தமிழ்செல்விக்கு சேது கொடுத்த வாக்குறுதி, பரிகாரம் செய்ய ரெடியாகும் ராஜாங்கம் குடும்பம் - சின்ன மருமகள்

By subhashini · 27/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காமேஸ் பிச்சை முதலிரவு நடந்தது போல செட்டப் செய்து சாவித்திரியை வெறுப்பேற்றுகிறார். இதனால் கோபப்பட்ட சாவித்திரி, தாமரை இடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். தாமரை, அப்படி எதுவும் நடக்கவில்லை என்றார். பின் காமேஷ் பிச்சை அவர்கள் சாப்பிட சாப்பாடு, துணிக்கு பணம் கொடுத்துவிட்டு தன்னுடைய தொழிலுக்கு சென்றார். இதனால் சாவித்திரி- தாமரை இருவரும் கொந்தளித்தார்கள். பின் ராஜாங்கம், அப்பத்தா இருவரும் ஒரு சாமியாரை சந்தித்து தாங்கள் கண்ட கனவை பற்றி சொன்னார்கள். அதற்கு அவர், இதெல்லாம் விதியின் விளையாட்டு. எல்லாத்துக்கும் பரிகாரம் இருக்கிறது என்று சோலியை உருட்டுகிறார்.

சாமியார், நீங்கள் முருகன் மீது பாரத்தை இறக்கி வைத்துவிட்டு காவடி எடுங்கள். சூரிய கிரகணம் முடிவதற்குள் அந்த காவடி எடுத்து முடிக்க வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு பிரச்சனை வரும் என்றார். இதனால் ராஜாங்கம், அப்பத்தா இருவரும் சரி என்றார்கள். பின் வீட்டிற்கு வந்த ராஜாங்கம், சாமியார் சொன்ன பரிகாரத்தை பற்றி சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருமே பரிகாரம் செய்வதற்கு ஒத்துக்கொண்டார்கள். இன்னொரு பக்கம் பசி தாங்க முடியாமல் தாமரை- சாவித்ரி இருவரும் காமேஷ் பிச்சை கொண்டு வந்து சாப்பாட்டை சாப்பிட்டு விட்டார்கள்.

சின்ன மருமகள்:

அதற்குப் பின் காமேஷ் பிச்சை கொடுத்த பணத்தில் துணியை வாங்கி போட்டுக் கொண்டார்கள்.
அந்த சமயம் பார்த்து அந்த வீட்டின் ஓனர் வாடகை கட்டவில்லை என்ற பிரச்சனை செய்ததால் தாமரை- சாவித்திரி இருவருமே காமேஸ் இருக்கும் கோயிலுக்கு வந்து விட்டார்கள். பின் தாமரை நடந்ததை சொல்லி பிச்சையிடம் சண்டை போட்டார். காமேஸ், நான் டைம் வாங்கிக் கொண்டு வருகிறேன். இங்கே உட்காரு என்று பிச்சை எடுக்கும் இடத்தில் உட்கார வைத்து விட்டார். தாமரை- சாவித்ரி இருவரும் பிச்சைக்காரர்கள் என்று கோயிலுக்கு வருபவர்கள் காசு போட்டார்கள். இதனால் இருவருமே கத்தி கலாட்டா செய்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜாங்கம் காவடி எடுக்க சொல்லி பரிகாரம் செய்வதற்கான காரணத்தை தெரிந்து கொள்வதற்காக ஈஸ்வரி, மோகனாவிடம் விசாரிக்கிறார். மோகனா முதலில் தயங்கினாலும் பின் உண்மையை சொல்லி விடுகிறார். தமிழை வெளியே துரத்துவது போல் கனவு கண்டதால் தான் இந்த பரிகாரம் என்று தெரிந்ததும் ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் சாவித்திரி- தாமரை இருவரும் எப்படி ஆவது ராஜாங்கம் வீட்டிற்குள் வரவேண்டும் என்று புலம்பி கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது காமேஷ் பிச்சை, என் ஒருவரால் எல்லோரும் சம்பாதிக்க முடியாது. நீங்கள் ஒவ்வொரு கோயிலில் உட்கார்ந்து பிச்சை எடுங்கள். அப்போதுதான் சாப்பிட முடியும் என்று சொல்வதால் இருவருக்குமே பயங்கர கோபம் வருகிறது. இன்னொரு பக்கம் சேது, தமிழுக்காக ஒரு பரிசு கொடுக்கிறார். அதில் சேது, எப்பவுமே தமிழை விட்டு பிரிய மாட்டேன் என்று சேது வாக்குறுதி எழுதியிருக்கிறார். அந்த பேப்பரில் சேது கையெழுத்து போட்டு இருக்கிறார். பின் தமிழ்ச்செல்வி அதில் கையெழுத்து போடுகிறார். இருவரும் ரொம்பவே சந்தோஷப்படுகிறார்கள். அதற்குப்பின் காவடி எடுப்பதற்கு ராஜாங்கத்தின் குடும்பத்தில் உள்ள எல்லோருமே தயாராகி வருகிறார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே பரிகாரத்தை செய்ய கிளம்புகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full