தீபாவளிக்காக அப்பத்தா வைத்த கோரிக்கை, சேது எடுத்த அதிரடி முடிவு - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்செல்வி, எல்லோருக்கும் டீ கொடுத்து வேலை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து ராஜாங்கவிற்கு கோபம் அதிகமாகின்றது. பின் வீட்டிற்கு வந்த ராஜாங்கம், தமிழ் ஹோட்டலில் வேலை செய்வதை பற்றி சொல்லி கொண்டிருந்தார். அப்போது அப்பத்தா, அவள் செய்யும் வேலை ஒன்னும் தவறு கிடையாது. தன்னுடைய சொந்தக் காலிலே நின்று சுயமரியாதையை விடாமல் சம்பாதித்து தன்னுடைய லட்சியத்திற்காக போராடிக் கொண்டிருந்தார். அவள் செய்வது சரிதான் என்று அப்பத்தா சப்போர்ட் செய்து பேசி இருந்தார்.
தமிழ்ச்செல்வி, எனக்கு இப்போதெல்லாம் பசி அதிகமாக இருக்கிறது. குழந்தையுடைய அசைவு தெரிகிறது என்று ரொம்ப சந்தோஷமாக தன்னுடைய தங்கையிடம் பேசினார். தனமுமே தமிழின் வயிற்றில் கையை வைத்து பார்த்து சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் சேது பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷயத்தை தமிழ், தனத்திடம் சொன்னார். உடனே தனம், சேதுவிடம் வம்பு இழுத்து சண்டை வாங்கினார்.
அதற்குப்பின் மலர், தமிழ் தங்கி இருக்கும் இடத்திற்கே வந்து விட்டார்.
சின்ன மருமகள்:
அப்போது மலர், போஸுக்கு கல்யாணம் நடக்க இருக்கிறது. என்னால் அங்கு இருக்க முடியவில்லை என்றார். இதைக் கேட்ட தமிழ், நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் என்றார். அதற்குப்பின் அப்பத்தா, வீட்டில் உள்ள எல்லோரையுமே அழைத்து தீபாவளி கொண்டாடுவதை பற்றி பேசிஇருந்தார். அப்போது அப்பத்தா, குடும்பமாக சேர்ந்து கொண்டாடலாம். இதில் தமிழ்செல்வியும் சேர்த்துக் கொள்ளலாம் என்றார். அப்போது ராஜாங்கம், சேதுதான் எதுவாக இருந்தாலும் இந்த விஷயத்தில் முடிவெடுக்கணும் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ் தன்னுடைய குடும்பத்திற்காக செய்த உதவிகள் எல்லாம் நினைத்து பார்த்த சேது, தமிழுடன் என்னால் கடைசி வரை சேர்ந்து வாழ மாட்டேன். ஆனால், அப்பத்தாவிற்காக இந்த தீபாவளியை சேர்ந்து கொண்டாட ஒத்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். இதனால் அப்பத்தா ரொம்பவே சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் அப்பத்தா, தமிழ் செல்வியை அழைத்து தீபாவளிக்கு வீட்டிற்கு வர சொல்கிறார். ஆனால், தமிழ்ச்செல்வி மறுக்கிறார். உடனே அப்பத்தா நடந்ததை எல்லாம் சொன்னவுடன் தமிழ்ச்செல்வி ஒத்துக் கொள்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் அப்பத்தா, தமிழ்ச்செல்வி எல்லாருமே சேர்ந்து தீபாவளி பலகாரங்களை செய்கிறார்கள். மறுநாள் காலையில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக அப்பத்தா, தமிழ் - மலர் இருவருக்குமே புது புடவை, நகைகளை எல்லாம் கொடுத்து விடுகிறார். ஆனால், தமிழ்ச்செல்வி வேண்டாம் என்கிறார். இருந்தாலுமே வலுக்கட்டாயமாக தனம் அவர்களை கட்டிக்கொள்ள சொல்கிறார். அதற்குப் பின் சேதுவும் தீபாவளிக்கு தயாராகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.