தமிழுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னாரா சேது? மலர் எடுத்த அதிரடி முடிவு - சின்ன மருமகள்

By subhashini · 16/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வியின் பிறந்த நாள் என்பதால் அப்பத்தா வீட்டில் அலங்காரம் எல்லாம் செய்து கேக் ஏற்பாடு செய்தார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே வந்து விட்டார்கள். அப்போது தமிழ்ச்செல்வி அங்கு வந்தார். உடனே அப்பத்தா, தமிழ்ச்செல்வியின் பிறந்தநாளுக்கு இதை செய்தேன் என்றார். உடனே கோபப்பட்ட ஈஸ்வரி, கேக்கை தூக்கிப்போட்டு தமிழ் செல்வியை பயங்கரமாக திட்டிக் கொண்டிருந்தார். தாமரையின் அம்மாவும் ஒத்துமோளம் ஒதினார். இதையெல்லாம் பார்த்த ராஜாங்கம், எதற்கு இந்த தேவையில்லாத வேலை என்றார். சேதுவால் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்பினார்.

அப்பத்தா எமோஷனலாக பேசி தமிழ் செல்விக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லினார். பின் தமிழின் தங்கை, இன்று முடிவதற்குள் அக்காவிற்கு நீங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்டிப்பாக செல்வீர்கள் என்று சவால் விட்டு போனார். ஆனால், சேது எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி, சேது தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது அனாதை ஆசிரமத்தில் இருந்து போன் செய்த மேரி, உங்களின் பிறந்தநாளுக்காக மூன்று வேலையும் அன்னதானம் போட சொல்லி இருக்கிறார் சேது.

சின்ன மருமகள்:

குழந்தைகள் நன்றி சொல்லி உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்கள் என்றார். இதை கேட்டு தமிழ் ரொம்பவே எமோஷனலாகி கதறி அழுதார். இன்னொரு பக்கம் தன் மகனின் திருமணத்திற்காக ஈஸ்வரி ராஜாங்கத்திடம் பேசி இருந்தார். அவருமே எம்எல்ஏவுக்கு போன் செய்து போஸை பற்றி சொன்னார். அவர்களும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார்கள். இதை பார்த்து மலர் சங்கடப்பட்டார். இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஈஸ்வரி சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஆடினார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்செல்வியின் தங்கை, போட்டியில் நான் தான் வெற்றி பெற்றேன். நீங்கள்அக்காவின் பிறந்தநாளுக்கு கொடுத்த கிஃப்ட்டும், வாழ்த்தும் சூப்பராக இருக்கிறது என்று சொல்கிறார். அப்போது சேது பிளாஷ்பேக்கை நினைத்துப் பார்க்கிறார். ஆசிரமத்தில் இருந்து சேதுவுக்கு போன் செய்த மேரி, தமிழ்ச்செல்வியின் பிறந்தநாளுக்கு ஸ்பான்சர் செய்கிறீர்களா? யாருமே எங்களுக்கு செய்யவில்லை. குழந்தைகள் பட்டினியாக இருக்கிறார்கள் என்று சொல்வதால் சேதுவும் ஒத்துக்கொள்கிறார்.
பின் சேது, நான் குழந்தைகளுக்காக தான் சாப்பாடு கொடுக்க ஒத்துக் கொண்டேன் என்று உண்மையை சொல்கிறார். ஆனால், தமிழ்செல்வியின் தங்கை ஏற்றுக்கொள்ளவில்லை.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் திருமணத்திற்கு ராஜாங்கம் சம்மதித்ததால் ஈஸ்வரி தன்னுடைய மகன் போஸ் இடம் சொல்லி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். பின் சேது, இன்னும் மூன்று நிமிடங்களில் 12 மணி ஆக இருப்பதால் தமிழ்ச்செல்விக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல உள்ளே போகிறார். பின் சேது, பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிவிடுகிறார். தமிழ்செல்வி, சேதுவிற்கு நன்றி சொல்கிறார். மறுநாள் காலையில் தமிழ்ச்செல்வி, கல்லூரிக்கு சென்றிருக்கும்போது ஜெனியின் வீட்டில் காதல் ஏற்றுக்கொள்ளாததால் பிரச்சனை செய்கிறார்கள். இதனால் ஜெனி ரொம்பவே எமோஷனலாக அழுது புலம்பி கொண்டிருக்கிறார். அதற்குப்பின் மலர், வீட்டை விட்டு கிளம்புவதாக சொல்கிறார். ராஜாங்கம், அமைதியாக இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full