தன் குடும்பத்திற்காக அடர்ந்த காட்டுக்குள் செல்லும் சேது, தமிழ் எடுத்த முடிவு - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது-தமிழ் இருவரும் தீ பந்தத்தை காண்பித்து ராஜாங்கம் குடும்பத்தை ஒரு வழியாக அந்த இவண்டுகளிடமிருந்து காப்பாற்றி அழைத்து வந்தார்கள். வரும் வழியில் தமிழ்ச்செல்வி எல்லோருக்குமே ஆன்டிபயாடிக் இன்ஜெக்ஷன் போட்டார். வலி தாங்க முடியாமல் ஒவ்வொருவருமே கதறிக் கொண்டிருந்தார்கள். அதோடு வண்டு பூச்சியால் கடிபட்டவர்கள் இறந்து கிடந்தார்கள். அதை பார்த்து சேது- தமிழ் இருவருமே பதறி போனார்கள். மருத்துவர்கள் எல்லோருமே என்ன செய்வது என்று புலம்பி இருந்தார்கள்.
அந்த இடத்திற்கு சித்தர் போல ஒருவர் வந்தார். அவர், இந்த விச வண்டு கடித்தால் அதற்கு மருந்தே கிடையாது. பல மைல் தூரத்தில் அந்த விஷ வண்டுகள் கூடு கட்டி இருக்கு. அந்த இடத்தில் தான் அதற்கான மருந்து இருக்கிறது. ஆனால், அந்த இடத்திற்கு போனவர்கள் யாருமே உயிருடன் திரும்பி வருவதில்லை. அந்த மருந்தை எடுத்து வருவது கடினம். இவர்களை காப்பாற்றுவதும் நடக்காத ஒன்று என்றெல்லாம் சொன்னார். இதைக் கேட்டு எல்லோருமே பதறினார்கள். அதற்குப்பின் சேது தன்னுடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு கேம்பிற்கு வந்து விட்டார்.
சின்ன மருமகள்:
மருத்துவர்கள் எல்லோருமே அவர்களுக்கு உடனடியாக சிகிச்சையும் கொடுக்கிறார்கள். சேதுவும் தன்னுடைய குடும்பத்தை நினைத்து ரொம்பவே பரிதவித்து நிற்கிறார். இன்னொரு பக்கம் போஸ், எதிரியுடன் சேர்ந்து ராஜாங்கம் இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். வண்டு கடித்து ராஜாங்கம் குடும்பத்தில் எல்லோருமே ஹாஸ்பிடலில் அவஸ்தை பட்டு இருப்பதை அறிந்து சந்தோஷப்பட்டார்கள். போஸ், தன்னுடைய அம்மா, தங்கை இருவருமே பாதிக்கப்பட்டு இருப்பதை நினைத்து கவலைப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஹாஸ்பிடலில் வழி தாங்க முடியாமல் எல்லோருமே கதறி அழுகிறார்கள். மருத்துவர்களுக்குமே எந்த மருந்து கொடுப்பது என்று புரியாமல் குழம்பி போய் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சேது, இதற்கு என்னதான் வழி? என்று கேட்டார். அதற்கு அந்த கிராம மக்கள், சித்தர் சொல்லும் இடத்திற்கு போனால் தான் அந்த மருந்து கிடைக்கும் என்கிறார்கள். உடனே சேது, அந்த சித்தரை தேடி செல்கிறார். தமிழுமே சேதுவுக்கு தெரியாமல் அவர் பின்னாடியே செல்கிறார். அப்போது அந்த சித்தர், பல மைல் தூரத்தில் ஆயிரம் கணக்கான வண்டுகள் வசிக்கும் கூட்டில் தான் வண்டு கடிக்கான மருந்து இருக்கிறது. ஆனால், அதை எடுத்து வருவது ரொம்பவே கஷ்டம்.
சீரியல் ட்ராக்:
அந்த இடத்திற்கு போனவர்கள் யாருமே உயிருடன் வந்ததே கிடையாது என்றெல்லாம் சொல்கிறார். உடனே சேதுவும் அந்த வண்டு இருக்கும் இடத்திற்கு செல்ல நினைக்கிறார். தமிழ்ச்செல்வியுமே மருந்தை கண்டுபிடிப்பதற்காக காட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் செல்கிறார். இன்னொரு பக்கம் ராஜாங்கம் குடும்பத்தில் எல்லோருமே வழி தாங்க முடியாமல் கதறுகிறார்கள். மருத்துவர்கள் போடும் மருந்து எதுவும் பயனளிக்கவில்லை. எல்லோருமே அபாய கட்டத்திற்கு சென்று விடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.