சேது-தமிழ்செல்வி விவாகரத்து வழக்கு, நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு - விறுவிறுப்பில் சின்ன மருமகள்

By subhashini · 6/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேதுவின் வீட்டில் பரஸ்பர விவாகரத்து வாங்கி தர வேண்டும் என்று வக்கீலை தமிழ் செல்வின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு தமிழ்ச்செல்வி இடம் வக்கீல் விவாகரத்துக்கு சம்மதமா? என்று கேட்டார். அதற்கு தமிழ் செல்வி, விவாகரத்துற்கு நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். எனக்கு கணவன் இல்லை என்றாலும் பரவாயில்லை. நான் கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு குழந்தை பிறக்கும்போது அந்த குழந்தைக்கு அப்பா வேண்டும் என்று சொன்னார்.

அதை வக்கில், சேது அப்பாவிடம் சொன்னார்கள். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள். தமிழ்ச்செல்வியின் அப்பா செல்லப்பாண்டி ராஜாங்கத்தின் பெயரைச் சொல்லி ஊர் முழுக்க கடன் வாங்கி இருந்தார்கள். இதை அறிந்த போஸ், கடன் கொடுத்தவரிடம் சேதுவின் அப்பா ராஜாங்கத்தின் மீது கம்ப்ளைன்ட் கொடுங்கள். அதற்காக நான் பணம் தருகிறேன் என்று சொன்னார் அதற்காக அந்த கடன் கொடுத்த நபர் ராஜாங்கத்தின் மீது புகார் கொடுத்தார். பின் இதைப் பற்றி செல்லப்பாண்டிக்கு தெரிய வந்தது.

சின்னமருமகள் சீரியல்:

இதனால் கொந்தளித்த தமிழ்ச்செல்வி, அந்த மனுஷன் கௌரவத்திற்கு எந்த கலங்கமும் வரக்கூடாது. அதற்கு என்ன பண்ண முடியுமோ பண்ணுங்கள் என்று சொன்னார். இன்னொரு பக்கம் செல்லப்பாண்டி செய்த வேலை ராஜாங்கத்திற்கு தெரிந்தது. அதோடு புகார் அளித்த விஷயத்தை அறிந்த சேதுபதி, செல்லப்பாண்டி மொத்த குடும்பத்தையும் பழி வாங்க கொந்தளித்தார். சேது வீட்டில் எல்லோருமே தமிழ்செல்வி குடும்பத்தின் மீது கோபப்பட்டார்கள்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் தமிழ்ச்செல்வி போலீஸ் உடன் சேதுவின் வீட்டிற்கு வந்தார். அங்கு எல்லோருமே தமிழ்செல்வி மீது கொலைகாண்டில் இருந்தார்கள். அப்போது தமிழ்ச்செல்வி, எல்லோரும்என்னை மன்னித்து விடுங்கள். என் மாமனார் மீது எந்த தவறும் இல்லை. என் அப்பா தான் இதையெல்லாம் செய்தார். அவர் செய்தது மிகப்பெரிய தவறு. அதனால் தான் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அவர் மீது கம்ப்ளைன்ட் கொடுத்து அவரை கைது செய்யவும் வைத்தேன். பாதிக்கப்பட்டவர்களிடமும் மாமா மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லிவிட்டேன். இனி நீங்கள் இந்த பிரச்சனையை பற்றி கவலை படவேண்டாம். இதை சொல்லிட்டு போக தான் இங்கு வந்தேன் என்று சொன்னார்.

சீரியல் ட்ராக்:

பின் தமிழ்செல்வி அங்கிருந்து கிளம்பி விட்டார். இருந்தாலுமே சேதுவின் அத்தை, சித்தி எல்லோருமே தமிழ்செல்வியை பற்றி தேவையில்லாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அப்பத்தா, தமிழ்ச்செல்வியின் மீது எந்த தவறும் இல்லை. தமிழ்ச்செல்வி கர்ப்பமாக இருக்கிறார் என்று அவர் அம்மா சொன்னார். ஊரு முழுக்க பொய் சொல்லி கடன் வாங்கியது அவர் அப்பா தான். எல்லா பிரச்சனைக்கும் தமிழ்ச்செல்வியின் அப்பா அம்மா தான் காரணம். தமிழ்செல்வி என்ன தவறு செய்தால் என்று கேட்டார். இருந்தாலுமே சேது, பாட்டி சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் அவளை மன்னிக்கவே மாட்டேன். இதைப்பற்றி என்னிடம் பேசாதீர்கள் என்று சேது கோபப்பட்டார்.

https://www.youtube.com/watch?v=_LcXrYBpgAg

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் புரோமோவில் கோர்ட்டில் சேது-தமிழ்செல்வி விவாகரத்து வழக்கு நடக்கிறது. அப்போது சேது, எனக்கு சேர்ந்து வாழ விருப்பமில்லை. விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்கிறார். பின் தமிழ்ச்செல்வி, எனக்கு விவாகரத்து கொடுக்க விருப்பமில்லை என்கிறார். அப்போது நீதிபதி, ரெண்டு பேருமே பரஸ்பரமாக முடிவெடுத்தால் தான் விவாகரத்து கொடுக்க முடியும் என்கிறார். அதற்கு தமிழ் செல்வி, நான் கர்ப்பமாக இருக்கிறேன். என் குழந்தை பிறக்கும்போது அவருக்கு அப்பா வேண்டும் என்று சொன்னார். உடனே நீதிபதி, ஆறு மாதம் இரண்டு பேரும் சேர்ந்து வாழுங்கள். மனது மாறுகிறதா என்று பார்க்கலாம் என்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full