திருமண நாளுக்கு மும்முரமாக தயாராகும் தமிழ்-சேது, ராஜாங்கம் கொடுக்கும் சீர் வரிசை - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சாவித்திரி, நம்முடைய பக்கம் இரண்டு ஜோடிகளை தயார் செய்து அந்த பணத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் திட்டம் போட்டார்கள். இதை காவியா கேட்டு விட்டார். இன்னொரு பக்கம் சேது, திருமண நாளிற்க்காக தமிழுக்கு பரிசு கொடுப்பதற்காக ரூமில் காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து தமிழ்ச்செல்வி, உள்ளே வந்து விட்டார். பின் சேது, புது புடவை ஒன்று வாங்கி கொடுத்தார். அதை பார்த்து தமிழ்ச்செல்வி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்.
சேது, புடவை நகை வளையல் என எல்லாமே திருமண நாளுக்காக வாங்கி தந்தார். தமிழ்செல்வி எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார். இதனால் சேதுவிற்கு ஒரே சந்தோசம். இன்னொரு பக்கம் போஸ், செங்கல் சூளைக்கு சென்று அங்கிருக்கும் ஒரு நபரை பணம் கொடுத்து கரெக்ட் பண்ணி கொண்டார். பின் சேது, நான் வேலை செய்ய மாட்டேன். எம்எல்ஏ வரும்போது மட்டும் எனக்கு சிக்னல் கொடு என்று சொல்வதால் அந்த நபருமே ஒத்துக்கொண்டார். பின் போஸ் ஜாலியாக போன் பார்த்துக் கொண்டிருந்தார். எம்எல்ஏ வந்தவுடன் வேலை செய்வது போல நடித்து பாசாங்கு செய்தார்.
சின்ன மருமகள்:
இன்னொரு பக்கம் மலர் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் போது காவியா காரை நிறுத்தி மலரிடம் பேசி இருந்தார். மலர்- காவியா இருவருமே ரொம்ப ஜாலியாக நண்பர்கள் போல பேசி கொண்டார்கள். பின் இருவரும் வீட்டிற்கு சேர்ந்து வருவதை பார்த்து தமிழுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்போது காவியா, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று சொல்வதால் தமிழ்ச்செல்வி ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் 12 மணி ஆவதால் சேது, தமிழ்செல்வியை எழுப்பி திருமண நாள் வாழ்த்துக்களை சொல்லி கேக் வெட்ட அழைத்தார். வீட்டில் எல்லோருமே தமிழ் செல்வி-சேது திருமண நாளை கொண்டாடினார்கள். வழக்கம் போல ஈஸ்வரி- சாவித்திரி இருவரும் பயங்கர கடுப்பில் இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேது, தன்னுடைய முதல் திருமண நாளை நினைத்து பார்த்து சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி தயாராகுவதற்காக வருகிறார். உடனே சேது, இன்று முழுவதும் உனக்கு என்ன தேவையோ அது நான் தான் செய்வேன் என்று தமிழ் செல்விக்கு தலை துவட்டி விடுவது, நகை, புடவையை போடுவது என்று எல்லா வேலையும் செய்கிறார். தமிழ் செல்வி எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறார். வீட்டில் எல்லாம் தமிழ்-சேதுவின் திருமண நாளுக்கு தடபுடலாக ஏற்பாடுகள் நடக்கிறது.
சீரியல் ட்ராக்:
பின் தமிழ்-சேது இருவரும் ஜோடியாக வருகிறார்கள். அதை பார்த்து அப்பத்தா-ராஜாங்கம் சந்தோசப்படுகிறார். பின் பத்து ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்க எல்லோரும் கோவிலுக்கு கிளம்புகிறார்கள். கோயிலில் திருமண ஜோடிகளுக்கு கொடுக்கும் சீர்வரிசியை பார்த்து ஈஸ்வரி, சாவித்திரி இருவரும் வாயை பிளக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.