வீட்டை விட்டு வெளியே அனுப்பும் சேது, புயலாக மாறி தமிழ்செல்வி சொன்ன வார்த்தை - சின்ன மருமகள்

By subhashini · 31/3/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம் கட்சியின் தலைவர், சத்தி கொலை வழக்கில் ராஜாங்கத்திற்கும் சம்மந்தம் இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அதனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கிவிடுகிறோம். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறோம் என்றார். இதை கேட்டு அப்பத்தா நொறுங்கிப் போனார். இன்னொரு பக்கம் இந்த வழக்கை விசாரிக்க உயர் அதிகாரி ஒருவரை சிபாரிசு செய்து இருந்தார்கள். அவர், ராஜாங்கத்திடம் ரொம்ப ராங்காக நடந்து கொண்டார். அது மட்டும் இல்லாமல் ராஜாங்கத்தை ஜெட்டி பனியன் உடன் கட்டி வைத்து அடித்தார்.

இதை பார்த்த சேது ரொம்பவே மனம் உடைந்து அழுதார். போலீஸ் ஸ்டேஷனில் உயர் அதிகாரி ராஜாங்கத்தை உண்மையை ஒத்துக் கொள் என்று அடி வெளுத்து வாங்கினார். ராஜாங்கம், நான் எந்த தவறும் செய்யவில்லை என்றார். பின் இதைப்பற்றி வெளியே இருந்த ஒரு போலீஸ், சேதுவிடும் சொன்னார். பதறி அடித்துக் கொண்டு உள்ளே சென்ற சேது, தன் தந்தை அடி வாங்குவதை பார்த்து ரொம்பவே மனமுடைந்து போனார். உடனே அந்த உயர் அதிகாரி, சேதுவை திட்டி வெளிய அனுப்பி விட்டார். சேதுவிற்கு என்ன செய்வது என்று புரியாமல் தவித்து நிற்கிறார்.

சின்ன மருமகள்:

இன்னொரு பக்கம் சாவித்திரி, தாமரை இருவருமே தன் அண்ணனின் நிலை அறிந்து வீட்டிற்கு வந்து அழுது புலம்பினார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே தமிழுக்கு எதிராகத்தான் இருந்தார்கள். தமிழ் சொல்வதை யாரும் கேட்கவில்லை. தமிழ்செல்வி, யாரும் நம்பவில்லை என்றாலும் என் கணவர் என்னை நம்புவார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது என்றார். அந்த சமயம் பார்த்து சேது வீட்டிற்கு வந்தார். கோபத்தில் சேது, ராஜாங்கம் போலீஸ் ஸ்டேஷனில் படும் கஷ்டத்தை எல்லாம் சொன்னார். அதைக் கேட்டு அப்பத்தா ரொம்பவே உடைந்து விடுகிறார். அப்போது சேது, இதற்கெல்லாம் காரணம் நீ மட்டும் தான் என்றார். தமிழ் செல்வி அதிர்ச்சியில் நிற்கிறார்

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேது, உன்னை திருமணம் செய்தது தான் மிக பெரிய தவறு. நீ என் அப்பாவின் மீது புகார் கொடுத்திருந்த போதே நான் உன்னை தலைமூழ்கி இருக்கணும். உன்னால் தான் இந்த பிரச்சனை. மரியாதையாக வீட்டை விட்டு வெளியே போ என்று ரொம்ப மோசமாக பேசுகிறார். இதனால் கொந்தளித்த தமிழ், நான் தான் உங்களை கல்யாணம் செய்து கொள்ள கேட்டேனா? உங்கள் அப்பாவை ஜெயிலுக்கு அனுப்பியது தாமரை. ஒவ்வொரு முறையும் நீங்கள் தவறு செய்வீர்கள். ஆனால், தண்டனை எனக்கு. பின் நீங்கள் தவறு தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் போது நான் ஏற்றுக்கொள்ளணும்.

சீரியல் ட்ராக்:

ஆறு மாதத்திற்கு ஒரு முறை உங்களிடம் நான் நல்லவள் என்று தீக்குளித்து நிரூபிக்க முடியாது. உங்களுடன் வாழ்ந்தவரையும் போதும். நானே வீட்டை விட்டு போகிறேன் என் மீது தவறு இல்லை என்று தெரிந்ததும் நீங்கள் எல்லோருமே என்னிடம் மன்னிப்பு கேட்டு நிற்பீர்கள். நான் யாரையும் மன்னிக்க மாட்டேன். இனி எனக்கும் இந்த குடும்பத்திற்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேறுகிறார். பின் ஒரு குடம் தண்ணியை எடுத்து தமிழ் தலையில் ஊற்றிக் கொள்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full