தமிழை அசிங்கப்படுத்திய ஹோட்டல் ஓனர், உண்மை அறிந்த சேது என்ன செய்ய போகிறார்? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தாமரையின் உடைய அம்மா, தமிழ்செல்வியை பற்றி ஒரு தவறான வீடியோவை காண்பித்தார். அதை பார்த்து சேது கோபப்படவில்லை. உடனே பதிலுக்கு ஒரு வீடியோவை சேது காண்பித்தார். அதில், நான் தமிழ்செல்வியை ஒருதலையாக காதலித்து உண்மைதான். ஆனால், அவள் காதலிக்கவில்லை. என்னை அவர் அண்ணா என்றுதான் அழைக்கிறார். நான் அவரை என் தங்கையாக தான் பார்க்கிறேன் என்று சொன்னார். இதை எல்லாம் பார்த்து தாமரையும் அவருடைய அம்மாவும் வாயடைத்து போனார்கள்.
தமிழ்செல்வியை பார்த்து கண்மணி, எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமே இல்லை. யாருமே என் விருப்பத்தை கேட்கவில்லை. எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லுங்கள் அண்ணி என்று ரொம்பவே கதறி அழுதார். அதற்கு தமிழ்ச்செல்வி, நான் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். நீ கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்லி அனுப்பினார். அதற்குப்பின் சேதுவை பார்த்து தமிழ்ச்செல்வி, கண்மணிக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இருக்கிறதா? என்று கேட்டீர்களா. அவள் யாரையாவது காதலிக்கிறாளா? என்று கேட்டு திருமணத்தை நடத்துங்கள் என்று சொன்னார். இதனால் கோபப்பட்ட சேது, என் தங்கை ஒன்றும் அப்படிப்பட்டவள் கிடையாது.
சின்ன மருமகள் சீரியல்:
உன்னை காதலித்த பாவத்திற்கு தான் நான் கஷ்டத்தை அனுபவிக்கிறேன். என்று தமிழ்செல்வியை திட்டி அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் சேதுவின் சித்தி ஈஸ்வரி, மாப்பிள்ளையின் அப்பாவிற்கு ஃபோன் செய்து திருமண சொத்தில் டீலிங் பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் மாப்பிள்ளை ஒரு ஹோட்டலில் தன்னுடைய நண்பர்களிடம் குடித்துக்கொண்டு மோசமாக பேசிக் கொண்டிருந்தார். அதோடு அந்த ஹோட்டலுக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்து அவர்களிடம் தவறாகவும் நடக்கிறார்கள். இது தெரியாமல் சேது தன்னுடைய தங்கையை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். இன்னொரு பக்கம் ஆறுமுகத்திடம் சேது, கண்மணி பற்றி விசாரித்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் தமிழ்ச்செல்வி வேலை தேடி அலைந்தார். அப்போது ஒரு ஓட்டலில் வேலைக்கு ஆள் தேவை என்பதை பார்த்து அந்த ஹோட்டல் ஓனரிடம் பேசி இருந்தார். அந்த ஹோட்டல் ஓனருமே வேலைக்கு எடுத்துக் கொண்டார். தமிழ்செல்வி வேலையை முடித்து வீட்டிற்கு வர லேட் ஆனது. இன்னொரு பக்கம் செய்து தமிழ் செல்வி வீட்டுக்கு வரவில்லை என்று ஈஸ்வரி, சேதுவிடம் ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வி இடம் சேது, எதற்காக லேட்டாக வந்தாய்? என்று கேட்டு சண்டை போட்டார்.
சீரியல் ட்ராக்:
உடனே தமிழ்ச்செல்வி, ஏன் கல்லூரி முடித்து லேட்டாக வந்தேன் என்று தன்மையாக கேளுங்கள் பதில் சொல்வேன். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் என்னை பற்றி தவறாக சொல்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னார். மறுநாள் காலையில் தமிழ்செல்வி நேரம் ஆகவே எழுந்து வேலைக்கு சென்று விட்டார். பின் வேலைக்கு சென்ற இடத்தில் தாமதமாக வந்ததால் அந்த ஓனர் தமிழ் செல்வியை திட்ட, இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தமிழ் செல்வி தன்னுடைய வேலை எல்லாம் முடித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பினார். இன்னொரு பக்கம் சேது தூங்கி எழுந்தவுடன் தாமரையும், அவர் அம்மாவும் தமிழ்செல்வி நேரமாக எழுந்து கிளம்பி சென்றதைப் பற்றி சொன்னார்கள். இதனால் கோபப்பட்ட சேது திட்டி விட்டு சென்றார்.
https://www.youtube.com/watch?v=DD2I5s0d9oQ
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் தமிழ்ச்செல்வி வேலை செய்யும் ஹோட்டலுக்கு சேது சாப்பிட வருகிறார். அங்கு தமிழ்செல்வியை பார்த்து அவர் ஷாக் ஆகிறார். பயத்தில் தமிழ்ச்செல்வி தண்ணியை சேது மீது ஊற்றி விடுகிறார். இதனால் அந்த ஓனர் தமிழ் செல்வியை திட்டி விடுகிறார். உடனே சேது, எதுவாக இருந்தாலும் தன்மையாக பேசுங்கள். யாரையும் திட்டாதீர்கள் என்று ஓனருக்கு அறிவுரை சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பின் வீட்டிற்கு வந்த தமிழ்செல்வி இடம் சேது, எதற்காக ஹோட்டல் வேலைக்கு போகிறாய் என்று கேட்கிறார். தமிழ் செல்வி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.