கர்ப்பிணி போல் வயிற்றில் பழத்தை சுமந்து கொண்டு சுற்றும் சேது, எமோஷனலான தமிழ் - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, உனக்கு ஏதாவது ஆசைகள் இருந்தால் சொல். அதை நிறைவேற்றுகிறேன் என்று கேட்கிறேன். தமிழ்ச்செல்வி, எனக்கு சின்ன சின்ன ஆசை நிறைய இருக்கு. முதலில் இரவு நேரத்தில் பன் பரோட்டா சாப்பிடணும் என்றார். உடனே சேது, தமிழை அழைத்துக் கொண்டு கடைக்கு போய் பரோட்டா வாங்கித் தந்தார். பின் இருவரும் சந்தோஷமாக ஊர் சுற்றுகிறார்கள். தமிழ்செல்வி கேட்பதையெல்லாம் சேது கொடுத்தார். தமிழ்ச்செல்வியின் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது. சேதுவும் மனம் தளராமல் தமிழுக்காக செய்து கொண்டிருந்தார்.
தேவையில்லாததையெல்லாம் சேது வாங்கி தந்ததால் தமிழ் செல்விக்கு வயிறு வலி எடுத்து விடுகிறது. பின் வீட்டில் உள்ள எல்லோருமே சேதுவை திட்டிக் கொண்டிருந்தார்கள். தமிழ் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் காமேஷ் தன்னுடைய தொழிலுக்கு கிளம்ப தயாராகிறார். அப்போது தன்னுடைய மாமியார் சாவித்திரி, தாமரை இருவரையும் தன் மொபைலில் போட்டோ எடுத்துக் கொண்டார். பின் அதை காமேஷ் பிரேம் எடுத்து கொண்டார். காமேஷ், அதை தான் பிச்சை எடுக்கும் இடத்தில் வைத்துக் கொண்டார்.
சின்ன மருமகள்:
சாவித்திரிக்கு பேச தெரியாது,தாமரைக்கு கண் தெரியாது என்று பொய் சொல்லி பிச்சை கேட்டார். நினைத்ததை விட நிறைய பணம் காமேஷுக்கு கிடைக்கிறது. இதனால் அவர் ரொம்பவே சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் தமிழ், இனிமேல் என்னுடைய ஆசைகளைப் பற்றி கேட்காதீர்கள். நீங்கள் தண்ணீர் பழத்தை வயிற்றில் கட்டி இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய கடைசி ஆசை என்றார். சேதுவும் தமிழ் சொன்னது போல் தண்ணீர் பழத்தை தன் வயிற்றில் கட்டிக்கொண்டு எல்லா வேலைகளையும் செய்தார். வீட்டில் உள்ள எல்லோருமே சேதுவை திட்டுகிறார்கள். இருந்தாலும் சேது கண்டு கொள்ளவில்லை.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தாமரை, சாவித்திரி போட்டோவை வைத்து காமேஷ் பிச்சை நன்றாக சம்பாதித்து விடுகிறார். பின் அந்த பணத்தில் காமேஷ், ஸ்வீட் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து தாமரை- சாவித்திரிக்கு கொடுக்கிறார். இருவருமே பயங்கர கடுப்பில் இருக்கிறார்கள். பின் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் தாமரை மீது தூவி அள்ளி வீசி காமேஷ் சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் ராஜாங்கம் வீட்டில் கட்சி விஷயமாக மீட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது சேது தண்ணீர் பழத்தை வயிற்றில் கட்டிக்கொண்டு வருகிறார்.
சீரியல் ட்ராக்:
அதை பார்த்து எல்லோருமே சிரிக்கிறார்கள். ராஜாங்கம், என்ன கோலம் என்று கேட்கிறார்? சேது, தமிழுக்காக இதையெல்லாம் செய்கிறேன் என்று சொல்கிறார். ராஜாங்கத்தால் எதுவுமே பேச முடியவில்லை. பின் தமிழ்ச்செல்விக்காக அன்று முழுவதுமே தண்ணீர் பலத்தைக் கட்டிக் கொண்டு சேது எல்லா இடத்திற்கும் செல்கிறார். பின் இதை அறிந்த தமிழ்ச்செல்வி, தன் கணவர் தனக்காக செய்த விஷயத்தை எல்லாம் நினைத்து ரொம்பவே எமோஷனலாக ஃபீல் பண்ணுகிறார்.