தமிழுக்காக பார்த்து பார்த்து செய்யும் சேது, வயிறு எரியும் ஈஸ்வரி - சின்ன மருமகள்

By subhashini · 4/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, நீ இங்கிருந்து கிளம்பு. இந்த தமிழின் ஆட்டத்தை அடக்கி விட்டு உன்னை கூப்பிடுகிறேன் என்றார். அதற்குப்பின் சேது வீராப்பிற்காக தமிழ்ச்செல்வியை வெறிப்பேற்ற சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டார். இதனால் ஜீரணம் ஆகாமல் சேது வாமிட் செய்தார். இதையெல்லாம் பார்த்த தமிழ் அவருக்கு நாட்டு வைத்தியம் செய்தார். அதற்குப் பிறகு சேது உடல்நிலை சரியாகிறது. பின் சேது, எதற்காக இதை செய்தாய் என்று கேட்டார். அதற்கு தமிழ், இருவரும் ரூமேட் என்றார்.

ஈஸ்வரி தன்னுடைய மகனை எப்படியாவது அங்கேயே தங்க வைக்க பேசினார். அப்போது ராஜாங்கம், இந்த முடிவு நான் எடுக்க முடியாது மலர் தான் எடுக்கணும் என்றார். உடனே மலர், என்னால் போஸுடன் இனி சேர்ந்து வாழ முடியாது. தயவு செய்து எங்கள் இருவரையும் பிரித்து வைத்து விடுங்கள் என்றார். கோபத்தில் ஈஸ்வரி, மலரை திட்டினார். பின் மலர் -போஸ் இருவரையுமே ராஜாங்கம் பிரித்து விட்டார். மலர் தன் கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி போஸிடம் கொடுத்து விட்டார். அதோடு போஸ் இனி இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்றார் ராஜாங்கம். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கர கோபம் வந்தது.

சின்ன மருமகள் சீரியல்:

தமிழ்ச்செல்வி, ஸ்கேன் செய்ய ஹாஸ்பிடல் போகணும். நீங்கள் வருவீர்களா? என்று கேட்க, கோபத்தில் சேது திட்டி விட்டு போனார். இதனால் தமிழ்செல்வி ரொம்பவே மனமடைந்து விட்டார். இன்னொரு பக்கம் மலரை பார்த்து தாமரையின் அம்மா, நீ இனிமேல் இந்த வீட்டு மருமகள் கிடையாது. வேலைக்காரி தான். அதற்கான உடைகளை போடு என்று திட்டினார். உடனே ராஜாங்கம், நீ எப்போதும் இந்த வீட்டு மருமகள் தான் என்று மலருக்கு சப்போர்ட் செய்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வி அம்மா, அப்பத்தாவிடம் ஹாஸ்பிடலுக்கு போகும் விஷயத்தை பற்றி சொன்னார்.

சீரியல் ட்ராக்:

பின் அப்பத்தா ஹாஸ்பிடல் செல்லும் விஷயத்தை அறிந்த தாமரையின் அம்மா, ஈஸ்வரி எல்லோருமே திட்டினார்கள். இருந்தாலும் அப்பத்தா அதை கண்டுகொள்ளவில்லை. ஹாஸ்பிடலில் தமிழ்ச்செல்வியை செக் பண்ண டாக்டர், இரட்டை குழந்தை என்று சொன்னார். இதை கேட்டு தமிழ் செல்வின் அம்மாவும், அப்பத்தாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். அப்போது அப்பத்தா, இந்த விஷயத்தை தமிழ்செல்வி இடம் சொல்ல வேண்டாம். என் பேரன் பேதியை சேர்த்து வைக்க வேண்டும் என்றார். இந்த விஷயம் தமிழ் செல்விக்கு தெரியவில்லை.

இன்றைய எபிசோட்:

இன்று எபிசோட்டில் இரட்டை குழந்தை விஷயத்தை தமிழிடம் இருந்து அவர் அம்மா மறைத்து விடுகிறார். ஆனால், தமிழுக்கு அப்பத்தா மீது சந்தேகப்படுகிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த அப்பத்தா, ஹாஸ்பிடலில் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்கிறார். ஆனால், இரட்டை குழந்தை விஷயத்தை சொல்லவில்லை. இதை எல்லாம் கேட்ட சேது கடுப்பாகி அப்பத்தாவை திட்டிவிட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி தன்னுடைய அம்மாவிடம் ஏதாவது என்னிடம் மறைக்கிறீர்களா? என்ன பிரச்சினை என்று கேட்கிறார். ஆனால், தமிழ்செல்வியின் அம்மா ஏதேதோ சொல்லி அனுப்புகிறார். அதற்குப்பின் வெளியே வரும்போது தரை வழுக்கியதால் சேது, தமிழ்செல்விக்கு அடிபட்டு விடுமோ என்று பயந்து ஒரு பேப்பரில் கவனமாக செல்லவும் என்று எழுதி வைத்துவிட்டு செல்கிறார்.

https://www.youtube.com/watch?v=dVJ3kr6GSCg

சீரியல் ப்ரோமோ:

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தமிழ்ச்செல்வி, துணிகள் அதிகமாக இருப்பதால் கையில் துவைக்க போகிறார். உடனே மலர், நான் துவைத்து தருகிறேன் என்றார். இதையெல்லாம் பார்த்த சேது, தமிழ் கர்ப்பமாக இருப்பதால் வீட்டிற்கு தேவையான பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி என அனைத்து பொருட்களையுமே வாங்கி வருகிறார். இதையெல்லாம் பார்த்து தாமரை அம்மா, ஈஸ்வரி கடுப்பாக்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full