காணாமல் போன குழந்தையை தேடி அலையும் சேது-தமிழ்செல்வி, அடுத்து என்ன? சின்ன மருமகள்
குழந்தையை தேடி அலையும் சேது-தமிழ்செல்வி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் குழந்தை அழுவதால் சேதுவின் மனமும் கஷ்டப்படுகிறது. ஆனால், சேது வீராப்பிற்காக குழந்தையை தூக்காமல் இருந்தார். குழந்தை அதிகமாக அழுது கொண்டிருந்ததால் மலர் ஓடி வந்து குழந்தையை தூக்கி விட்டார். சேது, குழந்தையை ஒழுங்காக பார்த்துக் கொள்ள முடியாதா? என்று மலர், கருப்பு இருவரையும் திட்டிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் ராஜாங்கம் குழந்தையை கொஞ்சி கொண்டிருந்தார். சேதுவிடம் கொடுத்து குழந்தையை கொஞ்சம் சொல்கிறார் ராஜாங்கம். சேது, என்னால் பழைய விஷயத்தை மறக்க முடியவில்லை. நான் குழந்தையை தூக்க மாட்டேன் என்று அங்கிருந்து சென்றார்.
இன்னொரு பக்கம் தமிழ்செல்வி, குழந்தையை ராஜாங்கம் வீட்டிலிருந்து எடுத்து வர வேண்டும் கிளம்புங்கள் என்றார். அதைக் கேட்டு அப்பத்தா, தமிழ்செல்வியின் பெற்றோர்கள் எல்லோரும் ஷாக் ஆனார்கள். தமிழ்செல்வி, இனிமேல் என் குழந்தையை அங்கு விட ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றார். அதற்கு பின் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக மேனகா, மலர், கருப்பு மூவரும் குழந்தையை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் சென்று விட்டார்கள். அங்கு குழந்தையை கடத்தும் கும்பல் சேதுவின் குழந்தையை யாருக்கும் தெரியாமல் கடத்தி விட்டார்கள்.
சின்ன மருமகள்:
குழந்தை காணாமல் போன விஷயத்தை அறிந்து கருப்பு, மேனகா எல்லோருமே பதறினார்கள். பின் கருப்பு, சேதுவிற்கு போன் செய்து நடந்ததை சொன்னார். சேது குழந்தை பாசத்தில் கத்துகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் சேது நடந்ததை சொன்னார். ராஜாங்கம் கவலைப்பட்டார். அப்போது சேது, இந்த இந்த வேலையை எல்லாம் தமிழ் செல்வி தான் செய்திருப்பாள் என்று தமிழ் செல்விக்கு போன் செய்தார். சேது, குழந்தை எங்கே? என்றார். தமிழ் செல்விக்கு ஒன்றுமே புரியவில்லை.
சீரியல் ட்ராக்:
சேது, நீயும் உன் அப்பாவும் சேர்ந்து ஏதாவது திட்டம் போட்டு இருந்தால் சும்மா விடமாட்டேன் என்று மிரட்டினார். குழந்தை காணாமல் போன விஷயத்தை அறிந்து தமிழ் செல்வி கதறி அழுதார். வீட்டில் உள்ள எல்லோருமே ஆறுதல் சொன்னார்கள். தமிழ் செல்வியால் ஏற்றுக்கொள்ளவில்லை. குழந்தை எனக்கு வேண்டும். எப்படியாவது என் குழந்தையை கொடுங்கள் என்று பதறிக் கொண்டிருந்தார். பின் ஹாஸ்பிடலில் சிசிடிவி கேமராவை போலீஸ் செக் பண்ணுகிறார்கள். அதில் ஒரு கிழவி குழந்தையை கடத்திக் கொண்டு போன விஷயம் தெரிகிறது. இதை அறிந்த சேது கொந்தளித்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் சேது, கருப்பு இருவருமே அந்த கிழவினுடைய புகைப்படத்தை எடுத்துக் கொண்டு குழந்தையை தேடி அலைகிறார்கள். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடல் வந்த தமிழ்ச்செல்வி நடந்ததை எல்லாம் தெரிந்து கொண்டு குழந்தையை தேடி அலைகிறார். ஒரு பக்கம் போலீசும் குழந்தையை தேடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருமே கஷ்டப்பட்டு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. மனம் உடைந்து போன தமிழ்ச்செல்வி வீட்டிற்கு வருகிறார். இனி குழந்தை கிடைக்குமா? இல்லையா? என்பதை வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.