சேது- தமிழ்செல்வியின் கோரிக்கையை ஏற்று கொண்டாரா ராஜாங்கம்? விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கிச்சன் இருக்கும் கோலத்தை பார்த்து அப்பத்தா பயங்கரமாக கத்தினார். வீட்டில் உள்ள பெண்கள் எல்லோருமே கிச்சன் அலங்கோலமாக இருப்பதை பார்த்து கோபப்பட்டார்கள். பின் அப்பத்தா திட்டியதால் சேது மற்ற ஆண்கள் எல்லோருமே கிச்சனை சரி செய்தார்கள். அதற்குப்பின் தமிழ்- சேது இருவரும் இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கர கோபம் வந்தது. அதற்குப் பின் தமிழ் செல்வி-சேது இருவரும் பிரக்னன்சி போட்டோ சூட்டை நடத்தினார்கள். விதவிதமாக உடை அணிந்து அழகாக போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். இதை ராஜாங்கம் குடும்பத்தினர் பார்த்து சந்தோஷப்பட்டார்கள்.
சேது-தமிழ் இருவரும் நல்லபடியாக தங்களுடைய போட்டோ சூட்டிங் நடத்தி முடித்தார்கள். அதற்குப்பின் சேது, உனக்கு வேறென்ன ஆசை என்று கேட்டார். அதற்கு தமிழ், எனக்கு இன்று திடீரென்று மாமாவின் சேரில் உட்கார வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்றார். சேது, நானே உட்கார்ந்ததில்லை. நீ எப்படி உட்கார முடியும். அமைதியாக இரு என்று கிளம்பினார். அதற்கு பின் தமிழை வெளியே அழைத்து வந்து ராஜாங்கத்தின் சேரில் உட்கார வைத்தார் சேது. வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், ஈஸ்வரி மட்டும் வயிறு எரிக்கிறார்.
சின்ன மருமகள்:
அந்த சமயம் பார்த்து ராஜாங்கம் வந்து விட்டார். ஆரம்பத்தில் ராஜாங்கம் முறைத்தார். பின் சேது, தமிழின் ஆசையை சொன்னவுடன் ராஜாங்கமும் எல்லோருடன் சேர்ந்து தமிழை அமர வைத்து போட்டோ எடுத்துக் கொண்டார். அதற்குப்பின் சேது, தமிழிடம் அவருடைய ஆசையை கேட்டு கேட்டு செய்து கொண்டிருந்தார். அந்த சமயம் ஜெனி தங்கள் வீட்டில் திருமண ஏற்பாடு செய்வதை பற்றி தமிழிடம் சொல்லி புலம்பி அழுது கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அப்பத்தா- ராஜாங்கம் இருவரும் தமிழ்- சேது இருவரும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து மலரின் கையில் இருந்து ஒரு கண்ணாடி பாத்திரம் கீழே விழுகிறது. இதனால் அப்பத்தா கோபப்பட்டு திட்டுகிறார். ஈஸ்வரி, இனி சேது தமிழுக்கு கஷ்ட காலம் தான் என்று நினைத்துக் கொண்டு சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் சக்தி, ஜெனியின் அப்பாவை சந்தித்து தன்னுடைய காதலை பற்றி பேசினார்.
சீரியல் ட்ராக்:
கோபத்தில் ஜெனியின் அப்பா, சக்தியை அடித்து விரட்டுகிறார். பின் இதைப்பற்றி சக்தி, தமிழ்- சேது இருவருக்கும் போன் செய்து சொல்கிறார். பின் இதை பற்றி தமிழ்- சேது இருவருமே ராஜாங்கத்திடம் ஜெனியின் காதலுக்கு உதவி செய்ய கேட்கிறார்கள். ராஜாங்கம் தயங்குகிறார். ஈஸ்வரி, தேர்தல் சமயத்தில் இதெல்லாம் தேவையில்லை என்று சொல்கிறார். இருந்தாலும் தமிழ்ச்செல்வி கேட்டுக் கொண்டதால் ராஜாங்கம் ஒத்துக்கொள்கிறார். பின் ஜெனியின் அப்பாவை சந்தித்து பேசுவதற்காக போன் செய்து ராஜாங்கம் வர சொல்கிறார். இன்னொரு பக்கம் தனம் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யா ஏளனமாக கிண்டலடித்து பேசுகிறார்.