தீபாவளி கொண்டாட்டத்தில் புயலை கிளப்பிய போஸ், தமிழ் நிலைமை என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் மலர், போஸுக்கு கல்யாணம் நடக்க இருக்கிறது. என்னால் அங்கு இருக்க முடியவில்லை என்றார். இதைக் கேட்ட தமிழ், நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் என்றார். அதற்குப்பின் அப்பத்தா, வீட்டில் உள்ள எல்லோரையுமே அழைத்து தீபாவளி கொண்டாடுவதை பற்றி பேசிஇருந்தார். அப்போது அப்பத்தா, குடும்பமாக சேர்ந்து கொண்டாடலாம். இதில் தமிழ்செல்வியும் சேர்த்துக் கொள்ளலாம் என்றார். அப்போது ராஜாங்கம், சேதுதான் எதுவாக இருந்தாலும் இந்த விஷயத்தில் முடிவெடுக்கணும் என்றார்.
தமிழ் தன்னுடைய குடும்பத்திற்காக செய்த உதவிகள் எல்லாம் நினைத்து பார்த்த சேது, தமிழுடன் என்னால் கடைசி வரை சேர்ந்து வாழ மாட்டேன். ஆனால், அப்பத்தாவிற்காக இந்த தீபாவளியை சேர்ந்து கொண்டாட ஒத்துக்கொள்கிறேன் என்றார். இதனால் அப்பத்தா ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் அப்பத்தா, தமிழ் செல்வியை அழைத்து தீபாவளிக்கு வீட்டிற்கு வர சொன்னார். ஆனால், தமிழ்ச்செல்வி மறுத்தார். உடனே அப்பத்தா நடந்ததை எல்லாம் சொன்னவுடன் தமிழ்ச்செல்வி ஒத்துக் கொண்டார்.
சின்ன மருமகள்:
பின் அப்பத்தா, தமிழ்ச்செல்வி எல்லாருமே சேர்ந்து தீபாவளி பலகாரங்களை செய்தார்கள். மறுநாள் காலையில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக அப்பத்தா, தமிழ் - மலர் இருவருக்குமே புது புடவை, நகைகளை எல்லாம் கொடுத்து விட்டார். ஆனால், தமிழ்ச்செல்வி வேண்டாம் என்றார். இருந்தாலுமே வலுக்கட்டாயமாக தனம் அவர்களை கட்டிக்கொள்ள சொன்னார். அதற்குப் பின் சேதுவும் தீபாவளிக்கு தயாரானார்.
சீரியல் ட்ராக்:
தீபாவளியை ராஜாங்கம் குடும்பத்தில் எல்லோருமே சேர்ந்து கொண்டாடுகிறார்கள். பட்டாசு, கிடா விருந்து, போட்டோ சூட் என்று அமர்க்களமாக தீபாவளியை கொண்டாடுகிறார்கள். சேதுவுமே அப்பத்தாவின் விருப்பத்திற்காக தமிழ்செல்வி உடன் சேர்ந்து போட்டோ எல்லாம் எடுத்துக் கொண்டார். இதை பார்த்து அப்பத்தா ரொம்பவே சந்தோஷப்பட்டார். பின் சினிமா, பாட்டு, கச்சேரி என்று ரொம்ப குதூகலகமாக தீபாவளி இருந்தது.
https://www.youtube.com/watch?v=MUkL7p6vBmQ
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சேது வீட்டில் எல்லோருமே சந்தோசமாக தீபாவளி கொண்டாடுகிறார்கள். அப்போது போஸ், தமிழை பழிவாங்க வேண்டும் என்று பட்டாசில் சதி வேலைகளை செய்கிறார். அப்போது தமிழ் வரும்போது பட்டாசு வெடிக்கிறது. இதனால் தமிழ் மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார். பின் சேது, தமிழை எப்படியோ காப்பாற்றி வெளியே அழைத்து வந்து விடுகிறார். ஆனால், மயக்கத்தில் தமிழ் கண்விழிக்கவே இல்லை. வீட்டில் உள்ள எல்லோரும் பதறுகிறார்கள்.