மனதார மன்னிப்பு கேட்கும் சேது, கோபத்தில் தமிழ்செல்வி சொன்ன வார்த்தை - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் நல்லபடியாக வள்ளி திருமணம் நாடகம் முடிந்து அந்த மாலையும் சேது- தமிழ் கழுத்தில் விழுந்து விடுகிறது. பின் மூன்று பரிகாரங்களும் நல்லபடியாக முடிந்ததால் ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே வீட்டிற்கு போனார்கள். பின் வீட்டில் தமிழ்-சேது இருவருக்கும் முதலிரவு செட் அப் செய்து இருந்தார்கள். அதை பார்த்து தமிழ் பயங்கரமாக கோபப்பட்டார். பின் சேது, தான் செய்த தவறை உணர்ந்து ரொம்ப எமோஷனலாக அழுது பேசி மன்னிப்பு கேட்டார். ஆனால், தமிழ் ஏற்றுக்கொள்ளவில்லை. சேது சொன்ன வார்த்தை எல்லாம் நினைத்து கோபப்பட்டார்.
போஸ் கிச்சனில் கஷ்டப்படுகிறார் என்று அவருடைய அம்மா, அக்கா தூங்குவதற்கு தேவையான பொருட்களை எல்லாம் ஏற்பாடு செய்து தந்தார்கள். இதை பார்த்த காவியா
கோபப்பட்டு போஸ் அம்மாவை திட்டி விட்டு பொருட்களை எல்லாம் எடுத்து சென்றார். இன்னொரு பக்கம் அப்பத்தா, சேது உடன் சேர்ந்து வாழ்வதை பற்றி பேசிக் கொண்டிருந்தார். கோபப்பட்ட தமிழ், நீங்கள் அன்னதானம் போடுவது, வள்ளி நாடகம் நடத்துவது, இலவச திருமணம் செய்வதன் மூலம் என்னுடைய மனம் மாறவில்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வது நடக்காத ஒன்று. தேவையில்லாமல் கற்பனை செய்யாதீர்கள் என்றார்.
சின்ன மருமகள்:
சேது, ராஜாங்கம் இருவருமே தமிழ்செல்வி சொன்ன வார்த்தையை கேட்டு ரொம்பவே வருத்தப்பட்டார்கள். பின் சேது, தமிழ்செல்வியின் மனதை மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்று தனத்திடம் கேட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் போஸ், வேலை செய்வது போல் நடித்து பாசாங்கு செய்து கொண்டிருந்தார். இது எல்லாம் காவியாவின் அப்பா நம்பி காவியாவிற்கு ஃபோன் செய்து சொன்னார்.
இன்னொரு பக்கம் தன்னை கிண்டலாக பேசிய தனத்தை, ஐஸ்வர்யா திட்டி அடித்தார். கோபத்தில் தனம், ஐஸ்வர்யாவை அடிக்க போகும்போது சித்ரா, தனத்தை மோசமாக பேசி அனுப்பி விட்டார். இது எல்லாம் தனம் தன்னுடைய அக்காவிடம் சொல்லி அழுதார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ், எதற்காக என்னுடைய தங்கையை அடித்தாய். நீங்கள் ரெண்டு பேரும் பேசியது தவறுதான். முதலில் மன்னிப்பு கேள் என்கிறார். ஐஸ்வர்யா முடியாது என்று திமிராக பேசுகிறார். கோபத்தில் தமிழ், ஐஸ்வர்யாவை அடித்து விடுகிறார். இன்னொரு பக்கம் சேது, தமிழ் இடம் மன்னிப்பு கேட்பதற்காக ஒரு புடவை முழுக்க சாரி என்று எழுதி கொண்டு வந்து கொடுக்கிறார். அதை தமிழ்செல்வியும் கட்டிக் கொண்டு வந்து நிற்கிறார். சேது, என்னை மன்னித்துவிடு என்று சொல்கிறார். கோபப்பட்ட தமிழ், ஊர் மத்தியில் குடித்துவிட்டு என்னையும் என்னுடைய குழந்தையையும் கேவலமாக நீங்கள் பேசுவீர்கள்.
சீரியல் ட்ராக்:
இப்போ நாலு செவுத்துக்குள் நின்று சாரி என்று சொன்னால் நான் மன்னித்து விடணுமா? மன்னிக்க மாட்டேன் என்கிறார். இன்னொரு பக்கம் போஸ் திருந்தி விட்டான் என்று காவியாவின் அம்மா போன் செய்து ஈஸ்வரிடம் பேசுகிறார். பின் ஈஸ்வரி, காவியாவின் அம்மா எல்லோருமே காவியாவை மனமிரங்கி போஸ் உடன் சேர்ந்து வாழ சொல்கிறார்கள். ஆனால், காவியா மறுக்கிறார். அதற்கு பின் ஐஸ்வர்யா, தமிழ் தன்னிடம் தகராறு செய்த விஷயத்தை ஈஸ்வரியிடம் சொல்லி புலம்புகிறார். இன்னொரு பக்கம் சேது, தமிழ் சொன்ன விஷயத்தை சொல்கிறார். கருப்பன், நீ பொதுவெளியில் மன்னிப்பு கேள். தமிழ் மனம் மாறும் என்கிறார். உடனே சேது, இதற்கு நானே ஒரு முடிவு எடுக்கிறேன் என்று சொல்கிறார்.