அந்நியன் அம்பியாக மாறும் தமிழ் செல்வி, குழப்பத்தில் தவிக்கும் சேது - சின்ன மருமகள்

By subhashini · 7/3/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழும், அப்பத்தாவுடன் சேர்ந்து நடந்து வந்தார். கோயில் நெருங்கும் நேரத்தில் அப்பத்தா மயக்கம் போட்டு விழுந்து விட்டார். எல்லோருமே பதறி விட்டார்கள். எல்லோருமே பரிகாரம் நின்று விடுமோ? என்று பயத்தில் இருந்தார். அந்த சமயம் பார்த்து முருகருடைய ஊர்வலம் வருகிறது. அப்போது அந்த கோயில் பூசாரி, நீங்கள் இருப்பது முருகன் சன்னதியில் தான். இன்னும் ஐந்து நிமிடத்தில் கிரகணம் முடிய போகிறது. உங்கள் மனதில் இருக்கும் குறைகளை எல்லாம் முருகனிடம் சொல்லுங்கள் என்றார். பின் ராஜாங்கம் குடும்பத்தில் உள்ள எல்லோருமே முருகனை கும்பிட்டு தங்களுடைய பரிகாரத்தை முடித்தார்கள்.

பாதயாத்திரியை முடித்துவிட்டு ராஜாங்கம் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து விட்டார்கள். ராஜாங்கம், எல்லோருமே தான் சொன்ன வார்த்தைக்காக பாதயாத்திரை நடந்ததற்காக நன்றி என்றார். இன்னொரு பக்கம் சாவித்திரி, ஈஸ்வரியின் சதி செய்து தான் திருமணம் நடந்தது என்று எல்லா விஷயத்தையும் சொன்னார். இதனால் தாமரைக்கு பயங்கர கோபம் வருகிறது. அப்போது வந்த காமேஷிடம் சாவித்திரி- தாமரை இருவரும் கேட்டார்கள். காமேஷ், நான் உண்மையாலுமே தாமரையை காதலிக்கிறேன் என்றெல்லாம் டயலாக் பேசி இருந்தார். இதனால் தாமரை இன்னும் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் சேது- தமிழ் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பாகவும் பாசமாகவும் நடந்து கொண்டார்கள்.

சின்ன மருமகள்:

தாமரை, ராஜாங்கத்திடம் எல்லா உண்மையையும் சொல்லி நியாயம் கேட்க சொன்னார். சாவித்திரி, தாமரையை தடுத்து நிறுத்தி இதற்கு நாம் வேறு வழியில் ஈஸ்வரிக்கு பதிலடி கொடுக்கலாம். பொறுமையாக இரு என்று சமாதானம் செய்தார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, பரிகாரம் நிறைவேறியது என்று ராஜாங்கம் குடும்பத்தில் சந்தோஷமாக இருந்தார்கள். ஆனால், தமிழ்- சேது இருவரும் சேர்ந்து வாழ மாட்டார்கள். அதை நடத்த விட மாட்டேன் என்று வில்லிப்போல் பேசிக் கொண்டிருந்தார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் தமிழ்ச்செல்வி தூக்கத்தில் எழுந்து உட்கார்ந்து அழுது கொண்டிருக்க சேதுபதி விசாரித்தார். அப்போ தமிழ் செல்வி, நான் கரப்பான் பூச்சியை மிதித்து விட்டேன். என்னால் ஒரு உயிர் போனவிட்டது. அந்த பாவம் எனக்கும் என் குழந்தைக்கும் வந்துவிடும் என்று ஏதேதோ சொல்லி அழுதார். சேது, கோழி ஆட்டை சாப்பிடும் போது பாவம் வரவில்லையா? என்று கேட்டவுடன் தமிழ்ச்செல்வி கோபப்பட்டு கத்தினார். அதற்குப்பின் ராஜாங்கம், அப்பத்தா எல்லோருமே பரிகாரம் நல்லபடியாக நடந்து முடிந்ததை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி, கோயிலுக்கு சென்றிருந்தால் பரிகாரம் நன்றாக இருந்திருக்கும் என்று ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விடுகிறார். கோபத்தில் அப்பத்தா, ஈஸ்வரியை திட்டி விடுகிறார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி கர்ப்பமாக இருப்பதால் அதிகமாக கோபப்படுகிறார், அழுகிறார், கத்துகிறார். சேதுவிற்கு ஒன்றுமே புரியவில்லை. பின் இதைப்பற்றி சேது, அப்பத்தாவிடம் சொல்கிறார். அதற்கு அப்பத்தா, மாசமா இருக்கும்போது எல்லா பெண்களுக்கும் குணங்கள் அப்படித்தான் இருக்கும். நீ தான் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொல்கிறார். தமிழ்ச்செல்வி, அந்நியன்- அம்பிப்போல் மாறி மாறி நடந்து கொள்வதால் சேது கோவப்படாமல் நிதானமாக தமிழ்செல்வி இடம் பேசுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full