பிரசவ வலியால் தவிக்கும் தமிழ்செல்வி, உதவி செய்யும் சேதுவை தடுக்கும் ஐஸ்வர்யா - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்செல்வியும் தன் கழுத்தில் இருக்கும் தாலியை தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்குப் பின் சேது- ஐஸ்வர்யா நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதை பார்த்து அப்பத்தா, இவ்வளவு அநியாயம் செய்வீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை. இனி உங்கள் குடும்பத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் உங்களை அத்து விடுகிறேன் என்று அங்கு இருந்து கிளம்பி போனார். ஈஸ்வரி, அப்பத்தாவ அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றார். தமிழ்செல்வியின் வீட்டிற்கு வந்த அப்பத்தா, கோவிலில் நடந்ததை எல்லாம் சொல்லி எமோஷனல் ஆக அழுதார். தமிழ்ச்செல்வி, அப்பத்தாவிற்கு ஆறுதல் சொன்னார்.
சாவித்திரி, தாமரை இருவரும் திருமணத்தை நிறுத்துவதற்காக சேதுவிடம் பேசி இருந்தார்கள். இதைக்கேட்ட ஈஸ்வரி அந்த இடத்திற்கு வந்து சேதுபதியை அங்கிருந்து அனுப்பி விட்டார். அதற்குப்பின் ரூமில் சேது தனியாக இருப்பதை அறிந்த ஐசு ரொம்ப அன்பாகவும் அக்கறையாகவும் பேசி இருந்தார். ஆனால் சேதுவிற்கு அதில் விருப்பமே இல்லை. சேதுவுக்கும் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று யோசித்து கொண்டு இருந்தார். ஐசு நெருங்கி வரும் போதெல்லாம் சேது திட்டி அனுப்பி விட்டார். இதைப் பற்றி ஐசு, ஈஸ்வரிடம் சொல்லிக் புலம்பினார்.
சின்ன மருமகள்:
இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி தன்னுடைய படிப்பு விஷயத்தில் மட்டும் தான் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். அப்பத்தா வீட்டில் உள்ள எல்லோருமே தமிழ் வாழ்க்கையை பற்றி எடுத்துச் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால், தமிழ் செல்வி அதை கேட்பதாகவே இல்லை. அதற்குப்பின் சேது, இந்த திருமணத்தை நிறுத்த முடியுமா? இப்போதைக்கு திருமணம் வேண்டாம். ஐசுவின் அப்பா அம்மாவிடம் எடுத்து சொல்லி புரிய வையுங்கள் என்றார். ஈஸ்வரி, அதெல்லாம் முடியாது. எல்லாம் ஏற்பாடுகளும் நடந்துவிட்டது. நாளை உனக்கும் ஐசுவுக்கும் திருமணம் என்றார். இதை கேட்ட ஐசு, சேது காலில் விழுந்து தயவுசெய்து என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கதறி அழுதார். பின் சாவித்திரி, ஐஸ்வர்யாவை கடத்த திட்டம் போட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேது, திருமணத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். அப்போது கருப்பு, தமிழ் செய்த நல்ல விஷயங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், சேது அதை பெரிதாக கண்டுகொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா சந்தோஷமாக திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் கல்லூரிக்கு செல்வதற்காக தமிழ் செல்வி கிளம்புகிறார். அப்பத்தா, நானும் வருகிறேன் என்று சொல்லியும் தமிழ் வேண்டாம் என்று ஆட்டோவில் கிளம்பி போகிறார். வரும் வழியில் தமிழ்ச்செல்வியின் ஆட்டோவின் மீது ஒரு லாரி மோதி விடுகிறது.
சீரியல் ட்ராக்:
அப்போது தமிழ்செல்வி ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வழியாக ஐஸ்வர்யா-சேது இருவரும் காரில் வந்து கொண்டிருக்கிறார்கள். சேது, யாரோ ஒருவர் அடிபட்டு இருக்கிறார் என்று கிட்ட வந்து பார்க்கிறார் .தமிழ் செல்வி என்று தெரிந்தவுடன் சேது ஷாக் ஆகிறார். ஐஸ்வர்யா, நமக்கு நேரம் ஆகிறது. ஆம்புலன்ஸ் வர சொல்லிவிட்டு நாம் கிளம்பலாம் என்று சேதுவை கூப்பிடுகிறார். சேது கோபத்தில் ஐஸ்வர்யாவை திட்டிவிட்டு தமிழை தூக்கிக்கொண்டு காருக்கு செல்கிறார். அப்போது சாவித்திரி வைத்த ஆட்கள் ஐஸ்வர்யாவை கடத்துகிறார்கள். உடனே சேது அந்த ஆட்களை எல்லாம் அடித்து போடுகிறார்.