தமிழ்செல்வி சொன்ன வார்த்தையால் ஆடிப்போன அப்பத்தா, சேது என்ன செய்ய போகிறார்? சின்ன மருமகள்

By subhashini · 5/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கோலாகலமாக வள்ளி முருகன் திருமண நாடகம் நடக்கிறது. ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே சந்தோசமாக நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பத்தா, வள்ளி- முருகன் இடத்தில் சேது, தமிழை நினைத்து பார்த்து சந்தோசப்பட்டார். இன்னொரு பக்கம் சாவித்திரி, தாமரை இருவரும் இந்த நாடகத்தை எப்படி கெடுப்பது என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்திற்கு வந்த ஈஸ்வரி, மூன்றாவது பரிகாரமும் முடிந்து விட்டால் சேது- தமிழ் சேர்ந்து விடுவார்கள்.

அதை ஏதாவது செய்து கெடுக்க வேண்டியது தானே என்றெல்லாம் ஏத்தி விட்டார்கள். உஷாரான சாவித்திரி, நீங்களே செய்ய வேண்டியது தானே. நாங்கள் திட்டுவாங்கிக் கொள்வதா? என்று அமைதியாகி விட்டார்கள். பின் தாமரை, அங்கு இருக்கும் நபரிடமிருந்து ஒரு போனை வாங்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து நாடக இடத்தில் பாம் இருப்பது போல நடித்தார். ஆனால், போலீஸ் தாமரையை திட்டி போனை வைத்து விட்டார். நல்லபடியாக வள்ளி முருகன் திருமண நாடகம் முடிந்துவிட்டது.

சின்ன மருமகள்:

நல்லபடியாக வள்ளி திருமணம் நாடகம் முடிந்து அந்த மாலையும் சேது- தமிழ் கழுத்தில் விழுந்து விடுகிறது. பின் மூன்று பரிகாரங்களும் நல்லபடியாக முடிந்ததால் ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே வீட்டிற்கு போனார்கள். பின் வீட்டில் தமிழ்-சேது இருவருக்கும் முதலிரவு செட் அப் செய்து இருந்தார்கள். அதை பார்த்து தமிழ் பயங்கரமாக கோபப்பட்டார். பின் சேது, தான் செய்த தவறை உணர்ந்து ரொம்ப எமோஷனலாக அழுது பேசி மன்னிப்பு கேட்டார். ஆனால், தமிழ் ஏற்றுக்கொள்ளவில்லை. சேது சொன்ன வார்த்தை எல்லாம் நினைத்து கோபப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போஸ் கிச்சனில் கஷ்டப்படுகிறார் என்று அவருடைய அம்மா, அக்கா தூங்குவதற்கு தேவையான பொருட்களை எல்லாம் ஏற்பாடு செய்து தருகிறார்கள். இதை பார்த்த காவியா
கோபப்பட்டு போஸ் அம்மாவை திட்டி விட்டு பொருட்களை எல்லாம் எடுத்து செல்கிறார். இன்னொரு பக்கம் அப்பத்தா, சேது உடன் சேர்ந்து வாழ்வதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். கோபப்பட்ட தமிழ், நீங்கள் அன்னதானம் போடுவது, வள்ளி நாடகம் நடத்துவது, இலவச திருமணம் செய்வதன் மூலம் என்னுடைய மனம் மாறவில்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வது நடக்காத ஒன்று. தேவையில்லாமல் கற்பனை செய்யாதீர்கள் என்றெல்லாம் சொல்கிறார். இதைக் கேட்டு அப்பத்தா ஆடிப் போகிறார்.

சீரியல் ட்ராக்:

சேது, ராஜாங்கம் இருவருமே தமிழ்செல்வி சொன்ன வார்த்தையை கேட்டு ரொம்பவே வருத்தப்படுகிறார்கள். பின் சேது, தமிழ்செல்வியின் மனதை மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்று தனத்திடம் கேட்டு கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் போஸ், வேலை செய்வது போல் நடித்து பாசாங்கு செய்து கொண்டிருக்கிறார். இது எல்லாம் காவியாவின் அப்பா நம்பி காவியாவிற்கு ஃபோன் செய்து சொல்கிறார்.
இன்னொரு பக்கம் தன்னை கிண்டலாக பேசிய தனத்தை, ஐஸ்வர்யா திட்டி அடிக்கிறார். கோபத்தில் தனம், ஐஸ்வர்யாவை அடிக்க போகும்போது சித்ரா தனத்தை மோசமாக பேசி அனுப்பி விடுகிறார். இது எல்லாம் தனம் தன்னுடைய அக்காவிடம் சொல்லி அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full