தேர்தலில் தமிழ்செல்வி சொன்ன வார்த்தையால் கொந்தளிக்கும் சேது- அனல் பறக்கும் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேதுவிற்கு போன் செய்த ஈஸ்வரி, எதிர்க்கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்காக தமிழ் பணம் வாங்கி இருக்கிறார் என்று பொய்யான தகவலை சொல்லி விட்டார். இதனால் சேது பயங்கரமாக கோபப்பட்டார். ராஜாங்கம், சேது இருவரும் சேர்ந்து ஊர் முழுக்க பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அந்த இடத்திற்கு தமிழ் வந்தார். தமிழை பார்த்தவுடன் சேது வேண்டுமென்றே வம்பு இழுத்து பேசிக் கொண்டிருந்தார். இருந்தாலும் தமிழ் அதை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து கிளம்பினார்.
அதற்குப்பின் தமிழை தனியாக சந்தித்து சேது, எதிர்க்கட்சியிடம் காசு வாங்கி பிரச்சாரம் செய்யும் அளவுக்கு உன் நிலைமை வந்து விட்டதா? இந்த கேவலமான வேலைக்கு பதில் என்னை எதிர்த்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று காண்பி என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். தமிழ்செல்வி எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார். அதற்குப்பின் தனம் தனியாக நடந்து வந்து கொண்டிருக்கும் போது ரவுடிகள் அவரிடம் வம்பு இழுத்தார்கள். இதை சேது, அந்த ரவுடிகளை அடித்து துவம்சம் செய்து தனத்தை காப்பாற்றினார்.
சின்ன மருமகள்:
தமிழ்ச்செல்வி படித்துக் கொண்டிருந்தார். அப்போது சேதுவிட்ட சவால் தான் அவருடைய கண் முன் வருகிறது. இதனால் தமிழ்ச்செல்வி, லட்சுமிக்கு போன் செய்து வீட்டிற்கு வர சொன்னார். லட்சுமியும் அவருடைய சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களும் தமிழ்ச்செல்வியின் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது தமிழ்செல்வி, நான் தேர்தலில் நிற்கிறேன் என்றார். தமிழ்செல்வியின் அம்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது லட்சுமி நடந்ததையெல்லாம் சொன்னார். தமிழ்ச்செல்வி அம்மா, தேர்தலில் நிற்க வேண்டாம் என்றார். ஆனால், தமிழ் செல்வி கேட்கவில்லை. நான் கண்டிப்பாக சேதுவை எதிர்த்து நிற்பேன் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் லட்சுமி உடன் சேர்ந்து தமிழ்ச்செல்வி தேர்தலில் நிற்பதற்கான மனு தாக்கல் செய்கிறார். பின் பேட்டியில் தமிழ்ச்செல்வி, பெண்களின் குரலாகவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிமை வாங்கி தரவும் தான் இந்த தேர்தலில் நிற்கிறேன். கண்டிப்பாக எல்லா பெண்களின் ஆதரவும் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று பேசுகிறார். லட்சுமியும் பெண்களின் உரிமைக்காக நிறைய விஷயங்களை பேசி இருக்கிறார். இதையெல்லாம் செய்தியாக டிவியில் வருகிறது.
சீரியல் ட்ராக்:
இதை பார்த்த சாவித்திரி, சேது- ராஜாங்கத்திடம் காண்பிக்கிறார். ராஜாங்கத்தினால் எதுவுமே பேச முடியவில்லை. சேது பயங்கரமாக கோபப்படுகிறார். பின் தமிழ் இடம் தான் பந்தயம் வைத்த விஷயத்தை எல்லாம் சேது யோசித்து பார்க்கிறர். அதற்குப்பின் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்செல்வி மும்முரமாக ஈடுபடுகிறார். ஒவ்வொரு இடமாக சென்று வாக்குகளை சேகரிக்கிறார். இன்னொரு பக்கம் சேதுவும் தேர்தல் பிரச்சாரத்திற்காக மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்