தேர்வு எழுத தமிழை கையில் தூக்கி செல்லும் சேது, அப்பத்தா அட்ராசிட்டி - விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வியால் நடக்க முடியாதால் சேது அவருக்கு எல்லா உதவிகளையும் செய்தார். இதனால் தமிழ்ச்செல்வி மனதுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டார். இன்னொரு பக்கம் கட்சி தலைவரின் மனைவி ராஜாங்கம் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவர், பெண்களின் நலனுக்காக சில திட்டங்களை கட்சித் தலைவர் கொண்டு வந்திருக்கிறார். உங்களுடைய வீட்டில் இருந்து ஆரம்பிக்கலாம். நீங்கள் தமிழ்ச்செல்வியை கல்லூரிக்கு அழைத்து செல்லுங்கள் என்றார்.
இதை கேட்டு ராஜங்கத்தால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் தமிழ், கல்லூரிக்கு எப்படி போவது என்று புலம்பி கொண்டு இருந்தார். பின் ராஜாங்கம், கட்சி தலைவரின் மனைவி எல்லோருமே சேது- தமிழ் இருக்கும் இடத்திற்கு வருந்தார். அப்போது தமிழை கல்லூரிக்கு அழைத்து செல்லும் விஷயமாக சேதுவிடம் பேசினார்கள். சேதுவால் எதுவும் சொல்ல முடியாமல் ஒத்துக் கொண்டார். இதைக் கேட்டு தமிழ் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.
சின்ன மருமகள் சீரியல்:
நேற்று எபிசோட்டில் தன்னை கல்லூரிக்கு அழைத்து செல்ல சேது ஒத்துக் கொண்டதால் தமிழ்ச்செல்வி ரொம்பவே சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் வேலையை முடித்து வந்த ஆறுமுகத்திடம் போஸ் பேசி இருந்தார். பின் இருவரும் நன்றாக பேசிக் கொண்டிருக்கும்போதே சரக்கு அடிக்க போஸ் ஆறுமுகத்தை கூப்பிட்டார். ஆறுமுகம் வேண்டாம் என்று தடுத்துமே போஸ் கேட்கவில்லை. வழி இல்லாமல் ஆறுமுகம்- போஸ் குடித்தார்கள். தன் வழிக்கு ஆறுமுகத்தை கொண்டு வர வேண்டும் என்று போஸ் தேவையில்லாத வேலை எல்லாம் செய்தார். அதற்குப்பின் வீட்டில் கண்மணி ஆறுமுகத்துக்காக காத்துக் கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்:
அப்போது ஆறுமுகம் குடித்து வந்ததை அறிந்த கண்மணி ரொம்பவே கோபப்பட்டு திட்டினார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார். மழை வந்ததால் சேது உள்ளே தூங்கினார். லைட் எரிவதால் சேது ஆப் செய்து விட்டார். உடனே தமிழ்ச்செல்வி சத்தமாக கத்தி கத்தி படித்தார். மறுநாள் காலையில் தமிழ்ச்செல்வி தேர்வு எழுதப் போவதால் youtube சேனல் வந்து வீடியோ எடுத்தார்கள். அப்போது அப்பத்தா வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்ச்செல்வியை தேர்வுக்கு அழைத்து செல்வதற்காக எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். சேதுக்கு விருப்பமில்லை என்றாலும் தன் அப்பாவின் கட்சிக்காக தமிழ்செல்வியை தூக்கிக்கொண்டு தேர்வு எழுத செல்கிறார். பின் காரில் வரும் வழியில் தமிழ்ச்செல்விக்கு சாப்பாடு ஊட்டி விடுவது, அவளை கவனமாக கவனித்துக் கொள்வது என்றெல்லாம் சேது செய்கிறார். இதையெல்லாம் பார்த்து அப்பத்தா சந்தோசப்படுகிறார். தமிழ்ச்செல்வி, சேதுவை பற்றி ரொம்ப பெருமையாக பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.