தேர்வு எழுத உதவும் சேது, தமிழ்செல்வி செய்த அட்ராசிட்டி - விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழிடம் பேச சொல்லி எல்லோரும் சேதுவை கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், சேது முடியாது என்று ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பி விட்டார். பின் வீட்டிற்கு வந்த சேதுவிடம் தமிழ் பற்றி விசாரித்தார்கள். தமிழுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று தெரிந்தவுடன் ஈஸ்வரி கோபப்பட்டார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வியை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அப்போது தமிழ்செல்வி, நடக்கக்கூடாது என்று எல்லோருமே சொன்னார்கள். அதற்கு தமிழ்செல்வி, எனக்கு எக்ஸாம் இருக்கிறது. நான் கண்டிப்பாக போவேன் என்றார்.
அப்பத்தா, சேதுவை அழைத்துப் போக சொன்னார். ஆனால், சேது முடியாது என்றார். அதற்குப் பின் ஈஸ்வரிக்கு போன் செய்த போஸ், நான் ராஜாங்கத்தை அபழிவாங்காமல் விடமாட்டேன். ஆறுமுகத்தை என்ன செய்கிறேன் பார் என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு ராஜாங்கத்திடம் அப்பத்தா, தமிழுக்கு நடந்ததை பற்றி சொல்லி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் சேது சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தமிழும் சாப்பிடுவதற்காக போனார். ஆனால், அவரால் போட முடியவில்லை.
சின்ன மருமகள் சீரியல்:
நேற்று எபிசோட்டில் தமிழ்ச்செல்வியால் நடக்க முடியாதால் சேது அவருக்கு எல்லா உதவிகளையும் செய்தார். இதனால் தமிழ்ச்செல்வி மனதுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டார். இன்னொரு பக்கம் கட்சி தலைவரின் மனைவி ராஜாங்கம் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவர், பெண்களின் நலனுக்காக சில திட்டங்களை கட்சித் தலைவர் கொண்டு வந்திருக்கிறார். உங்களுடைய வீட்டில் இருந்து ஆரம்பிக்கலாம். நீங்கள் தமிழ்ச்செல்வியை கல்லூரிக்கு அழைத்து செல்லுங்கள் என்றார்.
சீரியல் ட்ராக்:
இதை கேட்டு ராஜங்கத்தால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் தமிழ், கல்லூரிக்கு எப்படி போவது என்று புலம்பி கொண்டு இருந்தார். பின் ராஜாங்கம், கட்சி தலைவரின் மனைவி எல்லோருமே சேது- தமிழ் இருக்கும் இடத்திற்கு வருந்தார். அப்போது தமிழை கல்லூரிக்கு அழைத்து செல்லும் விஷயமாக சேதுவிடம் பேசினார்கள். சேதுவால் எதுவும் சொல்ல முடியாமல் ஒத்துக் கொண்டார். இதைக் கேட்டு தமிழ் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.
https://www.youtube.com/watch?v=unBGv3uPwZ0
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தமிழ்செல்வியை கல்லூரிக்கு சேது தூக்கிக்கொண்டு செல்கிறார். கேமரா வீடியோ எடுப்பதால் வேற வழி இல்லாமல் ராஜாங்கம், சேது இருவருமே தமிழ் செல்வியை அழைத்துப் போகிறார்கள். அப்போது போகும் வழியில் தமிழ் செல்வி, எனக்கு பசிக்குது என்று சொல்வதால் சேது ஊட்டி விடுகிறார். பின் தேர்வு எழுதும் அறையில் ரெஸ்ட்ரூம் போகணும் என்று சொல்வதால் தமிழ் செல்வியை தூக்கிக்கொண்டு போகிறார். இப்படி தமிழ்செல்வி, சேதுவை வைத்து அட்ராசிட்டி செய்து கொண்டிருக்கிறார்.