குழந்தையை மீட்க ராஜாங்கம் குடும்பத்தின் மீது புகார் கொடுத்த தமிழ்செல்வி - பரபரப்பான கட்டத்தில் சின்ன மருமகள்
குழந்தையை மீட்க ராஜாங்கம் குடும்பத்தின் மீது புகார் கொடுத்த தமிழ்செல்வி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, கருப்பு இருவருமே அந்த கிழவினுடைய புகைப்படத்தை எடுத்துக் கொண்டு குழந்தையை தேடி அலைகிறார்கள். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடல் வந்த தமிழ்ச்செல்வி நடந்ததை எல்லாம் தெரிந்து கொண்டு குழந்தையை தேடி அலைந்தார். ஒரு பக்கம் போலீசும் குழந்தையை தேடிக் கொண்டிருந்தார்கள். எல்லோருமே கஷ்டப்பட்டு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. மனம் உடைந்து போன தமிழ்ச்செல்வி வீட்டிற்கு வந்தார்.
குழந்தை கிடைக்கவில்லை என்று சேது சொன்னார். அதைக் கேட்டு ராஜாங்கம், எல்லோருமே பதறினார்கள். ஈஸ்வரி மட்டும் சந்தோஷப்பட்டார் கருப்பு, உனக்கும் அந்த குழந்தைக்கும் தான் சம்பந்தமில்லை. எதற்காக குழந்தையை கேட்கிறார்? என்று சேது வம்பு இழுப்பது போலவே பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கொந்தளித்த சேது, கருப்புவின் சட்டையை பிடித்து அது என்னுடைய குழந்தை தான் இது. இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
சின்ன மருமகள்:
வீட்டில் உள்ள எல்லோருமே ராஜாங்கம் ரொம்பவே சந்தோஷப்பட்டார் அப்போது கருப்பு, குழந்தை எங்கும் போகவில்லை. கெஸ்ட் ஹவுஸில் தான் இருக்கிறது என்று சொன்னார். பின் மொத்த குடும்பமுமே கெஸ்ட் ஹவுஸ் போனார்கள். குழந்தையை பார்த்தவுடன் சேது எமோஷனலாக அழுதார். பின் குழந்தையை தன் கையில் தூக்கி கொஞ்சினார். இதை பார்த்து ராஜாங்கம், கருப்பு எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்ச்செல்வி, தன்னுடைய குழந்தையை எடுத்துக்கொண்டு கோவிலில் பஞ்சாயத்து மணியை அடிக்கிறார். வீட்டில் யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. அப்போது ஊர் தலைவர்கள் எல்லோருமே வந்துவிடுகிறார்கள். தமிழ்செல்வி, எனக்கு விவாகரத்து வாங்கித் தந்ததே நீங்கள் தான். என்னுடைய குழந்தைகள் தான் வாழ்க்கை என்று என்னுடைய மனதை ஏற்றுக் கொண்டேன். எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. ஆனால், எனக்கு பிறந்த முதல் குழந்தையான ஆண் குழந்தையை எனக்கு தெரியாமலேயே அப்பத்தா பெரிய வீட்டில் கொடுத்து விட்டார்கள்.
சீரியல் ட்ராக்:
எனக்கு என்னுடைய குழந்தையை வேண்டும். நியாயம் கேட்டு தான் இந்த மணியை அடித்து இருக்கிறேன் என்று சொல்கிறார். ஊர் தலைவர்கள் ராஜாங்கம் வீட்டிற்கு சென்று தமிழ் செல்வி கொடுத்திருக்கும் புகாரை பற்றி சொல்கிறார்கள். இதை கேட்டு ராஜாங்கம், சேது பயங்கரமாக கோபப்படுகிறார். அதற்குப்பின் பஞ்சாயத்து நடக்கிறது. தமிழ்செல்வி தன் தரப்பில் இருக்கும் நியாயத்தை எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். சேது, என் மகனை யாருக்காகவும் விட்டு தர மாட்டேன் என்று சொல்கிறார். காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது