வேறு ஒரு திருமணம் செய்ய போகும் சேது, தமிழ் செல்வி கொடுத்த ஷாக் - பரபரப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கருப்பன், சேது உன்னை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு திருமணம் செய்யப் போகிறான். வீட்டில் உள்ள எல்லோருமே சம்மதம் சொல்லிவிட்டார்கள் என்றார். தமிழ்செல்வி, இதை நான் எதிர்பார்த்ததுதான். நீங்கள் அதைப் பற்றி எதுவும் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். பின் வீட்டில் தமிழ் செல்வின் அம்மா, சேது எடுத்த முடிவை நினைத்து ரொம்பவே வேதனைப்பட்டு கொண்டு இருந்தார். தமிழ்ச்செல்வி, நம்மை வேண்டாம் என்று சொன்னவருக்காக கெஞ்ச தேவை இல்லை. என்னுடைய வாழ்க்கையை நான் பார்த்துக்கொள்கிறேன்.
இனி என் குழந்தைக்காக நான் வாழ்வேன் என்றார். இன்னொரு பக்கம் ராஜாங்கம் வீட்டில் அப்பத்தா, சேதுவின் முடிவை பற்றி யோசிக்க சொல்லுங்க என்றார். ராஜாங்கம், சேது எந்த முடிவெடுத்தாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் சேது வாழ்க்கையில் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் என்றார். இதை கேட்டு ஈஸ்வரி சந்தோஷப்பட்டார்கள். ஈஸ்வரி, எப்படியாவது ஐஸ்வர்யாவை சேதுவுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற திட்டம் போட்டார். அதே போல் சாவித்ரி, தன் மகளுக்கு விவாகரத்து வாங்கி வைத்துவிட்டு சேதுவுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார்.
சின்ன மருமகள்:
சேது, வெற்றி பெற்றதால் மற்ற கட்சிகளில் உள்ள எல்லோருமே தன்னுடைய கட்சியில் சேர்ந்து கொள்ள கேட்டார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே சேதுவை கட்சியில் சொன்னார்கள். ராஜாங்கம், எதுவாக இருந்தாலும் சேது முடிவெடுக்கட்டும் என்றார். கடைசியில் சேது, நான் தனியாகத்தான் இருக்கப் போகிறேன். என் அப்பாவிற்கு பிரச்சினை வரும்போது யாருமே எங்களுக்கு துணையாக இல்லை. நான் எந்த கட்சியிலும் சேர மாட்டேன் என்று சொல்லி விட்டார். அதற்குப்பின் தாமரை- காமேஷ் இருவரையும் பிரித்து விடுவதாக சொல்லி பஞ்சாயத்து நடக்கிறது.
சீரியல் ட்ராக்:
காமேஷ் ரொம்பவே கெஞ்சி கதறுகிறார். ஆனால் தாமரை முடியாது என்றார். கடைசியில் இருவரையும் பிரித்து விட்டார்கள். அந்த சமயம் பார்த்து காமேசுக்கு லாட்டரி டிக்கெட் வின் பண்ணுவதால் லட்சாதிபதி ஆனார். அதற்குப்பின் ஈஸ்வரி, தமிழுக்கு போன் செய்து வம்பு இழுத்தார். கோபத்தில் தமிழ்ச்செல்வி, சரியான பதிலடி கொடுத்து ஈஸ்வரியின் வாயை மூட வைத்து விட்டார். அதற்குப்பின் வீட்டில் தாமரை காமேஸ் பிரிந்த விஷயத்தை பற்றி சொன்னார்கள். அதைக் கேட்டு ராஜாங்கம் ஷாக் ஆனார்.
https://www.youtube.com/watch?v=J0IRH8Mnl7Q
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் சேது, ஐசுவை திருமணம் செய்து கொள்வதற்கு ஒத்துக்கொள்கிறார். கோவிலில் சேது, ஐசு உடைய நிச்சயதார்த்தம் நடக்கிறது. அந்த சமயம் வந்த தமிழ்செல்வி, என்னுடைய பஞ்சாயத்தை முடித்துவிட்டு நீங்கள் வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார். சேது, எங்கள் இருவரையும் முடித்து விடுங்கள் என்று சொல்கிறார். பின் இருவரிடமே ஓலையை கொடுக்கிறார்கள்.