தேர்தலில் சேதுவிற்கு எதிராக களமிறங்கும் தமிழ்செல்வி, நடக்கப்போவது என்ன? பரபரப்பில் சின்ன மருமகள்

By subhashini · 21/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சக்தி, ஜெனி இருவருமே தமிழின் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது ஜெனி, தமிழிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு நடந்ததை எல்லாம் சொன்னார். செல்லப்பாண்டி, சேதுவின் குடும்பத்திடம் நடந்ததை சொல்லி உண்மையை புரிய வைக்கலாம் என்றார். உடனே தமிழ், யாருக்காகவும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் என்னுடைய குழந்தை கேரியர் என்று இருக்கிறேன். தயவு செய்து என்னை அப்படியே விட்டுவிடுங்கள். இனிமேல் அந்த குடும்பத்தில் நான் சேர்ந்து வாழ்வது என்பது நடக்காத ஒன்று என்றார்

இன்னொரு பக்கம் ராஜாங்கம் தயாராகி சேதுவை அழைத்துக் கொண்டு போனார். வீட்டில் உள்ள யாருக்குமே ஒன்றுமே புரியவில்லை. ராஜாங்கம் மீண்டும் கட்சியில் சேருகிறாரா? என்ற சந்தேகம் வருகிறது. பின் ராஜாங்கம், சேதுவை சுயேட்சையாக தேர்தலில் நிற்க வைத்து போட்டியிடுவதாக சொன்னார். சேதுவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ராஜாங்கம், நான் உனக்காக துணையாக நிற்பேன். இனி எந்த கட்சியும் நமக்கு தேவையில்லை. நீ வெற்றி பெறுவாய் என்று சொல்லி வேட்பு மனு தாக்குதலில் கையெழுத்து போட சொன்னார். சேதுவுமே தன் அப்பாவிற்காக கையெழுத்து போட்டார்.

சின்ன மருமகள்

வீட்டில் உள்ள எல்லோருமே ராஜாங்கம், சேது எங்கே சென்றிருப்பார்கள் என்று புலம்பி கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் வந்த ராஜாங்கம், சுயேட்சையாக சேது தேர்தலில் நிற்க போகிறான். நான் துணையாக இருக்க போகிறேன் என்று சொல்கிறார். வீட்டில் உள்ள சந்தோஷ் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் ஈஸ்வரிக்கு மட்டும் பயங்கர கடுப்பாகிறது.
அதற்குப்பின் ஆட்டோவிற்காக தமிழ் பஸ் ஸ்டாண்டில் காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த சேது, நிலைமையை பார்த்தாயா? நீ என் வாழ்க்கையை விட்டு போனதுதான் ரொம்ப நல்லது என்று ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

தமிழ் அதை எதையும் காதில் வாங்காதது போல் ஹெட்செட்டை கழட்டி காட்டுகிறார். சேதுவிற்கு கோபம் தான் வருகிறது. பின் தமிழ்செல்வி வீட்டிற்கு வந்து விடுகிறார். அப்போது சேது தேர்தலில் நிற்கும் விஷயத்தை வீட்டில் உள்ள எல்லோரிடம் சொல்கிறார். அப்போது ராஜாங்கத்திற்கு எதிர்க்கட்சியாளர்கள் தமிழின் வீட்டிற்கு வந்து சேதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது தொடர்பாக பேசுகிறார்கள். தமிழ்செல்வி, அதெல்லாம் முடியாது. இங்க இருந்து கிளம்பி போங்க என்று திட்டி அனுப்பி விடுகிறார்.

https://www.youtube.com/watch?si=UTagPNm0sHsi6bEd&v=I3CLRtjNSOY&feature=youtu.be

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் சேதுவை எதிர்த்து பிரச்சாரம் செய்வதற்கு பணம் தருவதாக சொல்கிறார்கள். தமிழ்செல்வி முடியாது என்று சொல்கிறார். இதை தவறாக புரிந்து கொண்ட சேது, பணம் வாங்கிக் கொண்டு பிரச்சாரம் செய்ய போகிறாயா? உனக்கு தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து நின்று வெற்றி பெற்று காண்பி என்று சவால் விடுகிறார். இதனால் தமிழ்செல்வி, சேதுவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full