கண்மணியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய தமிழ், வேதனையில் ராஜாங்கம் குடும்பம் - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வி, தப்பான விஷயம் நடக்கிறது என்றால் அங்கு வரும் பெண்களை தப்பாக வீடியோ எடுத்து அவர்கள் அதை வைத்து மிரட்டணும் என்று உண்மையை கண்டுபிடித்து விட்டார். அப்போது கருப்பு, அந்த ஓட்டலில் தான் தாமரை தங்கி இருக்கிறார் என்று சொன்னார். உடனே தமிழ்ச்செல்வி, சீக்கிரம் போய் அவளை காப்பாற்றுங்கள். பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறாள் என்று சொன்னார். அதற்குப்பின் தாமரையை பார்த்த கருப்பு, நடந்ததை எல்லாம் சொன்னார். தாமரையுமே ஷாக் ஆகி ரூமிற்கு வந்த சர்வன்ட் பாய் நடந்து கொண்ட விஷயத்தை சொன்னார்.
பின் தமிழ்ச்செல்வி சொன்ன ஐடியாவை கருப்பு, தாமரை இடம் சொன்னார். இன்னொரு பக்கம் கல்யாண மண்டபத்திற்கு ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே கிளம்பினார்கள். அப்போது கண்மணியை ஆறுமுகம் தான் அழைத்துக் கொண்டு வந்தார். வண்டியில் வரும்போது கண்மணி, நீ தாலி கட்டவில்லை என்றால் நான் செத்து விடுவேன் என்று ரொம்ப எமோஷனலாக அழுது புலம்பினார். ஆறுமுகத்திற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இன்னொரு பக்கம் தாமரை துணி மாற்றுவது போல பேசி ட்ராமா செய்தார். உடனே கருப்பு கேமராவை மறைத்ததால் நந்தகுமார் நண்பர்கள் கோபப்பட்டார்கள்.
சின்ன மருமகள் சீரியல்:
நேற்று எபிசோட்டில் கேமராவை நகர்த்துவதற்காக ரூம் சர்வெண்ட் வந்தார். அப்போது கருப்பு, தாமரை இருவருமே அவனை பிடித்து அடித்து உண்மையை கேட்டார்கள். பின் நந்தகுமாரின் நண்பர்கள் இருக்கும் அறைக்கு கருப்பு, தாமரை போலீசை வர வைத்து விட்டார்கள். நந்தகுமார் நண்பர்கள் தப்பிப்பதற்கு முன்பு போலீஸ் அவர்களை பிடித்து விட்டது. உண்மையை கேட்டு போலீஸ் வெளுத்து வாங்குகிறார்கள். அப்போது ஓட்டலுக்கு வரும் பெண்களை தப்பாக வீடியோ எடுத்து வைத்து மிரட்டும் உண்மையை போலீஸ் அறிந்து கொள்கிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணி நந்தகுமார் என்றும் தெரிந்து கொண்டார்கள்.
நேற்று எபிசோட்:
பின் கல்யாணத்தை நிறுத்துவதற்காக போலீஸ், கருப்பு, தாமரை எல்லோருமே கிளம்பினார்கள். அப்போது தாமரை, தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து நடந்தது எல்லாம் சொல்லி, உன்னுடைய சொந்தக்காரர் மாப்பிள்ளையை தயாராக சொல் என்றார். இன்னொரு பக்கம் கருப்பு, தமிழ் செல்விக்கு போன் செய்து நடந்ததை எல்லாம் சொன்னவுடன் தமிழ்ச்செல்வி மண்டபத்திற்கு கிளம்பினார். இன்னொரு பக்கம் கண்மணி- ஆறுமுகம் இருவருமே மண்டபத்திற்கு செல்லாமல் வேறு எங்கோ சென்றார்கள். மண்டபத்தில் சேது அம்மா, கண்மணி இன்னும் வரவில்லை என்று புலம்பி கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கண்மணி மண்டபத்திற்கு இன்னும் வரவில்லை என்ற விஷயம் ஈஸ்வரிக்கு தெரிந்துவிடுகிறது. இதனால் கண்மணி அம்மாவிடம் விசாரிக்கிறார். பின் ஈஸ்வரியின் கணவர் கண்மணியை தேடி அலைந்து விட்டு மண்டபத்திற்கு வருகிறார். அப்போது அவர், கண்மணியை எங்குமே காணவில்லை காணவில்லை என்று சொல்கிறார். இந்த விஷயம் ராஜாங்கத்திற்கு தெரிந்து விடுகிறது. என்ன செய்வது என்று புரியாமல் ராஜாங்கம் ரொம்பவே பதறுகிறார். இன்னொரு பக்கம் ஆறுமுகம், கண்மணியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்கிறார் அங்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து வைத்திருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
இருவரும் மாலை மாற்றி, ஆறுமுகம் கண்மணிக்கு தாலி கட்ட போகிறார். அந்த சமயம் வந்த தமிழ்ச்செல்வி, திருமணத்தை நிறுத்தி நீ செய்வது ரொம்ப தவறு கண்மனி. நீங்கள் ஆசைப்பட்ட மாதிரி எல்லோர் சமூகத்துடன் கல்யாணம் நடக்க வேண்டும். தயவுசெய்து நான் சொல்வதைக் கேள். நாம் மண்டபத்திற்கு போகலாம் கிளம்பு என்கிறார். தமிழ்ச்செல்வி செல்வதை கேட்டு ஆறுமுகம் மனம் மாறி மாலையை கழட்டி போடுகிறார். பின் தமிழ், கண்மணி, ஆறுமுகம் மூவருமே மண்டபத்திற்கு கிளம்பி போகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது