தமிழுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நினைக்கும் சேது, அடுத்து என்ன? விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், மலரை வாழ்க்கை என்னாவது? என்றார். அதற்கு ஈஸ்வரி, என் பையனுடன் சேர்ந்து வாழ மாட்டாள் என்று சொன்னது அவள்தான். என் மகனின் வாழ்க்கை வீணடிக்க முடியாது. தயவு செய்து அந்த எம்எல்ஏ மகளுடன் என் மகனை திருமணம் செய்து வையுங்கள் என்றார். அதற்கு ராஜாங்கம், நான்பார்க்கிறேன் என்று சொன்னார். இன்னொரு பக்கம் கல்லூரியில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். பின் தமிழின் பிறந்தநாள் என்பதால் கல்லூரியில் எல்லோருமே கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
தமிழ்ச்செல்வியின் பிறந்த நாள் என்பதால் அப்பத்தா வீட்டில் அலங்காரம் எல்லாம் செய்து கேக் ஏற்பாடு செய்தார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே வந்து விட்டார்கள். அப்போது தமிழ்ச்செல்வி அங்கு வந்தார். உடனே அப்பத்தா, தமிழ்ச்செல்வியின் பிறந்தநாளுக்கு இதை செய்தேன் என்றார். உடனே கோபப்பட்ட ஈஸ்வரி, கேக்கை தூக்கிப்போட்டு தமிழ் செல்வியை பயங்கரமாக திட்டிக் கொண்டிருந்தார். தாமரையின் அம்மாவும் ஒத்துமோளம் ஒதினார். இதையெல்லாம் பார்த்த ராஜாங்கம், எதற்கு இந்த தேவையில்லாத வேலை என்றார். சேதுவால் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்பினார்.
சின்ன மருமகள்:
இன்று எபிசோட்டில் அப்பத்தா எமோஷனலாக பேசி தமிழ் செல்விக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லினார். பின் தமிழின் தங்கை, இன்று முடிவதற்குள் அக்காவிற்கு நீங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்டிப்பாக செல்வீர்கள் என்று சவால் விட்டு போகிறார். ஆனால், சேது எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி, சேது தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது அனாதை ஆசிரமத்தில் இருந்து போன் செய்த மேரி, உங்களின் பிறந்தநாளுக்காக மூன்று வேலையும் அன்னதானம் போட சொல்லி இருக்கிறார் சேது.
சீரியல் ட்ராக்:
குழந்தைகள் நன்றி சொல்லி உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்கள் என்கிறார். இதை கேட்டு தமிழ் ரொம்பவே எமோஷனலாகி கதறி அழுகிறார். இன்னொரு பக்கம் தன் மகனின் திருமணத்திற்காக ஈஸ்வரி ராஜாங்கத்திடம் பேசுகிறார். அவருமே எம்எல்ஏவுக்கு போன் செய்து போஸை பற்றி சொல்கிறார். அவர்களும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார்கள். இதை பார்த்து மலர் சங்கடப்படுகிறார். இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஈஸ்வரி சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஆடுகிறார்.
https://www.youtube.com/watch?v=LNRxsxfQOFs
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தமிழ்செல்வியின் பிறந்தநாளுக்காக சேது, அனாதை ஆசிரமத்திற்கு மூணு வேலை சாப்பாட்டை கொடுத்திருக்கிறார். இந்த விஷயம் அறிந்த தமிழ்ச்செல்வி ரொம்ப எமோஷனலாக அழுது சந்தோசப்படுகிறார். இன்னொரு பக்கம் சேது, 12 மணி முடிய இன்னும் மூன்று நிமிடங்கள் இருப்பதால் எப்படியாவது தமிழ்ச்செல்வி இடம் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். பின் தமிழ்செல்வியை பார்க்கவும் உள்ளே வருகிறார். ஆனால் எதுவும் பேசாமல் சேது அமைதியாக இருக்கிறார்.