தமிழ்செல்வி மீது இருந்த கோபத்தில் சேதுபதி செய்த காரியம், இனி அடுத்து என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வி ஈர துணியோடு சாமி முன்பு கற்பூரம் ஏத்தி சத்தியம் செய்து இந்த குடும்பத்திற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்றார். சேது எதுவும் சொல்லாமல் கோபப்பட்டார். பின் தமிழ்ச்செல்வி, ராஜாங்கம் வீட்டிலிருந்து நடந்தே தன்னுடைய வீட்டிற்கு சென்றார். வயிற்றில் குழந்தைகளை வைத்துக்கொண்டு தமிழ்செல்வி ரொம்ப கஷ்டப்பட்டு சென்றார். அக்கம் பக்கத்தில் எல்லோருமே தமிழ்ச்செல்வி நினைத்து வருத்தப்பட்டார்கள். இன்னொரு பக்கம் சேதுவின் கோபத்தை தணிக்க வீட்டில் உள்ள எல்லோருமே பொறுமையாக அமைதியாக இருக்க சொன்னார்கள்.
சேது, இனி தமிழ் செல்விக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அவளைப் பற்றி பேசக்கூடாது என்று கோபமாக பேசிவிட்டு சென்றார். அப்பத்தா, தன் மகனையும் பேரணையும் நினைத்து ரொம்பவே எமோஷனலாக அழுதார். பின் தன்னுடைய வீட்டிற்கு வந்த தமிழை பார்த்து அவருடைய அப்பா, அம்மா பதறினார்கள். அப்போது தமிழ், எனக்கும் அந்த குடும்பத்திற்குமான உறவு அறுந்துவிட்டது என்று சொன்னார். இதைக் கேட்டு தமிழ்செல்வியின் அம்மா ஷாக் ஆகி நின்றார்.
சின்ன மருமகள்:
இன்றைய எபிசோட்டில் சாவித்திரி, தாமரை இருவரும் மீண்டும் வீட்டிற்கு வந்ததை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். அப்போது வந்த ஈஸ்வரி, நீங்கள் கிளம்பவில்லையா? என்று கேட்கிறார். சாவித்திரி கோவப்பட்டு ஈஸ்வரிடம் சண்டைக்கு போகிறார். இன்னொரு பக்கம் சேதுவை சேதுபதி வழிமறித்து நீதிமான் பேசுகிறார். அப்போது நீதிமான், உங்கப்பன் உடைய பதவி பறிக்கப்பட்டது. உங்க அப்பன் மட்டும் கொலை செய்தது உறுதியானால் காலம் முழுக்க கம்பி எண்ண வேண்டியதுதான் என்று ராஜாங்கத்தை மோசமாக பேசிக் கொண்டிருக்கிறான்.
சீரியல் ட்ராக்:
இதனால் கோபப்பட்ட சேது, என் அப்பா நிரபராதி என்று நிரூபிப்பேன் என்று சவால் விட்டு வருகிறார்.
இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி, சேது சொன்ன வார்த்தை எல்லாம் நினைத்து கோபப்படுகிறார். பின் சேதுவின் புகைப்படத்தை பார்த்து கோபப்பட்ட தமிழ் செல்வி, அதை தூக்கி போட்டு உடைக்கிறார். தமிழ் செல்வி அம்மா, எவ்வளவோ சமாதானம் செய்ய பார்க்கிறார். ஆனால், தமிழ்ச்செல்வி கேட்கவில்லை. இன்னொரு பக்கம் சேது வீட்டிற்கு வந்தவுடனே ஈஸ்வரி வழக்கம் போல தமிழுக்கு சப்போர்ட்டாக பேசுவது போல நடிக்கிறார். கோபத்தில் சேது, அவளைப் பற்றி இந்த வீட்டில் யாரும் எதுவும் பேசக்கூடாது. அவளுக்கும் இந்த குடும்பத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கத்தி விட்டு செல்கிறார்.
https://www.youtube.com/watch?v=HRzRkQOKlZk
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தமிழ், சேதுவின் போட்டோவை வீட்டிற்கு வெளியே எடுத்து வந்து தூக்கிப்போட்டு உடைக்கிறார். இன்னொரு பக்கம் சேது, தமிழின் புகைப்படத்தை தூக்கிப்போட்டு உடைத்து அவருடைய பொருள்களை எல்லாம் தூக்கி வெளியே போடுகிறார். இதை பார்த்து கருப்பன், எதற்காக இப்படி செய்கிறாய் மாப்பிள்ளை? என்று கேட்கிறார். சேது, அவள் சம்பந்தப்பட்ட ஒன்னு கூட இந்த வீட்டில் இருக்கக் கூடாது. எடுத்துக் கொண்டு வெளியே போங்க என்று கத்துகிறார்.