மலரின் படிப்புக்காக போராடும் தமிழ், அசிங்கப்பட்டு போன போஸ் - விறுவிறுப்பில் சின்ன மருமகள்

By subhashini · 11/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வி, படித்துக் கொண்டிருக்கும் போது வயிற்றில் குழந்தையின் அசைவு தெரிவதால் மலர், தனத்திடம் அழைத்துக் காண்பித்தார். இதை பார்த்த சேதுவிற்குமே குழந்தையின் அசைவை பார்க்க ஆசைப்பட்டார். பின் தமிழ் துங்கிய பிறகு சேது, தமிழ்ச்செல்வியின் வயிற்றில் கை வைத்து பார்த்தார். குழந்தை அசைவை உணர்ந்தவுடன் சேது தன்னை அறியாமல் அழுதார். பின் வயிற்றில் காது வைத்து கேட்டு ரொம்ப எமோஷனலாக அழுதார். இது எல்லாம் தமிழ்ச்செல்வி பார்த்தார்.

ராஜாங்கம், போஸின் திருமணத்திற்கு முன்பே ஒரு கோடி ரூபாய் செக் போட்டு கொடுத்தார். ஈஸ்வரியின் கணவர், செக் வேண்டாம் என்றார். ஆனால், ஈஸ்வரி கேட்காமல் செக்கை வாங்க வந்தார். உடனே அப்பத்தா, அவர்கள் செக்கை தொலைத்து விடுவார்கள். பத்திரமாக நான் வைத்திருக்கிறேன் என்று செக்கை வாங்கி கொண்டார். இதற்கு ஈஸ்வரிக்கு இன்னும் கோபம் அதிகமானது. அதற்குபின் சேது, நீ புதிதாக தொழில் தொடங்குவதற்கு பணம் பத்தவில்லை என்றால் என்னிடம் சொல். நான் லோன் போட்டு வாங்கி தருகிறேன்.

சின்ன மருமகள் சீரியல்:

நீ எனக்கு வட்டி தரவேண்டாம். அசல் தந்தால் மட்டும் போதும் என்றார். ஆனால், போஸ் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் கல்லூரியில் ஜெனி, தன்னுடைய காதலை பற்றி தமிழிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அப்போது வந்த ஜெனியின் காதலர் ஆறுதல் சொன்னார். பின் தமிழிடம் ஜெனியை பத்திரமாக பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டு காதலர் அங்கிருந்து சென்றார். அதற்குப்பின் வீட்டில் மலர் தனியாக இருப்பதை பார்த்த போஸ் அவரிடம் தப்பாக நடந்து கொள்ள உள்ளே வந்தார். பின் போஸ் ரொம்ப காதலாகவும் அன்பாகவும் மலரிடம் பேசி இருந்தார். ஆனால், மலர் கோபப்பட்டு போசை தள்ளி விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போஸ் மீண்டும் மலரிடம் நெருக்கமாக செல்ல பார்க்கிறார். கோபத்தில் மலர்,போசை வெளியே தள்ளி சாணியை கரைத்து மூஞ்சியில் ஊற்றி விடுகிறார். இதனால் போஸ் அசிங்கப்பட்டு அங்கிருந்து சென்று குளிக்கப் போகிறார். அப்போது வந்து ஈஸ்வரி, என்னாச்சு? என்று கேட்க, போஸ் நடந்ததை சொல்கிறார். கோபத்தில் ஈஸ்வரி, போசை அடிக்கிறார். அதற்குப் பின் ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மலர், தமிழ் இருவருமே வருகிறார்கள். தமிழ், மலர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி வக்கீல் படிக்க ஆசைப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு நீங்கள் தான் அனுமதி கொடுக்கணும் என்று கேட்கிறார். இதை கேட்ட ஈஸ்வரி, கொந்தளித்து பயங்கரமாக திட்டுகிறார். அதற்கு தமிழ், மலர் இந்த வீட்டு மருமகள் கிடையாது. அதற்காக அவர் வேலைக்காரியும் கிடையாது என்று சொல்கிறார். இதைக் கேட்ட சாவித்திரி, பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். நாங்கள் மலர் படிக்க சப்போர்ட்டாக இருப்போம் என்றெல்லாம் ஈஸ்வரியை வெறுப்பேற்ற செய்கிறார். ராஜாங்கம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full