தமிழின் பிறந்தநாளுக்கு சேது கொடுத்த சர்பிரைஸ், சந்தோஷத்தில் ஈஸ்வரி - விறுவிறுப்பில் சின்ன மருமகள்

By subhashini · 15/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வி மீண்டும் வேலைக்கு கிளம்பிவிட்டார். அப்போது ஓட்டலின் ஓனர், பெரிதாக வேலை செய்ய தேவை இல்லை. பார்சல் கட்டும் வேலை மட்டும் உட்கார்ந்து கொண்டு செய் என்கிறார். இன்னொரு பக்கம் தமிழ்செல்வியின் தங்கை, அக்காவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லவில்லையா? என்று கேட்டார். அதற்கு சேது, நான் எதற்கு சொல்லணும்? உன்னுடைய பிறந்தநாளுக்கு நான் சிறப்பாக கொண்டாடுகிறேன். ஆனால், உன் அக்காவுக்கு என்னால் சொல்ல முடியாது என்றெல்லாம் சொன்னார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, எம்எல்ஏவின் மகளை போஸுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.

எப்படியாவது பேசி முடித்து வையுங்கள் என்று கேட்டார். உடனே ராஜாங்கம், மலரை வாழ்க்கை என்னாவது? என்றார். அதற்கு ஈஸ்வரி, என் பையனுடன் சேர்ந்து வாழ மாட்டாள் என்று சொன்னது அவள்தான். என் மகனின் வாழ்க்கை வீணடிக்க முடியாது. தயவு செய்து அந்த எம்எல்ஏ மகளுடன் என் மகனை திருமணம் செய்து வையுங்கள் என்றார். அதற்கு ராஜாங்கம், நான்பார்க்கிறேன் என்று சொன்னார். இன்னொரு பக்கம் கல்லூரியில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். பின் தமிழின் பிறந்தநாள் என்பதால் கல்லூரியில் எல்லோருமே கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

சின்ன மருமகள்:

நேற்று எபிசோட்டில் தமிழ்ச்செல்வியின் பிறந்த நாள் என்பதால் அப்பத்தா வீட்டில் அலங்காரம் எல்லாம் செய்து கேக் ஏற்பாடு செய்தார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே வந்து விட்டார்கள். அப்போது தமிழ்ச்செல்வி அங்கு வந்தார். உடனே அப்பத்தா, தமிழ்ச்செல்வியின் பிறந்தநாளுக்கு இதை செய்தேன் என்றார். உடனே கோபப்பட்ட ஈஸ்வரி, கேக்கை தூக்கிப்போட்டு தமிழ் செல்வியை பயங்கரமாக திட்டிக் கொண்டிருந்தார். தாமரையின் அம்மாவும் ஒத்துமோளம் ஒதினார். இதையெல்லாம் பார்த்த ராஜாங்கம், எதற்கு இந்த தேவையில்லாத வேலை என்றார். சேதுவால் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்பினார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் அப்பத்தா எமோஷனலாக பேசி தமிழ் செல்விக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லினார். பின் தமிழின் தங்கை, இன்று முடிவதற்குள் அக்காவிற்கு நீங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்டிப்பாக செல்வீர்கள் என்று சவால் விட்டு போகிறார். ஆனால், சேது எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி, சேது தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது அனாதை ஆசிரமத்தில் இருந்து போன் செய்த மேரி, உங்களின் பிறந்தநாளுக்காக மூன்று வேலையும் அன்னதானம் போட சொல்லி இருக்கிறார் சேது.

சீரியல் ட்ராக்:

குழந்தைகள் நன்றி சொல்லி உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்கள் என்கிறார். இதை கேட்டு தமிழ் ரொம்பவே எமோஷனலாகி கதறி அழுகிறார். இன்னொரு பக்கம் தன் மகனின் திருமணத்திற்காக ஈஸ்வரி ராஜாங்கத்திடம் பேசுகிறார். அவருமே எம்எல்ஏவுக்கு போன் செய்து போஸை பற்றி சொல்கிறார். அவர்களும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார்கள். இதை பார்த்து மலர் சங்கடப்படுகிறார். இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஈஸ்வரி சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஆடுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full