பேராசையால் தாமரை அம்மா-ஈஸ்வரி செய்த வேலை, வெளுத்து வாங்கிய தமிழ்செல்வி - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, குழந்தை விஷயத்தில் அவள் என்னை ஏமாற்றி விட்டாள். நான் அவளுடன் சேர்ந்து வாழ்வது நடக்காத விஷயம் என்றார். இன்னொரு பக்கம் ஹோட்டலின் ஓனர், தமிழ் செல்வியை மரியாதையாக நடத்துகிறார். பின் வேலை முடித்து வீட்டிற்கு வந்த தமிழ், தங்கி இருக்கும் இடத்திற்கு வாடகை கொடுக்க, அப்பத்தா, வேண்டாம் என்று சொல்லியும் தமிழ் கேட்கவில்லை பணத்தை கொடுத்துவிட்டு சென்றார்.
அப்பத்தா, சேது- தமிழிடம் பேச வந்தார். அப்போது அப்பத்தா, தமிழ்ச்செல்வியால் தான் உன்னுடைய தங்கை வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது. அதற்காகவாவது பழசை மறந்து விடு. தமிழ்ச்செல்வியுடன் சேர்ந்து வாழு. விவாகரத்து எல்லாம் வேண்டாம் என்று சொன்னார். இதை கேட்ட சேது, என் தங்கைக்காக தமிழ்செல்வி செய்தது பெரிய விஷயம் தான். அதற்காக நன்றி சொல்கிறேன். வயிற்றில் துணியை கட்டிக்கொண்டு பொய் புளுகியவள் கூட சேர்ந்து வாழ முடியாது என்று சொன்னார்.
சின்ன மருமகள் சீரியல்:
இதை கேட்ட தமிழ்செல்வி கோபப்பட்டு சேதுவிடும் சண்டை போனார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி, இனிமேல் நாங்கள் சேர்ந்து வாழ்வது நடக்காத விஷயம். தயவுசெய்து இதை விடுங்கள் அப்பத்தா என்று சொல்லிவிட்டு கிளப்பினார். பின் இருவருமே தூங்க போய் விட்டார்கள். அதற்கு பின் கருப்பு, தமிழையும் சேதுவையும் சேர்த்து வைக்கணும் என்றால் நீ செத்த பிறகு தான் நடக்கும் என்று சொன்னார். இதைக் கேட்ட அப்பத்தா, நான் செத்தால் நடக்குமா? அப்போ நாளை என்ன செய்கிறேன் பார் என்று உயில் கடிதம் எழுதினார்.
கடந்த வாரம் எபிசோட்:
அப்பத்தா, எவ்வளவு எடுத்து சொல்லியுமே தமிழ்-சேது இருவருமே சேர்ந்து வாழ்வதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் மறுநாள் காலையில் அப்பத்தா எழவே இல்லை. பின் வீட்டில் உள்ள எல்லோரும் சென்று பார்த்தார்கள். அப்பத்தா இறந்து விட்டதாக சொன்னார்கள். இதை கேட்டு மொத்த குடும்பமே உடைந்து விடுகிறது. அப்பத்தா உயிரிடம் இருக்கும் போது தான் எப்படியெல்லாம் அடக்கம் செய்ய வேண்டும், எப்படி எல்லாம் தன்னுடைய ஊர்வலம் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருப்பார். அதையெல்லாம் நினைத்து பார்த்து சேது, ராஜாங்கம் எல்லோருமே கதறி அழுதார்கள் ஆனால், உண்மையில் அப்பத்தா இறக்கவில்லை.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் அப்பத்தா இறந்துவிட்டார் என்று தாமரையின் அம்மா, என் மகளுக்கு 200 பவுன் நகை, ஒரு கோடி வரதட்சனை, ஒரு பங்களா தருகிறேன் என்று சொன்னீர்களே என்று இதுதான் சந்தர்ப்பம் என்று தனக்கு தேவையானதை எல்லாம் அப்பத்தா சொன்னது போல சொல்கிறார். இதைக் கேட்ட ஈஸ்வரி அவருடைய பங்கிற்கும் சொத்துக்களை கேட்கிறார். இதையெல்லாம் பார்த்து ராஜாங்கம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். ஈஸ்வரி, தாமரை, இருவரின் மகள்களும் சேர்ந்து அப்பத்தா சொத்து கேட்டு மாத்தி மாத்தி உலுக்கி எடுக்கிறார்கள். அப்பத்தாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து தமிழ்ச்செல்வியின் அம்மா, அப்பா, தங்கை எல்லோருமே வந்திருக்கிறார்கள். இதை பார்த்த சேது, தாமரையின் அம்மா, ஈஸ்வரி மூவருமே கோபப்பட்டு சண்டைக்கு போகிறார்கள். உடனே தமிழ்ச்செல்வி, எனக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை. அதுவரையும் நானும் இந்த வீட்டு மருமகள் தான். என் அம்மா, அப்பா அப்பத்தாவின் கடைசி சடங்கிற்கு வந்திருக்கிறார்கள். நீங்கள் யாரும் தவறு செய்யவில்லையா? என்றெல்லாம் வாக்குவாதம் செய்கிறார். இதையெல்லாம் கேட்டு ராஜாங்கம் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது