பித்தலாட்டம் செய்து மருந்தை கொண்டு வந்த போஸ், தமிழ்-சேது நிலைமை என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ், வேண்டாம் தனித்தனியாக சென்று சீக்கிரம் மருந்து எடுக்கலாம் என்று பிரிந்து சென்றார்கள். ஒரு வழியாக மருந்து இருக்கும் இடத்திற்கு தமிழ்ச்செல்வி வந்து விட்டார். பின் வண்டுகளை வெளியே வர வைப்பதற்காக தன் கையை கிழித்து ஒரு துணியில் ரத்தத்தை சிந்தினார். பின் வண்டுகள் ரத்த வாடைக்கு அந்த துணியின் மீது உட்காருகிறது. உடனடியாக தமிழ்செல்வி நெருப்பை போட்டு அந்த வண்டுகள் எல்லாம் கொல்லுகிறார்.
நேற்று எபிசோட்டில் ஒரு வழியாக வண்டுகளை எல்லாம் சாவடித்து மருந்தை தமிழ்ச்செல்வி எடுத்து விட்டார். பின் தமிழ், மருந்து எடுத்து வரும்போது வண்டுகள் துரத்துகிறது. இருந்தும் எப்படியோ தப்பித்து விட்டார். இன்னொரு பக்கம் சேது, மருந்து எடுக்கும் இடத்திற்கு சென்று விட்டார். அங்கு அந்த கூட்டின் மீது ஒரு வித பவுடரை தூவ, அதிலிருந்து வண்டுகள் வெளியே வந்து சேதுவை தாக்குகிறது. இருந்தும் சேது போராடி இருந்தார். இன்னொரு பக்கம் போஸ், எங்கு செல்வது? என்ன செய்வது? என்று புரியாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.
சின்ன மருமகள்:
அந்த சமயம் பார்த்து தமிழ்செல்வி, மருந்து எடுத்து விட்டேன். வந்து விடுங்கள் என்று சிக்னல் கொடுத்தார். ஆனால், அது சேது காதில் விழவில்லை. இதை கவனித்த போஸ், தமிழ்ச்செல்வியின் பின்னால் இருந்து தலையில் அடித்தார். தமிழ்ச்செல்வி பேச்சு மூச்சு இல்லாமல் விழுந்து கிடந்தார். பின் அந்த மருந்தை போஸ் எடுத்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் ராஜாங்கம் குடும்பத்தினர் எல்லோருமே கவலைக்கிடத்தில் இருந்தார்கள். டாக்டர், எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்வதால் வீட்டில் உள்ள எல்லோருமே அழுது கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போஸ் மருந்தை எடுத்து வந்து சித்தரிடம் கொடுக்கிறார். அவர் அந்த மருந்தை பார்த்துவிட்டு எல்லோருக்குமே கொடுக்க, சில பேர் குணமடைந்து விடுகிறார்கள். சில பேர் இன்னும் ஆபத்தான கட்டத்தில் தான் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சேது, மருந்து எடுக்கும் போது அந்த வண்டு கடித்து விடுகிறது. இதனால் அவர் பாதி மயக்கம் நிலையில் தான் இருக்கிறார். பின் சேது, தான் வரும் வழியில் தமிழ் விழுந்து கிடப்பதை பார்த்து அவரை எழுப்ப பார்க்கிறார். ஆனால், தமிழ் எழவே இல்லை.
சீரியல் ட்ராக்:
பின் தமிழை தூக்கிக்கொண்டு சேது ஹாஸ்பிடலுக்கு வந்து விடுகிறார். தமிழ் இறந்துவிட்டார் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். டாக்டர்களும் தமிழுக்கு சிகிச்சை கொடுக்கிறார்கள். சேதுவுமே எதுவும் சரியாக பேச முடியாமல் தான் எடுத்து வந்த மருந்தை கொடுத்து மயங்கி விழுகிறார். வீட்டில் உள்ள எல்லோரும் பதறுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.