தமிழிடம் வம்புக்கு செல்லும் சேது, ராஜாங்கம் போட்ட உத்தரவு - விறுவிறுப்பில் சின்ன மருமகள்

By subhashini · 19/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸ் வேலை செய்ததற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி வைக்கிறார் காவ்யா அப்பா. வீட்டிற்கு வந்த போஸ் நடந்தது எல்லாம் தன்னுடைய அம்மா, அக்காவிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அப்போது வந்த காவியா, கஷ்டப்பட்டு உழைப்பாய் என்று நினைத்துப் பார்க்கவில்லை. இனிமேல் சம்பாதிக்கும் பணத்தை என்னிடம் தான் கொடுக்க வேண்டும். உட்கார்ந்து சாப்பிடணும் என்று நினைக்காதே என்றெல்லாம் திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். இதை எல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கர கடுப்பானது.

சேது, என் மீது உனக்கு அவ்வளவு பாசமா? என்றார். அதற்கு தமிழ், உங்கள் மீது ஒன்றும் இல்லை. என் தங்கை நினைத்து தான் எனக்கு கஷ்டம். அவள் உங்களை திருமணம் செய்து கொண்டு கஷ்டப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று வம்பு இழுத்து பேசி இருந்தார். இன்னொரு பக்கம் ஐஸ்வர்யாவை வெறுப்பேற்ற கருப்பன் சுவற்றில் தனம் சொன்ன வார்த்தையை எழுதி வைத்து வம்பு இழுத்தார். இதை பார்த்த ஐஸ்வர்யா, சேதுவிடம் கம்ப்ளைன்ட் பண்ணினார். சேதுவும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அதற்குப் பின் செங்கல் சூலையில் வேலை செய்ததால் போஸுக்கு உடம்பு முடியாமல் போகிறது.

சின்ன மருமகள்:

அதை பார்த்து தாமரை, சாவித்திரி இருவருமே சிரித்து கொண்டு கிண்டல் கேலி செய்தார்கள். ஈஸ்வரியால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் தமிழ் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்து விடுகிறது. சேதுவின் மீது பாம்பு ஏறி விடுகிறது. ஆனால், சேது எதுவும் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே பதறினார்கள். பின் சேது கண்விழித்து பாம்பை பார்த்து கத்தினார். தமிழ் சாமர்த்தியமாக பாம்பை பிடித்து வெளியே போட்டு விட்டார். பின் எல்லோரும் தமிழ் செல்வியை பாராட்டுகிறார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கெஸ்ட் ஹவுஸில் பாம்பு வந்ததால் வீட்டில் உள்ள எல்லோருமே பதறிப் போகிறார்கள். பின் அந்த பாம்பையும் அப்புறப்படுத்தி வீட்டுக்கு வெளியில் பாம்பு இருகிறதா? என்று சோதிக்க சொல்கிறார்கள். பின் ராஜாங்கம், இனி சேது- தமிழ் அங்கு இருக்க தேவை இல்லை. இருவரும் அவர்களுடைய ரூமிலேயே இருக்கட்டும் என்று சொல்கிறார். தமிழ் முடியாது என்று மறுக்கிறார். உடனே அப்பத்தா, ராஜாங்கம் இருவரும் சொல்வதால் தமிழ் மீண்டும் வீட்டிற்கு வர தயாராக ஒத்துக் கொள்கிறார். பின் கெஸ்ட் ஹவுஸில் இருந்து துணிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு தமிழ் வீட்டிற்கு வருகிறார்.

சீரியல் ட்ராக்:

இதனால் சேது ரொம்பவே சந்தோஷப்படுகிறார். பின் தமிழ்செல்வியை வேண்டும் என்று சேது வம்பு இழுத்து கொண்டே இருக்கிறார். ஆரத்தி எல்லாம் எடுத்து தமிழ்ச்செல்வியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வருவதால் ரொம்ப அலைச்சலாக இருக்கிறது என்று தனத்திடம் புலம்பி கொண்டிருக்கிறார். படிக்கட்டு ஏற முடியவில்லை என்றெல்லாம் சொல்கிறார். இதை கேட்டு சேது, தமிழ்செல்வியை தூக்கிக் கொண்டு மேலே போகிறார்.
நாளுக்கு நாள் தமிழ்ச்செல்வியின் மீது சேதுவுக்கு காதல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full