ஆபத்தில் சிக்கிய சேதுவை காப்பாற்றிய தமிழ், அவமானப்பட்டு நிற்கும் ஈஸ்வரி - சின்ன மருமகள்

By subhashini · 18/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் எல்லா தேர்விலும் அதிக மதிப்பெண் எடுத்த தமிழ் செல்விக்கும் விருது கொடுத்தார்கள். அதோடு கல்லூரி கட்டண செலவையும் ராஜாங்கம் ஏற்று கொண்டார் .அதற்குப் பின் ராஜாங்கம் சேது-தமிழ் இருவரையும் ரொம்ப பெருமையாக பேசி அவர்களுக்கு வாளை பரிசாக அளித்தார். அதற்கு பின் வீட்டில் சேது-தமிழ் இருவரையும் பேட்டி எடுத்தார்கள்.

காவியா சொன்னதால் போஸ் தன்னுடைய மாமனாரின் செங்கல் சூலையில் கூலி வேலை செய்தார். கஷ்டப்பட்டு போஸ் வேலை செய்வதை பார்த்து காவியாவின் அப்பா சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் தமிழ்- தனம் இருவரும் சேர்ந்து இருவரும் புரியாத மொழியில் பேசியதை மலர் மூலமாக சேது தெரிந்து கொண்டார். அதற்குப்பின் காவியா, தமிழை சந்தித்து பேசி இருந்தார். பின் போசை திருமணம் செய்ததற்கான காரணத்தை எல்லாம் சொல்லி வருத்தப்பட்டார்.

சின்ன மருமகள்:

அதற்குப்பின் இருவரும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். போஸ் வேலை செய்ததற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி வைக்கிறார் காவ்யா அப்பா. வீட்டிற்கு வந்த போஸ் நடந்தது எல்லாம் தன்னுடைய அம்மா, அக்காவிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அப்போது வந்த காவியா, கஷ்டப்பட்டு உழைப்பாய் என்று நினைத்துப் பார்க்கவில்லை. இனிமேல் சம்பாதிக்கும் பணத்தை என்னிடம் தான் கொடுக்க வேண்டும். உட்கார்ந்து சாப்பிடணும் என்று நினைக்காதே என்றெல்லாம் திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். இதை எல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கர கடுப்பானது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் சேது, என் மீது உனக்கு அவ்வளவு பாசமா? என்று கேட்கிறார். அதற்கு தமிழ், உங்கள் மீது ஒன்றும் இல்லை. என் தங்கை நினைத்து தான் எனக்கு கஷ்டம். அவள் உங்களை திருமணம் செய்து கொண்டு கஷ்டப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று வம்பு இழுத்து பேசுகிறார்.
இன்னொரு பக்கம் ஐஸ்வர்யாவை வெறுப்பேற்ற கருப்பன் சுவற்றில் தனம் சொன்ன வார்த்தையை எழுதி வைத்து வம்பு இழுக்கிறார். இதை பார்த்த ஐஸ்வர்யா, சேதுவிடம் கம்ப்ளைன்ட் பண்ணுகிறார். சேதுவும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப் பின் செங்கல் சூலையில் வேலை செய்ததால் போஸுக்கு உடம்பு முடியாமல் போகிறது. அதை பார்த்து தாமரை, சாவித்திரி இருவருமே சிரித்து கொண்டு கிண்டல் கேலி செய்கிறார்கள். ஈஸ்வரியால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். அதற்குப்பின் தமிழ் வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்து விடுகிறது. சேதுவின் மீது பாம்பு ஏறி விடுகிறது. ஆனால், சேது எதுவும் தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே பதருகிறார்கள். பின் சேது கண்விழித்து பாம்பை பார்த்து கத்துகிறார். தமிழ் சாமர்த்தியமாக பாம்பை பிடித்து வெளியே போட்டு விடுகிறார். பின் எல்லோரும் தமிழ் செல்வியை பாராட்டுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full