட்டும் ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் மலர் பத்தாம் வகுப்பில் அதிகமாக மதிப்பெண் பெற்றிருப்பதை அறிந்த தமிழ், நீங்கள் மேற்கொண்டு படிக்கணும் என்று சொன்னார். அதற்கு மலர், எனக்கு படிக்கணும் என்று ரொம்ப ஆசை இருந்தது, ஆனால், முடியவில்லை.

எனக்கு வக்கீல் ஆகணும் என்றெல்லாம் சொன்னார். அதற்கு தமிழ் செல்வி, நான் உங்களுக்கு உதவி செய்கிறேன், தயவுசெய்து நீங்கள் மேற்கொண்டு படியுங்கள் என்று உத்வேகம் கொடுத்தார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி என் மகனை மேனேஜரில் இருந்து முதலாளி ஆக்க முடியாதா? என்றெல்லாம் கேட்டார். இதைக் கேட்டு ராஜாங்கம், திருமணத்திற்கு முன்பு உன் மகனுக்கு ஒரு கோடி ரூபாயில் செக் தருகிறேன். அதை வைத்து சொந்தமாக தொழில் செய்துகொள் என்றார். ஈஸ்வரி சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். போஸ், தமிழ்செல்வியை சந்தித்து ராஜாங்கம் ஒரு கோடி ரூபாய் தருவதாக சொன்னதை சொல்கிறார்.

சின்ன மருமகள் சீரியல்:

இதை கேட்ட தமிழ்செல்வி, நீ உன்னுடைய ஆணவத்தாலே அழியப் போகிறாய். என்னை அடித்து விட்டு தான் நீ மருந்து கொண்டு வந்த விஷயம் எனக்கு தெரியும். இருந்தாலும் நான் வீட்டில் சொல்லவில்லை. உனக்கான அழிவு காலம் நெருங்கி விட்டது என்றெல்லாம் சொல்கிறார். அதற்கு போஸ், நான் கல்யாணம் செய்து கோடீஸ்வரனாக தான் வாழ போகிறேன் என்கிறார். அதற்கு தமிழ், உனக்கு அந்த கல்யாணமும் நடக்காது, ஒரு கோடி ரூபாய் பணமும் கிடைக்காது என்றெல்லாம் சவால் விடுகிறார். அதற்குப்பின் போஸ், ராஜாங்கம் கொடுத்த ஒரு கோடி ரூபாய் பணத்தை பற்றி காவியா விடம் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

காவியா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கிண்டல் செய்கிறார். அதற்குப்பின் காவியா அனுப்பிய நர்ஸ் சில டெஸ்ட்களை எடுக்கிறார்கள். எச்ஐவி, எயிட்ஸ் இருக்கிறதா? என்றெல்லாம் சோதனை செய்ய சொல்லி இருக்கிறார் காவியா என்று சொன்னவுடன் ஈஸ்வரிக்கு ஒன்றுமே புரியவில்லை. இன்னொரு பக்கம் இடி மின்னல் இருப்பதால் தமிழ்செல்வி, சேதுவை உள்ளே தூங்க சொல்கிறார். பின் தமிழ்-சேது இருவரும் நெருக்கமாக இருப்பது போல கனவு காண்கிறார்கள். பின் டெஸ்ட் முடிந்ததுமே காவியா போன் செய்து, உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இருந்தாலும் நீங்கள் அதிகமாக குடிப்பது போல தெரிகிறது என்று கேட்டவுடன் போஸ் தடுமாறி நிற்கிறார்.

https://www.youtube.com/watch?v=yrGLwkArnA8

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் தமிழ்ச்செல்வி, தன்னுடைய வயிற்றில் குழந்தை அசைவதாக சொல்கிறார். இதனால் தனம், மலர் இருவருமே குழந்தையின் அசைவை வயிற்றில் கை வைத்து பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். இதை பார்த்த சேதுவுக்கும் குழந்தையின் அசைவை பார்க்க ஆசைப்படுகிறார். பின் சேது, தமிழின் வயிற்றில் கைவைத்து பார்க்கிறார். குழந்தை உதைக்கிறது. பின் காது வைத்து பார்க்கிறார். இதையெல்லாம் தமிழ் தூங்குவது போல் நடித்துக் கொண்டே பார்க்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full