நன்றி சொன்ன சேது, எமோஷனலாக தமிழ் செல்வி சொன்ன விஷயம், அடுத்து என்ன? சின்ன மருமகள்

By subhashini · 8/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸ் மருந்தை எடுத்து வந்து சித்தரிடம் கொடுத்தார். அவர் அந்த மருந்தை பார்த்துவிட்டு எல்லோருக்குமே கொடுக்க, சில பேர் குணமடைந்து விட்டார்கள். சில பேர் இன்னும் ஆபத்தான கட்டத்தில் தான் இருந்தார்கள். இன்னொரு பக்கம் சேது, மருந்து எடுக்கும் போது அந்த வண்டு கடித்து விட்டது. இதனால் அவர் பாதி மயக்கம் நிலையில் தான் இருந்தார். பின் சேது, தான் வரும் வழியில் தமிழ் விழுந்து கிடப்பதை பார்த்து அவரை எழுப்ப பார்த்தார்.

இருந்தும் தமிழ் எழவே இல்லை. பின் தமிழை தூக்கிக்கொண்டு சேது ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டார். தமிழ் இறந்துவிட்டார் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். டாக்டர்களும் தமிழுக்கு சிகிச்சை கொடுத்தார்கள். சேதுவுமே எதுவும் சரியாக பேச முடியாமல் தான் எடுத்து வந்த மருந்தை கொடுத்து மயங்கி விழுதார். வீட்டில் உள்ள எல்லோரும் பதறினார்கள்.

சின்ன மருமகள்:

இன்றைய எபிசோட்டில் சேது கொண்டு வந்த மருந்தை வைத்து எல்லோருக்குமே கொடுத்து காப்பாற்றி விடுகிறார்கள். எல்லோரும் கண்விழித்து விடுகிறார்கள். ஆனால், தமிழ்ச்செல்விக்கு பூச்சி கடிக்கவில்லை என்று சித்தர் சொல்கிறார். டாக்டர்களுமே தமிழ்ச்செல்விக்கு தீவிரமாக சிகிச்சை கொடுக்கிறார்கள். அதற்குப்பின் ஊர் கிராம மக்கள் எல்லோருமே சேதுவையும் போசையும் பாராட்டி பேசுகிறார்கள். அதற்கு பின் போஸ், அவருடைய அம்மா, அக்கா இருவருமே பாராட்டி பேசுகிறார்கள்.

இன்றைய எபிசோட்:

அப்போது போஸ், இந்த மருந்தை தமிழ்ச்செல்வி தான் எடுத்து வந்தார். ஆனால், அவளுக்கே தெரியாமல் அவளை அடித்துவிட்டு மருந்தை கொண்டு வந்தேன் என்று சொன்னவுடன் ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார்.
அதற்குப்பின் தமிழ்ச்செல்வி கண்விழிக்கிறார். அப்போது சேது, நான் சொன்னாலும் நீ கேட்கவில்லை. எதற்காக இப்படி எல்லாம் செய்கிறாய் என்று திட்டுகிறார். தமிழ் செல்விக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் அமைதியாக இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=nJ76o_4jHGc

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சேது, என் குடும்பத்தில் உள்ள பாதி பேருக்கு உன்னை பிடிக்காது. இருந்தாலும் அவர்களுடைய உயிரை காப்பாற்ற நீ காட்டுக்குள் சென்றாய். ரொம்ப நன்றி என்று சொல்கிறார். அதற்கு தமிழ், நீங்கள் என்னுடைய குடும்பத்தை உங்களுடைய குடும்பமாக நினைத்து செய்தீர்கள். அதேபோல்தான் நானும் உங்களுடைய குடும்பத்தை என்னுடைய குடும்பமாக நினைத்தேன். நமக்குள் இப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், நாம் முன்பு வைத்திருந்த பாசம் உண்மை என்று சொல்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full