ஆபத்தில் சிக்கி தவிக்கும் ராஜாங்கம் குடும்பம், சேது-தமிழ் செய்த வேலை - விறுவிறுப்பில் சின்ன மருமகள்

By subhashini · 29/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேதுவை ரொம்ப பெருமையாக எல்லோரும் புகழ்ந்து பேசினார்கள். அந்த சமயம் பார்த்து மருத்துவ முகாமிற்கு ஒரு குழந்தையை ஆபத்தான கட்டத்தில் பெற்றோர் அழைத்து வந்தார்கள். அந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் சரியான சிகிச்சை கொடுத்து காப்பாற்றி விட்டார்கள். இதனால் தமிழ்செல்வியின் காலில் விழுந்து நன்றி சொன்னார்கள். இன்னொரு பக்கம் ராஜாங்கம் தங்கும் வீட்டிற்கு வேலை ஆட்கள் வந்தார்கள். அவர்கள் எல்லா வசதியையும் ஏற்பாடு செய்து தந்தார்கள்.

ராஜாங்கம் இருக்கும் இடத்திற்கு போஸ் அனுப்பிய ஆட்கள் வந்தார்கள். ராஜாங்கத்தை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார்கள். அந்த சமயம் பார்த்து மலைவாழ் கிராம மக்கள் ராஜாங்கத்தை பார்க்க வந்தார்கள். அவர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் பொருட்களை எல்லாம் கொடுத்து தங்கள் பகுதியில் இருக்கும் குறைகளை எல்லாம் சொன்னார்கள். அதோடு ஒரு விஷ வண்டுவால் தாங்கள் பயங்கரமாக பாதிக்கப்பட்டிருக்கும் விஷயத்தை சொன்னார்கள். அதற்கு ராஜாங்கமும் நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்.

சின்ன மருமகள்:

அந்த சமயம் பார்த்து அந்த வண்டு ராஜாங்கம் இருக்கும் இடத்திற்கு வந்தது. மலைவாழ் மக்கள் எல்லோருமே பயந்து கொண்டு உள்ளே போங்க என்று கத்தினார்கள். இருந்தாலுமே ராஜாங்கத்தின் குடும்பத்தில் உள்ள எல்லோரும் மீதும் அந்த வண்டு கொட்டி விடுகிறது. ராஜாங்கத்தின் மனைவிக்கு மட்டும் ஒன்னும் ஆகவில்லை. எல்லோரும் வலி தாங்க முடியாமல் தவித்தார்கள். பின் சேதுக்கு போன் செய்து தகவலை சொன்னார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜாங்கத்தின் குடும்பம் விச பூச்சியால் அவஸ்தைப்பட்டு இருக்கும் விஷயத்தை சேது தெரிந்து கொள்கிறார். பின் அதை பற்றி கேம்பில் எல்லோரிடமும் சொல்கிறார். அங்கு இருக்கும் கிராம மக்கள், அது கொடூரமான விஷத்தன்மை பூச்சி. அது கொட்டினால் யாருமே உயிர் பிழைக்க மாட்டார்கள். எல்லோருமே இறந்து விடுவார்கள். நீங்கள் அங்கு போகாதீர்கள் என்று சொல்கிறார். என் குடும்பத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று சேது -தமிழ்ச்செல்வி இருவருமே ராஜாங்கம் இருக்கும் இடத்திற்கு போகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

பின் சேது-தமிழ் இருவரும் தீ பந்தத்தை காண்பித்து ராஜாங்கம் குடும்பத்தை ஒரு வழியாக அந்த இவண்டுகளிடமிருந்து காப்பாற்றி அழைத்து வருகிறார்கள். வரும் வழியில் தமிழ்ச்செல்வி எல்லோருக்குமே ஆன்டிபயாடிக் இன்ஜெக்ஷன் போடுகிறார். வலி தாங்க முடியாமல் ஒவ்வொருவருமே கதறிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு வண்டு பூச்சியால் கடிபட்டவர்கள் இறந்து கிடக்கிறார்கள். அதை பார்த்து சேது- தமிழ் இருவருமே பதறி போகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full