விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சேது, தமிழ்செல்வி எடுத்த முடிவு என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கோவிலில் கிடா விருந்துக்கான ஆட்டை சாமி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கோயில் பூசாரி, தயவு செய்து இந்த கிடா விருந்தை விட்டு விடுங்கள். இதை மீறி செய்தால் உங்கள் குடும்பத்திற்கு தான் பிரச்சனை என்று சொல்வதால் கிடா விருந்தையே நிறுத்தி விட்டார்கள். அதற்கு பின் ஊர் மக்கள் எல்லோருமே தமிழ் செல்வி நடத்தும் மொய் விருந்துக்கு போனார்கள். அதை பார்த்து தமிழ்ச்செல்வி ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் எல்லோருக்குமே தமிழ்செல்வி சந்தோஷமாக சாப்பாட்டை பரிமாறி இருந்தார். அனைவரும் தமிழ்ச்செல்வியை பாராட்டி தங்களால் முடிந்த பண உதவியை கொடுத்து இருந்தார்கள். அதற்குப்பின் சேதுவின் அப்பத்தா, அம்மா, அண்ணி மூவருமே மொய் விருந்திற்கு வந்தார்கள்.
அப்போது அப்பத்தா, நீ சொன்ன பொய்தால்தான் குடும்பமே இப்படி இருக்கிறது என்று தமிழ்செல்வியை திட்டினார். அதற்குப்பின் மூவரும் சந்தோஷமாக மொய் விருந்து சாப்பிட்டு முடித்து தங்க வளையல், செயின், பணம் என்று வைத்தார்கள். இதை பார்த்த தமிழ்ச்செல்வி, இது எதுவும் எனக்கு வேண்டாம். என்னை உங்கள் பேரன் ரொம்ப மோசமாக திட்டிய போது நீங்கள் எதுவுமே பேசவில்லை என்று எமோஷனலாக பேசினார். பின் அவர்கள் கொடுத்த நகைகளை கொடுத்து விட்டார். அதற்குப்பின் சேதுவின் அண்ணி கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்க, இந்த பணத்தை நீ வாங்கவில்லை என்றால் உனக்கும் எனக்குமான உறவு முடிந்து விடும் என்று சொன்னார்.
சின்னமருமகள் சீரியல்:
சேதுவின் அண்ணி கொடுத்த பணத்தை தமிழ்ச்செல்வி வாங்கிக் கொண்டார். பின் அப்பத்தா, என்னால் நிம்மதியாக தூங்கவே முடியாது. தயவுசெய்து என்னிடம் இருந்து ஏதாவது வாங்கிக் கொள் என்று சொன்னார். உடனே தமிழ் செல்வி , உங்கள் சுருக்குப்பையில் இருக்கும் பணத்தை கொடுங்கள் போதும் என்றார். இன்னொரு பக்கம் சேது குடும்பம் உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தார்கள் . அங்குள்ள உறவினர் சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும் என்று அவர்களை உட்கார வைத்து விட்டார். பின் வீட்டில் உள்ள பெண்கள் சமைக்கவே இல்லை என்று சொன்னார்.
வெற்றி பெற்ற தமிழ்செல்வி:
இதனால் அவருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. உடனே அந்தப் பெண், தமிழ்ச்செல்வி சமைத்த சாப்பாட்டை காசு கொடுத்து வாங்கி வந்தார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி சமைத்த சாப்பாடு என்று தெரியாமல் சேதுவின் வீட்டில் உள்ள எல்லோருமே சாப்பிட்டு ஆஹா ஓஹோ என்று பாராட்டி இருந்தார்கள். அதற்குப்பின் அப்பத்தாவிடம் சேது, நீங்கள் மொய் விருந்துக்கு போனீர்களா? என்று விசாரித்தார். அப்பத்தா, ஆமாம் போனேன். நீ சாப்பிட்ட சாப்பாடு கூட தமிழ் செல்வி செய்து தந்தது தான் என்று சொன்னவுடன் சேது வாந்தி எடுப்பது போல செய்து கொண்டிருந்தார். பின் பணம் கொஞ்சம் குறைவாக இருப்பதால் கருப்பு சேதுவை சந்தித்து தன்னுடைய சம்பள பாக்கியை வாங்கி கொண்டு தமிழ்செல்வியிடம் கொடுத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேதுவுக்கு விவாகரத்து வாங்கி தர வீட்டில் உள்ள எல்லோருமே மும்முரமாக ஈடுபடுகிறார்கள். அப்போது சேதுவின் கனவில் அவருடைய அம்மா, நீ விவாகரத்து செய்யாதே. தமிழ்செல்வி உடன் சேர்ந்து வாழு என்று சொல்கிறார். உடனே தூக்கத்தில் இருந்து எழுந்த சேது, அவள் நம் குடும்பத்திற்கு தேவையில்லை. நான் தமிழ்செல்வியை விவாகரத்து செய்யத்தான் போகிறேன் என்று சொல்கிறார். அதற்குப்பின் சேது விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து போட்டு அனுப்பி வைக்கிறார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி வேகவேகமாக தன்னுடைய முதல் நாள் கல்லூரிக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து வக்கீல் நோட்டீஸ் வருகிறது. அதை பார்த்தவுடன் தமிழ்ச்செல்வி பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. இதை நான் எதிர்பார்த்ததுதான் என்று சொல்கிறார். விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய விஷயத்தை தெரிந்தவுடன் தமிழ்ச்செல்வியின் அம்மா, அப்பா, பாட்டி எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். பின் தமிழ்ச்செல்வி, நல்ல வக்கீல் பாருங்கள். எனக்கு அதைப் பற்றி எந்த கவலையும் இல்லை. நான் டாக்டர் ஆவது தான் என்னுடைய ஒரே லட்சியம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது