தமிழ்செல்வி குழந்தைக்கு என்ன ஆச்சு? பதறி போகும் சேதுபதி - சின்ன மருமகள்

குழந்தையை நினைத்து வருந்தும் சேது-தமிழ்

By subhashini · 8/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் அப்பத்தா, குழந்தை சேதுவிடம் கொடுத்த விஷயத்தை சொல்லி விட்டார். இதனால் கோபப்பட்ட தமிழ்செல்வி, அப்பத்தாவை திட்டி குழந்தையை அழைத்து வருவதற்கு சென்னார். ஆனால், உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தமிழ்ச்செல்வி மயங்கி கீழே விழுதார். பின் டாக்டர், எல்லோரையும் திட்டி விட்டு தமிழ் உடல் நலத்தை கவனமாக பார்த்துக்கொள்ள சொன்னார்கள். இன்னொரு பக்கம் ஐசு-சேதுவிற்கு தேவையான சடங்குகள் எல்லாம் செய்தார்கள். அப்போது குழந்தை அழுது கொண்டிருப்பதால் சேது முழு மனதுடன் எந்த சடங்கையும் செய்யாமல் அங்கிருந்து சென்று விட்டார்.

தன் மகனை நினைத்து தமிழ் செல்வி ரொம்பவே வருத்தப்பட்டார். வீடியோ கால் மூலம் தன்னுடைய மகனை பார்த்து தமிழ் செல்வி சந்தோஷப்பட்டு பாட்டு பாடி தூங்க வைத்தார். அதற்கு பின் சேது முதலிரவுக்கு சென்றிருக்கும் விஷயத்தை அறிந்து தமிழ் செல்வி கொந்தளித்தார்.அதற்கு பின் ஐஸ்வர்யா கனவுடன் இருந்தார். சேது, இதெல்லாம் தேவையில்லை என்று அந்த ரூமை விட்டு வெளியே வந்து விட்டார். இதைப்பற்றி ஐஸ்வர்யா, ஈஸ்வரிடம் சொல்லி அழுது புலம்பினார். சேதுவை சந்தித்த ஈஸ்வரி, ஐசுவை பற்றி ரொம்ப பெருமையாகவும் தமிழை மோசமாகவும் பேசி இருந்தார்.

சின்ன மருமகள்:

இதனால் கோபப்பட்ட சேது, எனக்கு என்ன முடிவு எடுக்கணும் என்று தெரியும் என்று சொல்லிவிட்டார். அதற்குப்பின் ஹாஸ்பிடலில் அப்பத்தா குழந்தைக்கு காப்பு மோதிரம் எல்லாம் வாங்கி வந்து போட்டார். தமிழ் செல்வி, அப்பத்தாவை திட்டி விட்டார். அதற்குப்பின் கருப்பன், மலர் இருவரும் குழந்தையை சேது ரூமில் வைத்தார்கள். குழந்தை அழுது கொண்டிருக்கிறது. சேது, ஒழுங்கு மரியாதையாக குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே போங்க என்றார். கருப்பன், குழந்தை அம்மாவிடம் இருக்கணும் இல்லையென்றால் உன்னிடம் இருக்கணும் என்று வாக்குவாதம் செய்தார். இருவருக்கும் சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் மலர் குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஹாஸ்பிடலில் குழந்தைக்கு மஞ்சள் காமாலை வந்திருப்பதால் டாக்டரிடம் கொடுத்து செக் பண்ண சொல்கிறார் தமிழ்ச்செல்வி. எல்லோரும் குழ்நதையை நினைத்து கவலைப்படுகிறார்கள். அதற்குப்பின் இன்னொரு குழந்தைக்கும் இதே மாதிரி பிரச்சினை வந்திருக்குமோ என்று பயந்து மலருக்கு போன் செய்து தமிழ்ச்செல்வி ஹாஸ்பிடல் போக சொல்கிறார். அதற்குப்பின் ஐஸ்வர்யா, நல்லவள் போல சேதுவின் முன்பு நாடகம் ஆடுகிறார். சேதுவும் ஐசு சொல்வதை எல்லாம் சரி என்று கேட்டுக்கொள்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் மேனகா, குழந்தையை கொஞ்ச சொல்லி கேட்கிறார். ராஜாங்கம், சேது குழந்தையை ஏற்றுக் கொள்ளும் வரை என்னால் எதுவும் செய்ய முடியாது என்றார். மேனகா, இது நம்முடைய வாரிசு. தயவு செய்து குழந்தையை தூக்குங்கள் என்று சொல்வதால் ராஜாங்கமும் குழந்தையை தூக்கி கொஞ்சுகிறார். அதற்குப்பின் கருப்பு குழந்தை இடம் விளையாடிக் கொண்டிருக்கிறார். சேதுவை வெறுப்பேற்றுவது போலவே கருப்பு பேசிக் கொண்டிருக்கிறார். சேது பயங்கரமாக கோபப்படுகிறார். பின் கருப்பு, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. குழந்தையை பார்த்துக்கொள் என்று அங்கிருந்து சென்று விடுகிறார். குழந்தை அழுகிறது. சேது, குழந்தையை தூக்கலாமா? வேண்டாமா? என்று அமைதியாக இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full