தமிழுக்கு சேது செய்து கொடுத்த சத்யம், காமேஷுக்கு ரூட் விடும் தாமரை - பரபரப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, தாமரையை தன் வலையில் சிக்க வைக்க காமேஷ் பிச்சையை பற்றி ஒரு பொய்யான கட்டுரையை பேப்பரில் வரவைத்தார். இதை பார்த்து தாமரை ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் சாவித்ரி, தாமரை இருவரும் அந்த கட்டுரையை படித்தார்கள். பின் தாமரை, காமேஷை எப்படியாவது கல்யாணம் செய்து கொள்ளணும் என்று சந்தோஷப்பட்டு அவருடன் கனவிலேயே டூயட் பாடினார். அதற்கு பின் ஹாஸ்பிடலுக்கு போகும் விஷயத்தை அப்பத்தா, தமிழ்ச்செல்வி சொன்னார். சேது, நானும் ஹாஸ்பிடலுக்கு வருகிறேன் என்றார்.
சாமியின் முன்பு அப்பத்தா வெள்ளத்தாய், சேது, தமிழ் இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்து விட்டார்கள். இனிமேல் இந்த குழந்தை விஷயத்தை மறைக்க முடியாது. உண்மையை சொல்லட்டுமா? என்று சாமியின் முன்பு பூ போட்டு பார்த்தார். ஆனால், அதில் சொல்ல வேண்டாம் என்று வந்தது. அதற்குப்பின் தமிழ்ச்செல்வியின் ஸ்கேனிற்காக சேது, வெள்ளத்தாய் இருவரும் ஹாஸ்பிடலுக்கு போனார்கள். இன்னொரு பக்கம் டிவியில் காமேஷ் பிச்சையை பற்றி ஒரு நியூஸ் வருகிறது. அதை பார்த்து தாமரை வாயை பிளந்து கொண்டு பார்த்திருந்தார்.
சின்ன மருமகள்:
தன்னுடைய வலையில் தாமரை சிக்கியதால் ஈஸ்வரி ரொம்பவே சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம்
போஸ் மாலை போட்டு இருப்பதால் விரதம் இருக்கணும் என்று காவியா சொல்கிறார். போஸ் தன்னால் முடியாது என்றார். இருந்தாலும் காவியா கேட்கவில்லை. போஸை விரதம் இருக்க வைத்தார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் தமிழுக்கு ஸ்கேன் செய்தார்கள். அப்போது ஸ்கேனில் இரட்டை குழந்தை இருப்பதை சேது பார்த்து விட்டார். அதை சேது, அப்பத்தா வெள்ளத்தாய் இடம் சொல்ல வந்தார். உடனே வெள்ளத்தாய், வாயை பொத்தி வெளியே அழைத்து சென்று நடந்த உண்மை எல்லாம் சேதுவிடம் சொன்னார். இதை கேட்டு சேது ரொம்ப சந்தோஷப்பட்டு தமிழை பார்த்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேது, ஹாஸ்பிடலில் ஸ்கேனில் குழந்தையை பார்த்ததை பற்றி வீட்டில் சொல்லி சந்தோஷப்படுகிறார். ஆனால், இரட்டை குழந்தை என்பதை மட்டும் சொல்லவில்லை. ராஜாங்கம், சீக்கிரமாகவே தமிழுக்கு வளைகாப்பு ஏற்பாடு செய்யலாம் என்று சொல்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள்.இன்னொரு பக்கம் காமேஸ் பிச்சையை எப்படியாவது தன் வலையில் விழ வைக்க வேண்டும் என்று தாமரை திட்டம் போடுகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் தாமரை, காமேஷ் பிச்சை இருவரும் போனில் நன்றாக பேசுகிறார். அப்போது தாமரையும் நிறைய பொய்களாக சொல்லி காமேஷிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் சேது, தமிழை மீண்டும் கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளுகிறார். தமிழ் எவ்வளவு சொல்லியும் சேது கேட்கவில்லை. கடைசியில் இது தமிழ் கண்ட கனவு. அதற்குப்பின் சேதுவை சந்தித்த தமிழ், இப்படியே என்னை பாசமாக பார்த்துக் கொள்வீர்களா? என்னை விட்டு போக மாட்டீர்கள் தானே, எனக்கு சத்தியம் செய்யுங்கள் என்று சொல்கிறார். சேதுவும் சத்தியம் செய்து கொடுக்கிறார்.