குழந்தையின் உரிமைக்காக தமிழ்செல்வி செய்த வேலை, கொந்தளிக்கும் சேது - சின்ன மருமகள்
குழந்தையின் உரிமைக்காக தமிழ்செல்வி செய்த வேலை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது தன்னுடைய மகன் கிடைத்த சந்தோஷத்தில் இருந்தார். சேது, குழந்தையை பார்த்துக்க சொல்லி குளிக்க போனார். ஆனால், ஐஸ்வர்யா குழந்தையை கண்டு கொள்ளாமல் பாட்டு கேட்டு இருந்தார். இதனால் கொந்தளித்த சேது, ஐஸ்வர்யாவை அடித்து விட்டார். அதற்கு பின் தமிழ்ச்செல்வி தன்னுடைய குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு எல்லோரிடமும் பெயர் எழுதி போட்டார். அதில் தமிழ் செல்வி நினைத்த சேது அம்மா பெயர் மீனாட்சி தான் வருகிறது.
வீட்டில் எல்லோரும் சந்தோசப்பட்டார்கள். இன்னொரு பக்கம் ராஜாங்கம் வீட்டிலும் சேதுவின் மகனுக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தார். அதில் ராஜாங்கம், அழகர் சேது என்று பேரனுக்கு பெயர் வைத்தார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷமாக கொண்டாடினார்கள். பின் தமிழ் தேர்வு இருப்பதால் தன் அம்மாவுடன் குழந்தையை அழைத்து கொண்டு கல்லூரி சென்றார்.
சின்ன மருமகள்:
கல்லூரிக்கு தமிழ்ச்செல்வி தேர்வு எழுத சென்றிருக்கிறார். அங்கு குழந்தையை தமிழ் அம்மா பார்த்துக் கொண்டார். குழந்தை அழுவதால் தமிழிடம் பால் கொடுக்க சொன்னார்கள். தமிழ் குழந்தையும் கவனித்துக் கொண்டு பரிட்சையும் நல்லபடியாக எழுதி முடித்தார். இதை பார்த்து தமிழின் அம்மா ரொம்பவே பெருமைப்பட்டார். இன்னொரு பக்கம் சேது தன்னுடைய மகளை அன்பாக பார்த்துக் கொண்டார். சேது தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐஸ்வர்யாவும் குழந்தையை அக்கறையுடன் கவனித்துக் கொண்டார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் குழந்தையை சனி ஞாயிறு இரண்டு நாட்கள் மாற்றி கொள்ள வேண்டும் பஞ்சாயத்தில் தீர்ப்பு வந்ததால் சேது-தமிழ் இருவரும் வந்தார்கள். மோகனா, குழந்தைக்கு அழகர் என்று பெயர் வைத்திருக்கும் விஷயத்தை சொன்னார். பின் குழந்தையை மாற்றிக் கொண்டார்கள். அப்பத்தா, குழந்தைக்கு லட்சுமி என்று பெயர் வைத்திருக்கிறோம் என்றார். அதைக் கேட்டு செய்து எமோஷனலாக அழுதார். பின் தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்ததை நினைத்து சேது ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதேபோல் தமிழும் தன்னுடைய மகனை பார்த்து சந்தோஷப்பட்டார்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் பெண் குழந்தையின் சர்டிபிகேட்டில் பெயருக்கு முன்பு இன்சீலாக தமிழினுடைய பெயர் இருக்கிறது. இதை பார்த்த ஈஸ்வரி, சேதுவிடம் சொல்கிறார். உடனே கொந்தளித்த சேது, தமிழுக்கு போன் செய்து எப்படி என் குழந்தையின் பெயருக்கு முன் உன் பெயரை வைக்கலாம் என்று கேட்கிறார். தமிழ், என் மகனுடைய பெயருக்கு முன்னால் உங்களுடைய இன்சில் இருக்கும் போது என்னுடைய மகளின் பெயருக்கு முன்னால் என்னுடைய இன்சியல் தான் இருக்கும் என்கிறார்.