ஆபத்தில் சிக்கிய சேதுவை காப்பாற்றிய தமிழ்செல்வி, போஸுக்கு காவியா போட்ட கண்டிஷன் - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில்சாவித்திரி, தாமரை இருவருமே பிச்சைக்கார வேடத்தில் வீட்டு வேலை எல்லாம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ஈஸ்வரி, போஸ் எல்லோருமே காரில் வந்து இறங்கி சாவித்திரியை வம்பு இழுத்தார்கள். கோபத்தில் சாவித்திரி, ஈஸ்வரி மீது கல்லை தூக்கிப் போடப் போனார். ஆனால், அதெல்லாம் கனவு. பின் எப்படியாவது இந்த திருமணம் நடக்கக்கூடாது என்று சாவித்திரி- தாமரை இருவரும் திட்டம் போட்டார்கள். இன்னொரு பக்கம் ஈஸ்வரி- போஸ் இருவருமே இந்த கல்யாணத்தை எப்படியாவது நடத்த வேண்டும் என்று யோசித்தார்கள்.
ஈஸ்வரி, எப்படியாவது எம்எல்ஏ பொண்ணை நீ திருமணம் செய்து கொள். உன்னுடைய பெரியப்பா நம் குடும்பத்தை மதிக்கவே இல்லை. நம்மை ரொம்ப அவமானமாக நடத்துகிறார் என்றெல்லாம் ஒன்னுக்கு ரெண்டாக போஸை ஏற்றி விட்டார். அந்த சமயம் பார்த்து காவியா, போஸுக்கு போன் செய்து ஒரு இடத்தில் வந்து சந்திக்க சொன்னார். உடனே ஈஸ்வரி, நாலு பவுன் நகையை கொடுத்து ஒரு வைர மோதிரத்தை வாங்கிக் கொண்டு போய் குடு. அப்பதான் உன்னை ரொம்ப பிடிக்கும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார்.
சின்ன மருமகள்:
இன்னொரு பக்கம் மலர், போஸ்க்கு திருமணமாவது நினைத்து ரொம்ப எமோஷனாக பேசி அழுது கொண்டிருந்தார். அதற்கு தமிழ் செல்வி அவருக்கு ஆறுதல் சொல்லி தைரியப்படுத்தினார். அதற்குப்பின் தனம், உன்னை பற்றி மாமா ரொம்பவே கவலைப்படுகிறார் என்றார். அதற்கு தமிழ், அதெல்லாம் சும்மா அவருமே வேறொரு திருமணம் செய்து கொள்வார் என்றார். இதைக் கேட்டு கோபப்பட்ட சேது, சுவற்றில் இருக்கும் கொசுவை அடிப்பது போல தமிழை மிரட்டி இருந்தார். ஆனால், தமிழ் செல்வி எதுவும் சொல்லாமல் முறைத்துக் கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போஸ், காவியாவை தனியாக சந்தித்து பேசுகிறார். அப்போது தன் அம்மா சொன்னது போல வைரமுத்து காவியாவிற்க்கு கிப்டாக கொடுக்கிறார். அப்போது காவியா, எனக்கு பொய் சொன்னா பிடிக்காது. நீங்கள் இதுவரை பொய் சொல்லி இருந்தால் இனிமேல் பொய் சொல்லக்கூடாது என்றெல்லாம் கண்டிஷன் போடுகிறார். பின் இருவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டு வருகிறார்கள். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த போஸ், நடந்தது எல்லாம் ஈஸ்வரியிடம் சொல்கிறார். இதையெல்லாம் ஓட்டு கேட்கிறார்கள் தாமரை- சாவித்திரி.
சீரியல் ட்ராக்:
பின் இருவருமே, எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்றெல்லாம் திட்டம் போடுகிறார்கள். இன்னொரு பக்கம் இடியும் மின்னலுமாக இருப்பதால் தமிழ்ச்செல்வி பயந்து போய்
சேதுவை உள்ளே தூங்க சொல்கிறார். பின் சேது உள்ளே வரும்போது இடி அதிகமாக இடித்ததால் தமிழ் கட்டிபிடித்து விடுகிறார். பின் மின்னலில் வெளியே தீப்பிடித்து எரிகிறது. ஒருவழியாக எல்லோருமே தீயை அணைக்கிறார்கள். அப்போது சேது மட்டும் வெளியே இருந்தால் அவர் மீது இடி விழுந்திருக்கும். நல்லவேளை தமிழ் காப்பாற்றி விட்டார் என்று சொல்வதால் சேது எதுவும் சொல்லாமல் அமைதியாக உள்ளே போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது