தமிழ்செல்வியை தேடி அலையும் சேது குடும்பம், ஈஸ்வரியின் திட்டம் பலித்ததா? சின்ன மருமகள்

By subhashini · 6/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி தமிழை பழிவாங்க வேண்டும் என்று
தனக்குத் தெரிந்த உறவினருக்கு போன் செய்து பேசி இருந்தார். அப்போது ஈஸ்வரி, தமிழின் வளைகாப்பிற்காக ராஜாங்கம் வைர வேலை முருகருக்கு கொடுப்பதற்காக போக இருந்தார்கள். நீ அந்த வேலை திருடி விடு. உனக்கு எல்லா உதவியும் நான் செய்கிறேன் என்றார். அந்த நபரும் சம்மதிக்கிறார். இன்னொரு பக்கம் தமிழ்செல்வி தூங்கிக் கொண்டிருக்கும் போது மீண்டும் சேது அவரை வீட்டை விட்டு வெளியே துரத்துவது போல கனவு கண்டு பயத்தில் தமிழ் எழுந்து கத்துகிறார்.

சேது அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார். வளைகாப்பு நடைபெறுவதற்கு முன்பு முருகனுக்கு வைர வேலை கொடுப்பதற்காக தமிழ்- சேது இருவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று ஈஸ்வரி தன்னுடைய உறவுக்கார தம்பி இடம் தமிழ்- சேது கிளம்பும் விஷயத்தைப் பற்றி சொன்னார். அதற்கு பின் ராஜாங்கம், தாமரை கல்யாண விஷயமாக வீட்டில் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வந்த தாமரை, எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை என்றார். யாரையாவது காதலிக்கிறாயா என்று ராஜாங்கத்தின் மனைவி கேட்டார். தாமரை உண்மை சொல்ல வரும்போது ஈஸ்வரி தடுத்து ஏதேதோ பேசி குழப்பி விட்டார்.

சின்ன மருமகள்:

கோபத்தில் ராஜாங்கம், நான் பார்க்கும் மாப்பிள்ளை தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீட்டிவிட்டு சென்றார். அதற்குப்பின் தாமரை, காமேஷிற்கு ஃபோன் செய்து நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி வீட்டில் வந்து பெண் கேட்க சொன்னார். காமேஷ், என்னால் யாரிடமும் கைகட்டி பதில் சொல்ல முடியாது என்று திமிராக பேசிவிட்டு போனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் தமிழ்-சேது சந்தோஷமாக பேசிக்கொண்டு வந்தார்கள். அப்போது ரவுடிகள் சேதுவை சேதுவை தாக்கினார்கள். ஒரு கட்டத்தில் சேதுவை அந்த ரவுடிகள் மடக்கி பிடித்து விட்டார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேதுவை அடித்துப் போட்டுவிட்டு தமிழை கடத்தி சென்று விடுகிறார்கள். அந்த பக்கம் வந்தவர்கள் சேதுவின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி விசாரிக்கிறார்கள். சேதுவும் கண்விழித்து தமிழை தேடுகிறார். பின் சேது, ராஜாங்கத்திற்கு போன் செய்து நடந்ததை சொல்கிறார். ராஜாங்கம், சேது, தமிழின் அப்பா, கருப்பு எல்லோரும் தமிழை தேடி செல்கிறார்கள். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, தன் உறவுக்கார தம்பியிடம் தமிழை கொலை செய்ய சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

அவருமே தமிழை கொலை செய்வதற்கு தன் ஆட்களிடம் சொல்கிறார். தமிழ் ரொம்பவே பயந்து போய் இருக்கிறார். இன்னொரு பக்கம் எல்லோரும் தமிழை தேடி அலைகிறார்கள். ஒரு கட்டத்தில் கருப்பு , தன் வண்டியின் டயர் அடையாளத்தை வைத்து தமிழிருக்கும் இடத்திற்கு சென்று விடுகிறார்கள். சேது அங்கு இருக்கும் ரவுடிகள் எல்லாம் அடித்துப் போட்டு விட்டு தமிழை காப்பாற்றி விடுகிறார். கடைசியில் போலீஸ் அந்த ரவுடி கும்பலை கைது செய்து விடுகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full