தமிழைப் பழிவாங்க நடக்கும் சதி வேலைகள், பதறிப்போன சேது - விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, மிக்சி என்று வீட்டுக்கு தேவையான அனைத்து பொருள்களையுமே வாங்கி வந்தார். இதை பார்த்து ஈஸ்வரி, தாமரை அம்மா பயங்கரமாக கோபப்பட்டார்கள். உடனே அவர்கள், எதற்காக இதெல்லாம் வாங்கி வந்தாய் என்று கேள்வி கேட்டார்கள். அதற்கு சேது, எனக்கு தான் வாங்கி வந்தேன். இதில் என்ன பிரச்சனை என்று சென்று விட்டார். இன்னொரு பக்கம் போஸ், ராஜாங்கத்தை பழிவாங்க அவருடைய எதிர் உடனே கூட்டணி வைத்தார்.
தமிழ், தன்னுடைய துணிகளை எல்லாம் கைகளில் துவைக்க போனார். உடனே சேது, எல்லா பொருள்களும் வீட்டில் எனக்காக வாங்கினேன். அதை நீயும் உபயோகித்துக் கொள்ளலாம். அதுக்காக மாத வாடகை கொடுத்து விடலாம் என்றார். இதனால் தமிழமே எல்லா பொருட்களையும் உபயோகித்தார். இதை பார்த்து சேது மனதுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டார். பின் சேது, பொருட்களை பயன்படுத்தியதற்கு அட்வான்ஸ் தொகை 350 ரூபாய் கேட்டார். அதற்கு தமிழ், உங்களுடைய துணி எல்லாம் அயன் பண்ணி வைத்துவிட்டேன்.
சின்ன மருமகள் சீரியல்:
நீங்கள் தான் எனக்கு பணம் தரணும் என்றார். இன்னொரு பக்கம் பிக்னிக் போன கண்மணி, அவருடைய கணவரும் வந்துவிடுகிறார்கள். வீட்டில் எல்லோருமே சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தார்கள். பின் சேது, தமிழுக்காக பொருட்கள் வாங்கி வைத்திருக்கும் விஷயத்தை அறிந்த அப்பத்தா ரொம்ப சந்தோஷப்பட்டார். அதை பற்றி சேதுவிடம் கேட்டார். ஆனால், சேது எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தாமரையின் அம்மா ஆறுமுகத்தை வீடு துடைக்க சொல்லி வேலைக்காரன் ஆக நடத்துகிறார். இதையெல்லாம் பார்த்த கண்மணி, தாமரையின் அம்மாவை திட்டி விட்டு ஆறுமுகத்தை அங்கு இருந்து அழைத்துச் செல்கிறார். அதற்கு பின் தாமரை, அவர் அம்மா இருவருமே சேர்ந்து தமிழ் வரும் வழியில் எண்ணெயை ஊற்றி அவர் கீழே விழும் மாறு வேலை செய்கிறார்கள். ஆனால், தமிழ் அதிலிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் ஈஸ்வரி தன்னுடைய மகளுடன் சேர்ந்து தமிழ் வரும் வழியில் ஒரு பள்ளம் தோண்டி அது மேல் அவர் கால் வைத்து கீழே விழுந்து கர்ப்பம் கலையுமாறு ஏற்பாடு செய்கிறார். ஆனால், அதிலிருந்தும் தமிழ் தப்பித்து விடுகிறார். பின் வீட்டில் நடந்து வரும் போது தெரியாமல் தமிழ் ஸ்லிப் ஆகி விழுந்து விடுகிறார். உடனே வழி தாங்க முடியாமல் தமிழ் கத்திக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த சேது பதறி போய் தமிழை ஹாஸ்பிடலுக்கு அழைத்துக் கொண்டு செல்கிறார். இதையெல்லாம் பார்த்த ஈஸ்வரி, தாமரை அம்மா எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.