கோலாகலமாக நடக்கும் சேது-தமிழ்செல்வியின் இரண்டாவது திருமண நாள் - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, எப்படியாவது காவியாமிடம் இருந்து பணத்தை எல்லாம் வாங்க வேண்டும். அதற்காக பொறுத்துக் கொண்டு இரு என்றார். இதனால் போஸ் கோபத்தை குறைத்துக் கொண்டார். பின் காவியாவிடம் சென்று போஸ் மன்னிப்பு கேட்டார். ஆனால், காவியா நம்பவில்லை. இருந்தாலும் போசை திட்டி விட்டு வேலைக்கு கிளம்ப சொன்னார். இன்னொரு பக்கம் கருப்பன்- சேது இருவரும் ஊரில் 10 ஜோடிகளுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொண்டிருந்தார்கள். பின் சேது, தன்னுடைய மாமனார் மாமியாருக்கு போன் செய்து திருமண நாளை கொண்டாடும் விஷயத்தைப் பற்றி சொன்னார்.
இன்னொரு பக்கம் தாமரை- சாவித்திரி இருவரும் திருமணம் செய்து வைக்கும் ஜோடிகளுக்கு கொடுக்கும் சீர்வரிசை எல்லாம் பற்றி புலம்பி கொண்டிருந்தார்கள். அப்போது சாவித்திரி, நம்முடைய பக்கம் இரண்டு ஜோடிகளை தயார் செய்து அந்த பணத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் திட்டம் போட்டார்கள். இதை காவியா கேட்டு விட்டார். இன்னொரு பக்கம் சேது, திருமண நாளிற்க்காக தமிழுக்கு பரிசு கொடுப்பதற்காக ரூமில் காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து தமிழ்ச்செல்வி, உள்ளே வந்து விட்டார். பின் சேது, புது புடவை ஒன்று வாங்கி கொடுத்தார். அதை பார்த்து தமிழ்ச்செல்வி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்.
சின்ன மருமகள்:
இன்றைய எபிசோட்டில் சேது, புடவை நகை வளையல் என எல்லாமே திருமண நாளுக்காக வாங்கி தருகிறார். தமிழ்செல்வி எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொள்கிறார். இதனால் சேதுவிற்கு ஒரே சந்தோசம். இன்னொரு பக்கம் போஸ், செங்கல் சூளைக்கு சென்று அங்கிருக்கும் ஒரு நபரை பணம் கொடுத்து கரெக்ட் பண்ணி கொள்கிறார். பின் சேது, நான் வேலை செய்ய மாட்டேன். எம்எல்ஏ வரும்போது மட்டும் எனக்கு சிக்னல் கொடு என்று சொல்வதால் அந்த நபருமே ஒத்துக்கொள்கிறார். பின் போஸ் ஜாலியாக போன் பார்த்துக் கொண்டிருக்கிறார். எம்எல்ஏ வந்தவுடன் வேலை செய்வது போல நடித்து பாசாங்கு செய்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் மலர் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் போது காவியா காரை நிறுத்தி மலரிடம் பேசுகிறார். மலர்- காவியா இருவருமே ரொம்ப ஜாலியாக நண்பர்கள் போல பேசி கொள்கிறார்கள். பின் இருவரும் வீட்டிற்கு சேர்ந்து வருவதை பார்த்து தமிழுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்போது காவியா, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று சொல்வதால் தமிழ்ச்செல்வி ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் 12 மணி ஆவதால் சேது, தமிழ்செல்வியை எழுப்பி திருமண நாள் வாழ்த்துக்களை சொல்லி கேக் வெட்ட அழைக்கிறார். வீட்டில் எல்லோருமே தமிழ் செல்வி-சேது திருமண நாளை கொண்டாடுகிறார்கள். வழக்கம் போல ஈஸ்வரி- சாவித்திரி இருவரும் பயங்கர கடுப்பில் இருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=xK_HjbYVxks
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் சேது- தமிழ் இரண்டாவது திருமண நாளை ஒட்டி ராஜாங்கம் வீட்டில் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். ஊரில் 10 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி சீர்வரிசை எல்லாம் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். திருமணத்தின் போது தமிழ்-சேது இருவரும் வாக்குறுதி எடுத்து அந்த ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.