ஹாஸ்பிடலில் சீரிசான நிலைமையில் இருக்கும் தமிழ், வேதனையில் புலம்பிய சேது - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ், உங்களுடைய துணி எல்லாம் அயன் பண்ணி வைத்துவிட்டேன். நீங்கள் தான் எனக்கு பணம் தரணும் என்றார். இன்னொரு பக்கம் பிக்னிக் போன கண்மணி, அவருடைய கணவரும் வந்துவிடுகிறார்கள். வீட்டில் எல்லோருமே சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தார்கள். பின் சேது, தமிழுக்காக பொருட்கள் வாங்கி வைத்திருக்கும் விஷயத்தை அறிந்த அப்பத்தா ரொம்ப சந்தோஷப்பட்டார். அதை பற்றி சேதுவிடம் கேட்டார். ஆனால், சேது எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
நேற்று எபிசோட்டில் தாமரையின் அம்மா ஆறுமுகத்தை வீடு துடைக்க சொல்லி வேலைக்காரன் ஆக நடத்தினார். இதையெல்லாம் பார்த்த கண்மணி, தாமரையின் அம்மாவை திட்டி விட்டு ஆறுமுகத்தை அங்கு இருந்து அழைத்துச் சொன்னார். அதற்கு பின் தாமரை, அவர் அம்மா இருவருமே சேர்ந்து தமிழ் வரும் வழியில் எண்ணெயை ஊற்றி அவர் கீழே விழும் மாறு வேலை செய்தார்கள். ஆனால், தமிழ் அதிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.
சின்ன மருமகள் சீரியல்:
இன்னொரு பக்கம் ஈஸ்வரி தன்னுடைய மகளுடன் சேர்ந்து தமிழ் வரும் வழியில் ஒரு பள்ளம் தோண்டி அது மேல் அவர் கால் வைத்து கீழே விழுந்து கர்ப்பம் கலையுமாறு ஏற்பாடு செய்தார். ஆனால், அதிலிருந்தும் தமிழ் தப்பித்து விட்டார். பின் வீட்டில் நடந்து வரும் போது தெரியாமல் தமிழ் ஸ்லிப் ஆகி விழுந்து விட்டார். உடனே வழி தாங்க முடியாமல் தமிழ் கத்திக் கொண்டிருந்தார். இதை பார்த்த சேது பதறி போய் தமிழை ஹாஸ்பிடலுக்கு அழைத்துக் கொண்டு சொன்னார். இதையெல்லாம் பார்த்த ஈஸ்வரி, தாமரை அம்மா எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேது, தமிழை ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டார். அப்போது செக் பண்ண டாக்டர், கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இப்படியெல்லாம் செய்வதா? எதுவாக இருந்தாலும் ஸ்கேன் செய்து விட்டு தான் சொல்லுவோம். கீழே விழுந்ததில் கரு கலைந்து இருக்கிறதா? என்று தெரியவில்லை என்று சொல்வதால் சேது ரொம்பவே பயப்படுகிறார். பின் தகவல் அறிந்து சேது வீட்டில் உள்ள எல்லோருமே ஹாஸ்பிடலுக்கு வந்து விடுகிறார்கள். தமிழின் அப்பா, அம்மாவும் வந்து ரொம்பவே பதறுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
பின் சேது, கடவுளிடம் தமிழுக்காக வேண்டுகிறார். அதற்குப்பின் தமிழை ஸ்கேன் செய்த பிறகு டாக்டர், குழந்தைக்கு எந்த பிரச்சினை இல்லை. தமிழ் நன்றாக இருக்கிறார். ஆனால், அவருடைய காலில் அடிபட்டு இருக்கிறது. அதனால் கொஞ்ச நாட்கள் ரெஸ்ட் எடுக்கணும் என்று சொல்கிறார். இதை கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.