தமிழ்செல்விக்கு நேர்ந்த விபரீதம், உதவி செய்வாரா சேதுபதி? பரபரப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வி, மாணிக்கம் எல்லோருமே தங்களுக்கு தெரிந்த ஊராட்களை அழைத்துக் கொண்டு கோயில் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள். தமிழ்ச்செல்வி பார்த்தவுடன் சாவித்திரி, தாமரை இருவரும் சந்தோஷப்பட்டார்கள். நிச்சயதார்த்தம் நடக்குமா? என்று ஈஸ்வரி ரொம்பவே பதறினார். சேது எந்த கவலையும் இல்லாமல் திமிராக நின்று கொண்டிருந்தார். ஈஸ்வரி, தமிழை திட்டி கொண்டு இருந்தார்.
அப்பத்தா, அவளுடைய நியாயத்தை கேட்க வந்திருக்கிறாள். உரிமையை கேட்கிறாள் என்றார். தமிழ்ச்செல்வி, அதெல்லாம் ஒன்றும் இல்லை. என்னை அறுத்து விட்டுட்டு அவர் எத்தனை கல்யாணம் வேனாலும் பண்ணிக்கொள்ளட்டும். எனக்கு அதில் கவலை இல்லை. எனக்கு அவர் கட்டின தாலி ரொம்ப பாரமாக இருக்கிறது. என்னை அத்து விடுங்கள் என்றார். இதைக் கேட்டு எல்லோருமே ஆடி போகிறார்கள். அப்பத்தா, எதற்காக இப்படி முடிவெடுத்தாய்? என்றார். தமிழ்செல்வி,எனக்கு இந்த வாழ்க்கையில் விருப்பமில்லை என்றார்.
சின்ன மருமகள்:
தமிழ், என்னை அத்துவிட்டால் நான் யாருடைய வாழ்க்கையிலும் விஷயத்திலும் தலையிட போவதில்லை என்றார். தமிழின் அப்பா- அம்மா எல்லோருமே வேண்டாம் என்று தடுத்தார்கள். ஆனால், தமிழ் தன் முடிவில் உறுதியாக இருந்தார். சேது, எங்கள் இருவரையும் அத்து விடுங்கள் என்று கொந்தளித்தார். ஊர் தலைவர்கள் எல்லோருமே சேர்ந்து தமிழ்-சேது இருவரையும் பிரித்து விட்டார்கள். இனி சேது- தமிழ் இரண்டு குடும்பத்திற்குமே சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டார்கள். இதை எல்லாம் பார்த்த அப்பத்தா ரொம்பவே நொறுங்கிப் போனார்.
சீரியல் ட்ராக்:
தமிழ்செல்வியும் தன் கழுத்தில் இருக்கும் தாலியை தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.
அதற்குப் பின் சேது- ஐஸ்வர்யா நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதை பார்த்து அப்பத்தா, இவ்வளவு அநியாயம் செய்வீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை. இனி உங்கள் குடும்பத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் உங்களை அத்து விடுகிறேன் என்று அங்கு இருந்து கிளம்பி போனார். ஈஸ்வரி, அப்பத்தாவ அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றார். தமிழ்செல்வியின் வீட்டிற்கு வந்த அப்பத்தா, கோவிலில் நடந்ததை எல்லாம் சொல்லி எமோஷனல் ஆக அழுதார். தமிழ்ச்செல்வி, அப்பத்தாவிற்கு ஆறுதல் சொன்னார்.
https://www.youtube.com/watch?v=nepEAZ0naWg