ஒருவழியாக தமிழ் செல்விக்கு குழந்தை பிறந்தாச்சு, ஏற்றுக்கொள்வாரா சேது? சின்ன மருமகள்

By subhashini · 25/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்செல்வியும் தன் கழுத்தில் இருக்கும் தாலியை தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.
அதற்குப் பின் சேது- ஐஸ்வர்யா நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதை பார்த்து அப்பத்தா, இவ்வளவு அநியாயம் செய்வீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை. இனி உங்கள் குடும்பத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் உங்களை அத்து விடுகிறேன் என்று அங்கு இருந்து கிளம்பி போனார். ஈஸ்வரி, அப்பத்தாவ அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றார். தமிழ்செல்வியின் வீட்டிற்கு வந்த அப்பத்தா, கோவிலில் நடந்ததை எல்லாம் சொல்லி எமோஷனல் ஆக அழுதார். தமிழ்ச்செல்வி, அப்பத்தாவிற்கு ஆறுதல் சொன்னார்.

சாவித்திரி, தாமரை இருவரும் திருமணத்தை நிறுத்துவதற்காக சேதுவிடம் பேசி இருந்தார்கள். இதைக்கேட்ட ஈஸ்வரி அந்த இடத்திற்கு வந்து சேதுபதியை அங்கிருந்து அனுப்பி விட்டார். அதற்குப்பின் ரூமில் சேது தனியாக இருப்பதை அறிந்த ஐசு ரொம்ப அன்பாகவும் அக்கறையாகவும் பேசி இருந்தார். ஆனால் சேதுவிற்கு அதில் விருப்பமே இல்லை. சேதுவுக்கும் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று யோசித்து கொண்டு இருந்தார். ஐசு நெருங்கி வரும் போதெல்லாம் சேது திட்டி அனுப்பி விட்டார். இதைப் பற்றி ஐசு, ஈஸ்வரிடம் சொல்லிக் புலம்பினார்.

சின்ன மருமகள்:

இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி தன்னுடைய படிப்பு விஷயத்தில் மட்டும் தான் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். அப்பத்தா வீட்டில் உள்ள எல்லோருமே தமிழ் வாழ்க்கையை பற்றி எடுத்துச் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால், தமிழ் செல்வி அதை கேட்பதாகவே இல்லை. அதற்குப்பின் சேது, இந்த திருமணத்தை நிறுத்த முடியுமா? இப்போதைக்கு திருமணம் வேண்டாம். ஐசுவின் அப்பா அம்மாவிடம் எடுத்து சொல்லி புரிய வையுங்கள் என்றார். ஈஸ்வரி, அதெல்லாம் முடியாது. எல்லாம் ஏற்பாடுகளும் நடந்துவிட்டது. நாளை உனக்கும் ஐசுவுக்கும் திருமணம் என்றார். இதை கேட்ட ஐசு, சேது காலில் விழுந்து தயவுசெய்து என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கதறி அழுதார். பின் சாவித்திரி, ஐஸ்வர்யாவை கடத்த திட்டம் போட்டார்.

சீரியல் ட்ராக்:

சேது ரவுடிகளை எல்லாம் அடித்துப் போட்டுவிட்டு தமிழ்ச்செல்வியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார். போகும் வழியிலேயே அப்பத்தாவிற்கு ஃபோன் செய்து நடந்ததை எல்லாம் சேது சொல்கிறார். அப்பத்தா, தமிழின் அப்பா அம்மா எல்லோருமே பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்புகிறார்கள். இன்னொரு பக்கம் மண்டபத்திற்கு சென்ற ஐசு,சேது-தமிழை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று இருக்கும் விஷயத்தை சொல்கிறார். இதைக் கேட்டு ஈஸ்வரிக்கு பயங்கர கடுப்பாகிறது. சாவித்திரி- தாமரை இருவரும் சந்தோஷப்படுகிறார்கள். பின் ஹாஸ்பிடலில் தமிழ் உறவினர்கள் வரும் வரை எதுவும் செய்ய முடியாது என்று டாக்டர் சொல்லிவிடுகிறார். சேது, எதுவுமே பேச முடியாமல் அமைதியாக நிற்கிறார்.

https://www.youtube.com/watch?v=KJ0VrjxV4vE

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் புரோமோவில் ஹாஸ்பிடலில் தமிழ் செல்வி பிரசவ வலிக்காக துடித்துக் கொண்டிருக்கிறார். பிரசவ வார்டில் தமிழ் உடன் சேதுவும் இருக்கிறார். நல்லபடியாக தமிழ்செல்விக்கு குழந்தை பிறந்துவிடுகிறது. குழந்தை வாங்கிய அப்பத்தா, உனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்கிறார். சேது எதுவுமே பேசாமல் அமைதியாகவே நிற்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full