தாய்மையின் உரிமைக்காக போராடும் தமிழ்செல்வி, கொந்தளிக்கும் சேது - சின்ன மருமகள்
தாய்மையின் உரிமைக்காக போராடும் தமிழ்செல்வி, கொந்தளிக்கும் சேது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ் செல்வி நினைத்த மாதிரி சேது அம்மா பெயர் மீனாட்சி தான் சீட்டில் வருகிறது. வீட்டில் எல்லோரும் சந்தோசப்பட்டார்கள். இன்னொரு பக்கம் ராஜாங்கம் வீட்டிலும் சேதுவின் மகனுக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தார். அதில் ராஜாங்கம், அழகர் சேது என்று பேரனுக்கு பெயர் வைத்தார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷமாக கொண்டாடினார்கள். பின் தமிழ் தேர்வு இருப்பதால் தன் அம்மாவுடன் குழந்தையை அழைத்து கொண்டு கல்லூரி சென்றார்.
கல்லூரிக்கு தமிழ்ச்செல்வி தேர்வு எழுத சென்றிருக்கிறார். அங்கு குழந்தையை தமிழ் அம்மா பார்த்துக் கொண்டார். குழந்தை அழுவதால் தமிழிடம் பால் கொடுக்க சொன்னார்கள். தமிழ் குழந்தையும் கவனித்துக் கொண்டு பரிட்சையும் நல்லபடியாக எழுதி முடித்தார். இதை பார்த்து தமிழின் அம்மா ரொம்பவே பெருமைப்பட்டார். இன்னொரு பக்கம் சேது தன்னுடைய மகளை அன்பாக பார்த்துக் கொண்டார். சேது தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐஸ்வர்யாவும் குழந்தையை அக்கறையுடன் கவனித்துக் கொண்டார்.
சின்ன மருமகள்:
அதற்குப்பின் குழந்தையை சனி ஞாயிறு இரண்டு நாட்கள் மாற்றி கொள்ள வேண்டும் பஞ்சாயத்தில் தீர்ப்பு வந்ததால் சேது-தமிழ் இருவரும் வந்தார்கள். மோகனா, குழந்தைக்கு அழகர் என்று பெயர் வைத்திருக்கும் விஷயத்தை சொன்னார். பின் குழந்தையை மாற்றிக் கொண்டார்கள். அப்பத்தா, குழந்தைக்கு லட்சுமி என்று பெயர் வைத்திருக்கிறோம் என்றார். அதைக் கேட்டு செய்து எமோஷனலாக அழுதார். பின் தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்ததை நினைத்து சேது ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதேபோல் தமிழும் தன்னுடைய மகனை பார்த்து சந்தோஷப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் சேது தன் மகளை ரொம்ப சந்தோஷத்துடன் வீட்டிற்கு அழைத்து வருகிறார். சேதுவின் மகளுக்குமே தொட்டிலில் போட்டு தமிழ்செல்வி வைத்த பெயரையே அலைகிறார்கள். +. இன்னொரு பக்கம் தன் மகன் வந்த சந்தோஷத்தில் தமிழ் செல்வி இருக்கிறார். அப்போது அப்பத்தா, தமிழின் அம்மாவிடம் பெண் குழந்தை சேது விடம் வளரட்டும். மகனை இங்கு வளர்த்துக் கொள்ளலாம். சேது தன்னுடைய அம்மா ஆசையாக வளர்க்கட்டும் என்றெல்லாம் சொல்லிருக்கிறார். இதை அறிந்த தமிழ்செல்வி கொந்தளிக்கிறார். என் மகள் என்னுடன் தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் ஈஸ்வரி, மீனாட்சி குழந்தையின் பெயருக்கு முன்னால் தமிழ்ச்செல்வியின் இன்ஷியல் இருப்பதை கவனித்து அதைப்பற்றி சேதுவிடம் சொல்கிறார். இதனால் கொந்தளித்த சேது, தமிழ் செல்விக்கு போன் செய்து சண்டை வாங்கினார். தமிழ் செல்வி, என் மகளுக்கு என்னுடைய பெயர்தான் இருக்கும். மகன் பெயர் முன்னாள் உங்கள் பெயர் இன்ஷியல் போட்டிருக்கிறீர்கள். நான் அதைப் பற்றி கேட்கவே இல்லை. என்னுடைய இன்சியலை எடுக்க முடியாது என்றெல்லாம் ஆவேசமாக சண்டை போடுகிறார். சேதுவால் எதுவும் பேச முடியவில்லை. இதைப் பற்றி சேது, ராஜாங்கத்திடம் சொல்கிறார். ராஜாங்கம், தமிழ்ச்செல்வி பெயர் இருக்கட்டும். இதை பெரிதாக பிரச்சினை செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்