பிரிவால் குழந்தைகளுக்கு வரும் சிக்கல், வேதனையில் தமிழ்-சேது, சின்ன மருமகள்

பிரிவால் குழந்தைகளுக்கு வரும் சிக்கல், வேதனையில் தமிழ்-சேது

By subhashini · 23/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் குழந்தையை சனி ஞாயிறு இரண்டு நாட்கள் மாற்றி கொள்ள வேண்டும் பஞ்சாயத்தில் தீர்ப்பு வந்ததால் சேது-தமிழ் இருவரும் வந்தார்கள். மோகனா, குழந்தைக்கு அழகர் என்று பெயர் வைத்திருக்கும் விஷயத்தை சொன்னார். பின் குழந்தையை மாற்றிக் கொண்டார்கள். அப்பத்தா, குழந்தைக்கு லட்சுமி என்று பெயர் வைத்திருக்கிறோம் என்றார். அதைக் கேட்டு செய்து எமோஷனலாக அழுதார். பின் தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்ததை நினைத்து சேது ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதேபோல் தமிழும் தன்னுடைய மகனை பார்த்து சந்தோஷப்பட்டார்.

சேது தன் மகளை ரொம்ப சந்தோஷத்துடன் வீட்டிற்கு அழைத்து வந்தார். சேதுவின் மகளுக்குமே தொட்டிலில் போட்டு தமிழ்செல்வி வைத்த பெயரையே அலைந்தார்கள். இன்னொரு பக்கம் தன் மகன் வந்த சந்தோஷத்தில் தமிழ் செல்வி இருந்தார். அப்போது அப்பத்தா, தமிழின் அம்மாவிடம் பெண் குழந்தை சேது விடம் வளரட்டும். மகனை இங்கு வளர்த்துக் கொள்ளலாம். சேது தன்னுடைய அம்மா ஆசையாக வளர்க்கட்டும் என்றெல்லாம் சொல்லிருந்தார். இதை அறிந்த தமிழ்செல்வி கொந்தளித்தார். என் மகள் என்னுடன் தான் இருக்க வேண்டும் என்றார்.

சின்ன மருமகள்:

அதற்குப்பின் ஈஸ்வரி, மீனாட்சி குழந்தையின் பெயருக்கு முன்னால் தமிழ்ச்செல்வியின் இன்ஷியல் இருப்பதை கவனித்து அதைப்பற்றி சேதுவிடம் சொன்னார். இதனால் கொந்தளித்த சேது, தமிழ் செல்விக்கு போன் செய்து சண்டை வாங்கினார். தமிழ் செல்வி, என் மகளுக்கு என்னுடைய பெயர்தான் இருக்கும். மகன் பெயர் முன்னாள் உங்கள் பெயர் இன்ஷியல் போட்டிருக்கிறீர்கள். நான் அதைப் பற்றி கேட்கவே இல்லை. என்னுடைய இன்சியலை எடுக்க முடியாது என்றெல்லாம் ஆவேசமாக சண்டை போட்டார். சேதுவால் எதுவும் பேச முடியவில்லை. இதைப் பற்றி சேது, ராஜாங்கத்திடம் சொன்னார். ராஜாங்கம், தமிழ்ச்செல்வி பெயர் இருக்கட்டும். இதை பெரிதாக பிரச்சினை செய்ய வேண்டாம் என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் குழந்தை மீனாட்சி அழுது கொண்டிருக்கிறார். தமிழ்ச்செல்விக்கு ஒன்றுமே புரியவில்லை. உடனடியாக மீனாட்சி குழந்தையை அழைத்துக் கொண்டு தமிழ் செல்வி ஹாஸ்பிடல் போகிறார். இன்னொரு பக்கம் அழகர் குழந்தை அழுது கொண்டே இருக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே சமாதானம் செய்தும் கேட்கவில்லை. இரண்டு குழந்தைகளும் பிரிந்து இருப்பதால் தான் இப்படி அழுகிறார்கள். ஆனால், அதை யாருக்கும் புரியவில்லை. பின் சேது குழந்தையை சமாதானம் செய்கிறார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி, அப்பத்தா எல்லோருமே குழந்தையை சமாதானம் செய்தார்கள்.

சீரியல் ட்ராக்:

அதன் பின் பஞ்சாயத்து தீர்ப்புப்படி திங்கட்கிழமை ஆனதால் குழந்தையை சேது- தமிழ் இருவரும் மாற்றிக் கொள்கிறார்கள். அப்போது இரண்டு குழந்தைகளுமே அழுது கொண்டிருக்கிறார்கள். பஞ்சாயத்து தலைவர்கள் குழந்தை பிரித்து வைத்து இருப்பதால் தான் அழுகிறார்கள். இருந்தாலும் சமாதானம் செய்து கொள்ளுங்கள் என்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து தமிழ் ரொம்ப கஷ்டப்படுகிறார். பின் சேது போட்ட நகைகளை எல்லாம் கழட்டி கொடுத்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full